சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... சீன பட்டாசு அரசியல்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

சட்டமும் சந்தேகங்களும் பகுதியில்... சீன பட்டாசு அரசியல்

Updated : அக் 30, 2016 | Added : அக் 30, 2016 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 சீன பட்டாசு அரசியல்

தீபாவளி வாழ்த்துகள்.தீபாவளியை ஒட்டி, வெவ்வேறு வகையான பட்டாசுகள் இந்தியாவில் உற்பத்தி ஆவதைப் போலவே வெளிநாடுகளிலும் உற்பத்தியாகிறது. தீபாவளி சமயங்களில் அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கவும் படுகின்றன.இதே போல, அனைத்து நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் கொண்டாட்ட தினங்களின் போது, அந்தக் கொண்டாட்டத்திற்குத் தேவையான பொருட்கள் பல நாடுகளில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துணிப் பொருட்களில் இருந்து, சீஸ் மாதிரியான உணவுப் பொருட்கள் வரை அவை அடங்கும்.


அரசியல் காரணங்களுக்காக அறிவிக்கலாமா?

சரி. இந்நிலையில், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அந்த நாட்டோடு வர்த்தக உறவு இல்லை. இனி அந்த நாட்டுப் பொருட்களை தன் நாட்டிற்குள் இறக்குமதியும் செய்யப்பட மாட்டாது, மக்களும் அந்நாட்டுப் பொருட்களை வாங்க மாட்டார்கள் என திடீரென்று அறிவிக்க இயலுமா?நாடுகளிடையே ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் Most Favoured Nations அந்தஸ்தை அப்படி ஒரு அறிக்கையின் மூலம், அரசியல் காரணங்களால் மறுதலிக்க முடியுமா? சமீபத்தில் பல இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பட்டாசுகளை வாங்க வேண்டாம் எனவும், அதே போல, இந்தியா இதுவரை பாகிஸ்தானுக்கு அளித்து வந்த Most Favoured Nations அந்தஸ்தை மறுக்கப்போவதாகவும், ஆலோசனைகளும், தகவல்களும் வந்த வண்ணம் இருந்தன.உண்மையில் அதன் அரசியல் பின்னணி தான் என்ன?


வரலாறு கூறுவதென்ன?

கொஞ்சம் வரலாற்றைத் தொட்டுச் செல்வோம்.முதலாம், இரண்டாம் உலகப்போர் நடந்த சமயங்களிலும், அதன் பின்னிட்டும், உலக நாடுகள் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு நின்றன. ஒன்றோடு ஒன்று வர்த்தக உறவு கொள்வதில்லை என திரும்பிக் கொண்டு நின்றன. இதனால் வணிகம் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு நாடுகளும், அதன் மக்களும் சிக்கிக் கொண்டனர். நாடுகளிடையே பொருளாதார சீர்குலைவு மேலோங்கியது.இதை இப்படிச் சொல்ல்லாம்…நான் துணி தயாரிக்கிறேன். அவன் உணவு தயாரிக்கிறான். மூன்றாமவன் மருத்துவ சேவை செய்கிறான். நான் அவனோடு பேச மாட்டேன். மூன்றாமவன் என்னோடு பேச மாட்டான். இந்நிலையில், மூவரின் உற்பத்தி, மற்றும் சேவைகளால் பயன் தான் என்ன?இதைப் போலவே, ஒவ்வொரு நாடும், போர் சமயத்திலும், அதன் பின்னும் செயல்பட்டன. இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காக, வியாபாரம் நசிந்து போகும் சூழல். இந்தச் சூழலால், மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் காரணம் சொல்லி இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் நியுஹாம்ஷயரில் Bretton Woods எனும் இடத்தில், 730 பிரதிநிதிகளுடன் நடந்த மாநாட்டில், அனைத்து நாடுகளின் பொருளாதார மேலாண்மைக்கும், மேம்பாட்டிற்கும், அமெரிக்க,கனடா, மேலை ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளின் வணிக மற்றும் நிதி தொடர்புகளை சீர் படுத்தவும் உலகளாவிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவாகியது.


உலகளாவிய வர்த்தகம்:

இந்த Bretton Woods System ன் நோக்கம், ஒவ்வொரு நாடும் தமது நாணய மாற்று வீதத்தைக் கண்காணிக்கும் விதமாக தமக்கென ஒரு தனி பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்ய அவை தம் நாட்டின் பணமதிப்பை தங்கத்துடன் ஒப்பிடத்தக்கதாக அமைக்க வேண்டும் என்பதே ஆகும். அதாவது நாடுகளின் பண மதிப்பு தங்க மதிப்பாக கணக்கில் வைக்கப்படும். (ஆனால் 1971-ல் அமெரிக்கா இந்த முறையில் இருந்து வெளியேறிவிட்டது)இதை ஒட்டி எழுந்த அமைப்புகளே IMF எனப்படும் International Monitory Fund, International Bank for Reconstruction and Development (IBRD) (இப்போது உலக வங்கியின் பகுதி), World Bank போன்றவை.இதன் பின்னிட்டு, எழுந்த்தே GATT ஒப்பந்தம். இது, நாடுகளுக்கிடையேயான வணிகத்தை நிர்வகிக்க எழுந்த ஒரு அமைப்பு. முன்னர் சொன்னவை உலக அளவில் Funding, மற்றும் வங்கி சேவையைச் செய்பவை. காட் ஒப்பந்தம் என்பது வணிக ஒப்பந்தம். இது உலக அளவில் நாடுகளுக்கிடையேயான வணிகத்தை, அதன் மேலாண்மையை கவனிக்கும் ஒரு அமைப்பு. இருபத்து மூன்று நாடுகள் கையெத்திட்டு, 1947ல் உருவாகி 1948 முதல் அமலுக்கு வந்த இந்த பல தரப்பு (Multilateral) ஒப்பந்தம், அதன் பின், WTO எனும் பெயரில், 1994ல் 123 நாடுகளின் ஒப்புகையோடு, 1995 லிருந்து செயல்பட ஆரம்பித்த்து. இதற்கு மாரகேஷ் ஒப்பந்தம் என்றும் பெயர். (WTO விற்கும் முன் ITO (International Trade Organization) எனும் UN - ன் அமைப்பு உருவானது. ஆனால் அதை அமெரிக்கா ஏற்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.)


தடைக்கு தடை

இந்த அமைப்பின் படி, இதன் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாடும், தமது அரசியல் காரணங்களுக்காக, உறுப்பினராக உள்ள இன்னொரு நாட்டின் பொருளாதாரத்தை, வணிகத்தை பாதிக்கும் வண்ணம் செயல்படக்கூடாது. இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள காரணம் ஏதும் இன்றி திடீரென பொருளாதாரத் தடையோ, வணிக நிர்பந்தமோ செய்யக்கூடாது.அப்படிச் செய்வதால், அந்த நாட்டு வணிகம் பாதிக்கப்படுவதோடு, அதன் மக்களும் பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்படுவர் எனச் சொல்லப்பட்ட்து.இந்த ஒப்பந்தங்களில் இந்தியாவும் கையெழுத்திட்டதால், அரசியல் காரணங்களுக்காக, எதிரி நாட்டு பொருட்களை பகிஷ்கரிப்போம் என இப்போது சொல்ல இயலாது.எளிய மொழியில் சொல்வதென்றால், அண்டை நாட்டுடன் 'இன்ன பொருட்களை நான் உனக்கு ஏற்றுமதி செய்கிறேன். நீ எனக்குத் தேவையான இன்ன பொருட்களை எனக்கு ஏற்றுமதி செய்” என ஏற்கனவே செய்த ஒப்பந்த்த்திபடி, வணிகம் நடந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் வந்த “அந்நாட்டு பொருட்களை வாங்காதீர்கள்” போன்ற பிரசாரங்களின் படி, நம் மக்கள் அப்பொருட்களை வாங்குவதை பகிஷ்கரித்தால், அது அந்த நாட்டுக்கு பாதகமாக அமையாது. அல்லாமல் இந்தியாவிற்கே பாதகமாக முடியலாம். ஏனெனில், ஏற்கனவே நாம் வாங்குவதாக ஒப்புக் கொண்ட பொருட்கள் அவை. அவற்றை வாங்காமல் தவிர்ப்பதால், அவை தேக்கம் அடையுமே தவிர. அந்நிய நாட்டிற்கு பாதகம் ஒன்றுமில்லை. அப்படி பகிஷ்கரிப்பதை, நமது நாட்டுப்பற்றைக் காட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவது சரியான முகம் இல்லை.இதே நிலைதான், ஒரு நாடு அண்டை நாடுகளுக்கு அளித்த, MFN (Most Favoured Nations) அந்தஸ்தும்.


எப்போது தடை விதிக்கலாம்

ஆனால், அதே சமயத்தில் அதே WTO ஒப்பந்தத்தில் ஆர்டிகில் 21 - ல் ”செக்யுரிட்டி எக்ஸப்ஷன்” எனும் பகுதியில், இந்த ஒப்பந்தத்தின் படி கையெழுத்திட்ட நாடுகளில் ஒரு நாடு, மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு, உள்நாட்டு கலவரமோ, போரோ, பொருளாதார சீர்குலைவோ ஏற்படுத்த முனையுமாயின், அப்படியான சந்தர்ப்பங்களில், ஒரு நாடு, கையெழுத்திட்டிருந்தாலும் கூட மற்றொரு நாட்டு பொருட்களுக்கு தடை கூறலாம்.இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் அண்டை நாடுகளுடன் அதன் உறவு அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்றும், அந்த நிலை இன்னும் வரவில்லை என்றும் கூட சொல்லலாம்.மேற்சொன்ன கருத்துகளுக்கு மாற்றாக இன்னொரு கருத்தையும் முன் வைக்கலாம்.இந்த வணிக ஒப்பந்த முறை ஓரளவுக்கு வெளிநாடு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதால், உள்நாட்டு உற்பத்தி தளரும் எனவும் சொல்லலாம். இந்த ஒப்பந்தங்களினால், எதிரி நாடுகளுக்கு வணிகத் தடை சொல்ல முடியாத காரணத்தாலும், WTO தோன்றிய சமயத்தில் பெரிதும் எதிர்ப்புக்குள்ளானது.


உறவைத்துண்டிக்காமல் தடை கூடாது

அண்டை நாட்டுடன் நமது MFN உறவைத் துண்டித்துக் கொள்ளாமல், ஆனால் அதே சமயம் அந்த நாட்டில் இருந்து வரும் பொருட்களை வாங்க மாட்டோம் எனச் சொன்னால், அது நமது நாட்டிற்கே கேடாக முடியும்.அண்டை நாட்டின் தீவிரவாத்த் தொல்லையை கட்டுக்குள் கொண்டுவர, அதன் வணிக உறவுகளை நிறுத்தாமல், பகை நாடு எனத் தீர்மானித்து, தூதரக உறவை ரத்து செய்யலாம். இரு நாடுகளுக்கிடையேயான, தகவல் தொடர்புகளை துண்டிப்பது, இறக்குமதி பொருட்களின் மீதான சோதனைகளை கூட்டுவது, தர நிர்ணயத்தில் திடமாக இருப்பது, என இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டே தமது எதிர்ப்பைக் காட்டலாம்.ஆக, அந்நிய நாட்டுப் பொருட்களை வாங்க வேண்டாம் என மக்களிடம் பிரசாரம் செய்வதை விட, ஒரு நாடு, பகை நாடா என இறுதியாக டிக்ளேர் செய்வதன் மூலமோ, அல்லது மேற்சொன்ன நடவடிக்கைகளின் மூலமோ கூட, இந்த ஒப்பந்தத்திற்குள் இருந்தபடியே, நம் எதிர்ப்பைக் காட்டலாம். அதுவே சரியான வழியும் கூட..*என்ன பட்டாசு வாங்கப் போகிறீர்கள்?
-ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)9994949195legally.hansa68@gmail.com

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
30-அக்-201616:53:10 IST Report Abuse
Darmavan இவர்களை போன்றவர்கள் நம் நாட்டு துரோகிகள் என்று என் மனம் சொல்லுகிறது.நம் எதிரி இந்தமாதிரி நியாயங்களை பார்ப்பதில்லை .
Rate this:
Share this comment
Cancel
Rajesh Narayanan - Chennai,இந்தியா
30-அக்-201614:19:43 IST Report Abuse
Rajesh Narayanan சரிதான், சீன பட்டாசு வாங்கவில்லை.........ஆனால் நம்ம ஊர் பட்டாசு விலை ரொம்ப அதிகமாக இருக்குதே.....அது எப்படி.......இங்கே பக்கத்துல இருக்கும் சிவகாசி பட்டாசு சீன பட்டாசை விட 3 மடங்கு விலை கூடுதல்.........எல்லோருக்கும் ஆசைதான் சிவகாசி பட்டாசு வாங்க..........ஆனால் விலை?????
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:32:11 IST Report Abuse
Hansa Hansaஉண்மையில் எம் ஆர் பி விலை என்பது தயாரிப்பாளர் நிர்ணயிப்பது. பட்டாசு பாதுகாப்பும். அதை வேறு இடங்களுக்கு மாற்றுவதும் செலவு பிடிக்கும் விசயங்கள் என்பதால் இந்த அதீத விலை. ஆனால் உள்ளூரில் (இந்தச் செலவு அதிகம் இல்லாத) குறைந்த விலையே....
Rate this:
Share this comment
Cancel
Himmath Hussain - Male,மாலத்தீவு
30-அக்-201614:08:42 IST Report Abuse
Himmath Hussain இந்திய பொருளாதாரம் நிலைநிற்க வேண்டுமானால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை வெகுவாக குறைக்க வேண்டும், இதை எப்படி குறைக்க வேண்டுமென்றால் இரண்டு முறைகள்தான் இருக்கிறது 1. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 1000% Duty (ஆயிரம் சதவீதம்) இறக்குமதி வரி விதிக்க வேண்டும், 2. வரி விதிப்பை கண்காணிப்பதற்கு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதுதான் ஒரேவழி
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:38:38 IST Report Abuse
Hansa Hansaவெரி வேலிட் பாயிண்ட். நன்றி....
Rate this:
Share this comment
Cancel
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-அக்-201613:13:53 IST Report Abuse
Muthu நீங்கள் என் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கு இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள்??????? நீங்கள் தான் எதோ சட்ட மேதை எனவும், மற்றவர்கள் எல்லாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்றும் கருத்து எழுதி உள்ளீர்கள்......
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:37:31 IST Report Abuse
Hansa Hansaசீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் ஏன் பரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன். சட்டப்படியே அவர்கள் பொருட்களைத் தடை செய்ய வழி இருக்கையில், பின் வழியை ஏன் பின்பற்ற் வேண்டும் நாம்? என்கிறேன். சரிதானே?...
Rate this:
Share this comment
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201613:05:41 IST Report Abuse
Muthuபின்பு எதற்காக அரசியல் காரணங்களுக்காக அறிவிக்க இயலுமா என்று வினா எழுப்பி உள்ளீர்கள்?????...
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
30-அக்-201613:10:54 IST Report Abuse
Ram மிக தெளிவாகவும், அனைவருக்கும் எளிதாக புரியும்படியும் கூறி இருக்கிறீர்கள். இது புரியாமல் சமூக வலைதளங்களை பயன் படுத்துவோர் தவறுதலாக "ஷேர்" செய்து மற்றவர்களையும் தவறு செய்ய வைக்கிறார்கள். மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:39:18 IST Report Abuse
Hansa Hansaநன்றி ராம்....
Rate this:
Share this comment
Cancel
நாட்டுபற்று - Chennai,இந்தியா
30-அக்-201611:21:34 IST Report Abuse
நாட்டுபற்று சமீபத்தில் வந்த “அந்நாட்டு பொருட்களை வாங்காதீர்கள்” போன்ற பிரசாரங்களின் படி, நம் மக்கள் அப்பொருட்களை வாங்குவதை பகிஷ்கரித்தால், அது அந்த நாட்டுக்கு பாதகமாக அமையாது. அல்லாமல் இந்தியாவிற்கே பாதகமாக முடியலாம். ஏனெனில், ஏற்கனவே நாம் வாங்குவதாக ஒப்புக் கொண்ட பொருட்கள் அவை. அவற்றை வாங்காமல் தவிர்ப்பதால், அவை தேக்கம் அடையுமே தவிர. அந்நிய நாட்டிற்கு பாதகம் ஒன்றுமில்லை. தவறான கருத்து. அரசு பொருட்களை வாங்க வில்லை. அரசு வணிக ரீதியில் ஒப்பந்தங்களை மட்டுமே போடுகிறது. ஒப்பந்தத்தின் சாரமானது, 'என் நாட்டு வணிகர்கள் உன் நாட்டொடு வணிகம் செய்வார்கள்' என்று தான் இருக்குமே தவிர "அரசு பிற நாட்டு பொருட்களை வாங்கி தன் நாட்டு வணிகர்களுக்கு விற்காது" இதனால் பொருட்க்கள் தேக்கம் அடையாது. பொருள் விற்பனை ஆகாமல் இருந்தால் வணிகர்கள் அதை வாங்க போவது இல்லை. எனது புரிதலில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
Rate this:
Share this comment
Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
30-அக்-201614:01:33 IST Report Abuse
Selvaraaj Prabuஉண்மை. ஒரு வழக்கறிஞர் ஆக இருப்பவர் இது புரியாமல் பேசியிருக்கிறாரே என்றுதான் தோன்றுகிறது. அரசு ஒன்றும் "சீன பட்டாசுகளை வாங்காதீர்கள்" என்று சொல்ல வில்லை. எதை வாங்க வேண்டும், வாங்க வேண்டாம் என்று முடிவு செய்ய நுகர்வோருக்கு உரிமை உண்டு. அதை அரசு கூட கட்டுப்படுத்த முடியாது - கூடாது....
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:35:41 IST Report Abuse
Hansa Hansaஅரசு சொன்னதாகச் சொல்லப்படவில்லை. அப்படியான பிரசாரம் சமூக தளங்களில் செய்யப்படுவது மட்டுமே சுட்டப்பட்டிருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Tamil - Doha,கத்தார்
30-அக்-201610:55:34 IST Report Abuse
Tamil நமது நாட்டில் பட்டாசு தயாரிக்கும் பொழுது சீன பட்டாசு விற்க அங்கீகாரம் கொடுத்தாது மிகவும் தவறு.இது என் பிள்ளை களுக்கு நானே மண் சோறு கொடுப்பது போல ஆகும்.
Rate this:
Share this comment
Hansa Hansa - Chennai,இந்தியா
30-அக்-201621:40:32 IST Report Abuse
Hansa Hansaஆம். தமிழ். (தோஹா.கத்தார்) சீன பட்டாசுக்கு அங்கிகாரத்திற்கும் முன்பாக, நாம் அந்த பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதே பேசு பொருள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை