புவி காந்தப்புலத்தில் பிளவு: ஊட்டி கதிர் வீச்சு ஆராய்ச்சியில் உறுதி| Dinamalar

தமிழ்நாடு

புவி காந்தப்புலத்தில் பிளவு: ஊட்டி கதிர் வீச்சு ஆராய்ச்சியில் உறுதி

Added : நவ 05, 2016
Advertisement

ஊட்டி:'கடந்தாண்டு புவி காந்தப்புலத்தில் பிளவு ஏற்பட்டது' என்ற, ஊட்டி காஸ்மிக் கதிர் ஆராய்ச்சி மையத்தின் முடிவு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மையம்:நீலகிரி மாவட்டம் ஊட்டி, முத்தோரையில் பாபா காஸ்மிக் கதிர் ஆய்வகம் அமைந்துள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த ஆய்வகத்தில், சூரியனில் இருந்து வெளியேறும் காஸ்மிக் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சி, மேற்கொள்ளப்படுகிறது.இதற்கென, இம்மையத்தில், 3,712 'பிளாஸ்டிக் இன்டலேட்டர் டெலஸ்கோப்'கள் பொருத்தப்பட்டுள்ளன. 'மியான் டிடெக்டர்' என்ற உபகரணம் மூலம், கதிர் வீச்சு தொடர்பான விபரங்கள் துல்லியமாக சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படு கின்றன.என்ன நடந்தது?கடந்தாண்டு, ஜூன், 23ம் தேதி, காலை, கதிர் வீச்சு தொடர்பான பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அசாதாரண பதிவுகள் தென்பட்டன.
சூரியனில் இருந்து, 2 முதல் 3 நானோ டெஸ்லா (கதிர் வீச்சு அளவீடு) வெளியேற வேண்டிய கதிர் வீச்சு, 40 நானோ டெஸ்லா அளவுக்கு வெளியேறி இருப்பது தெரிய வந்தது; இது, சூரியனில் இருந்து வெளியேறும் காஸ்மிக் கதிர் வீச்சின் மொத்த அளவில், 2 சதவீதம் என, கணக்கிடப்பட்டது.ஆய்வின் முடிவில், கடந்தாண்டு, ஜூன், 22ம்தேதி, நள்ளிரவு காந்தப்புலத்தில் ஏற்பட்ட விரிசல்,இரண்டு மணி நேரம் நீடித்துள்ளது தெரியவந்தது.இதுவே, கதிர் வீச்சின் அளவு அதிகரித்தமைக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. இந்த ஆய்வு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, 'பிசிக்கல் ரெவ்யூ லெட்டர்' என்ற ஆராய்ச்சி இதழில் வெளியாகி உள்ளது.ஆய்வின் சிறப்பு என்ன?பாபா காஸ்மிக் கதிர் ஆய்வக தலைவர் டாக்டர் குப்தா கூறியதாவது:கடந்தாண்டு, ஜூன், 22ம் தேதி, நள்ளிரவில் சூரியனைச் சுற்றி நிகழ்ந்த மாற்றத்தை மிக துல்லியமாக, ஊட்டி ஆய்வு மையத்தில் உள்ள 'பிளாஸ்டிக் இன்டலேட்டர் டெலஸ்கோப்' படம் பிடித்துள்ளது.
அறிவியல் ஆராய்ச்சியில், இது மிக அரிய நிகழ்வு. உலகில், எத்தனையோ ஆய்வு மையங் கள் இருப்பினும், ஊட்டி மையத்தில் நிகழ்ந்த இந்த பதிவு, பெருமைக் குரியது.அன்றைய தினம், காந்தப்புலத்தில் ஏற்பட்டவிரிசல் மிகச் சிறிய அளவு தான்; அதற்கும், காலநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் போன்ற நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை.அந்நிகழ்வு நடந்த இரண்டு மணி நேரத்துக்கு, தொலை தொடர்புக்கு உதவும் 'சிக்னல்கள்' பாதிக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய நிகழ்வு, ஏன் நடந்தது என்பதை சொல்வதிற்கில்லை; அதற்கான, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.என்ன நடக்கும்?கடந்த, 1859ல், இத்தகைய காந்தப்புலத்தில் ஏற்பட்ட விரிசலால் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது. அந்த சமயத்தில், பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அக்கால கட்டத்தில் கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகள் இல்லாததால், அதுகுறித்த விபரம் தெரிய வில்லை.
காஸ்மிக் கதிர் வீச்சின் அளவு அதிகரிக்கும் போது, பூமியில் தானாகவே, மின்னாற்றல் அதிகரிக்கும்; அதன் மூலம், செயற்கைக்கோள், தொலை தொடர்பு சிக்னல்கள் என, எலக்ட்ரானிக் சார்ந்த சாதனங்கள் வெடித்து சிதறும்.எனவே, கதிர் வீச்சு தொடர்பான ஆய்வுகளை அரசு ஊக்குவித்தால், வரும் நாட்களில் நிகழக் கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே தெரிந்து, முன்னெச்சரிக்கை ஏற்பாடு களை செய்து கொள்ள முடியும்.இவ்வாறு, டாக்டர் குப்தா கூறினார்.ஆய்வக விஞ்ஞானி அதுல் ஜெயின், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் ஆகியோர் கூறுகையில், 'மியான் டிடெக்டர்' என்ற உபகரணம் மூலம் கதிர் வீச்சை கணக்கிடும் முறையை விளக்கினர்.அவர்கள் கூறுகையில், “இந்திய அளவில், ஊட்டியில் மட்டுமே காஸ்மிக் கதிர் வீச்சை மிகத் துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பம் உள்ளது,” என்றனர்.

எங்கெல்லாம் பாதிப்பு?
சூரியனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மற்றும் துகள் களை, பூமியைச் சுற்றி அமைந்துள்ள காந்தப்புலம் தடுக்கிறது.இந்த காந்தப்புலத் தில் ஏற்பட்ட விரிசல், அதனால் பூமியில் அதிகரித்த கதிர்வீச்சு ஆகியவற்றைத்தான் ஊட்டி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.காஸ்மிக் கதிர் வீச்சுஅதிகளவில் வெளியே றும் போது, வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளான சுவீ டன், நார்வே போன்ற உயரமான பகுதிகளில் உள்ள நாடுகளில், எலக்ட்ரானிக் சார்ந்த தகவல் தொழில் நுட் பம் பாதிக்கும் என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X