500, 1000 நோட்டுக்கள் வாபஸ்: உண்மை நிலை என்ன?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

500, 1000 நோட்டுக்கள் வாபஸ்: உண்மை நிலை என்ன?

Updated : நவ 10, 2016 | Added : நவ 09, 2016 | கருத்துகள் (75)
Advertisement
500, 1000 நோட்டுக்கள் வாபஸ், உண்மை நிலை என்ன?

புதுடில்லி: நாம் ஏன் அரசை குறை சொல்கிறோம். இது உண்மையிலே 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று செய்தி பரப்பிய தொலைக்காட்சிகளின் தவறு. அரசாங்கம் நாளை முதல் 500, 1000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என்று சொல்லவில்லை. அந்த நோட்டுகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடான தொகையை தருவதாகத்தான் சொல்லி இருக்கிறது.

நாம் கவனிக்க வேண்டியவை :
1. இன்று புழக்கத்தில் இருக்கும் 10,000 நோட்டுகளில் 40 நோட்டுகள் கள்ள நோட்டுகள். இனி இந்த நோட்டுகள் பயனற்றதாகி விடமுடியும்.
2. இரண்டரைஆண்டுகளாக கள்ள நோட்டுகளை ஒழிக்க என்ன செய்தது அரசு என்று கேட்டோம். கள்ள நோட்டுகளை ஒழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதை செய்ய மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. கள்ள நோட்டுகள் பொதுவாகவே 500, 1000 ஆகத் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றை புழக்கத்தில் கொண்டு வர முடியும் (100, 2000 நோட்டுகளாக ). நாட்டின், நாட்டு மக்களின் நன்மைக்காக மிகப் பெரிய இந்த முடிவை கொஞ்சம் சிரமேற்கொண்டு ஏற்று தான் ஆகவேண்டும்.
3. இந்த முடிவால் தற்போது சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளவர்கள், திருமணம் போன்ற விசேஷங்கள் வைத்திருப்பவர்கள், இன்று கையில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் வைத்திருப்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை விடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாக இருப்பது, லட்சங்கள் கோடிகள் என கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான். ஏனெனில். 11-11-2016 முதல் வங்கியில் ரொக்க பரிமாற்ற அளவு ஒரு நாளைக்கு 10000ம் தான். வாரத்திற்கு 20000ம் தான். ஏடிஎம் ரொக்க பரிமாற்றம் ஒரு நாளைக்கு 2000ம் தான். ஆகவே இன்னும் இருக்கும் 50 நாட்களுக்குள் 4 முதல் 5 லட்சத்துக்கு மேல் கருப்பு பணத்தை சட்டத்திற்குட்பட்ட முறையில் மாற்றி, வெள்ளையாக்க இயலாது. கண்டிப்பாக ஆதார் அல்லது பான் எண் மூலம் மீதி பணத்தை வங்கிகளில் கட்டி ஆகவேண்டும். எனவே பெரிய கவலை, பெரிய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான்.
4. மேலும் சாமானியன் இந்த சூழ்நிலைகளை எதிர் கொள்ளத்தான். ஜன் தன் யோஜனா போன்ற வங்கி பரிவர்த்தனை தொடர்பான திட்டங்களை முதலில் அரசு ஊக்குவித்தது.
5. மேலும் இன்னும் வங்கிக் கணக்கு இல்லாத சாமானியர்கள் வங்கிக் கணக்கு துவக்க இது ஒரு வாய்ப்பாகிறது.
6. ஏன் இந்த கணக்கில் வராத பணத்தை நாமாகவே தெரிவிக்க, தனிச்சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 30 வரை காலக்கெடு கொடுத்திருந்தது அரசு. நியாயமாக வழங்க வேண்டிய அத்தனை வாய்ப்பையும் வழங்கிவிட்டு தான் இப்பொது இதை செய்கிறது அரசு. எல்லாமே முன்னரே பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது சில ஆண்டுகளாக. இது வெறும் சில நாள் கஷ்டம்.
7. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை நிலையாக்க, வளர்க்க இந்த சிரமத்தை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். ஏன் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வந்த போது 15, 20 நாட்கள் முதல் மாதக் கணக்கில் நாம் இதை தாங்கிக்கொண்டு மீண்டு வரவில்லையா. அது போல் நாம் ஒருவருக்குஒருவர் உதவிகொண்டு இந்த 2 நாட்களை கடக்க வேண்டியதுதான். நாட்டின் முன்னேற்றத்துக்காக இதை கூட தாங்கிக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்.
8. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மொத்தமே 9 கோடி வரை மட்டுமே வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. ஆனால், மோடியின் ஆட்சியில், ஜன் தன் திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளிலேயே 24 கோடி கணக்குகள் துவக்கப்பட்டன. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
8. கறுப்பு பணத்திற்கெதிராக நானும் போராடுகிறேன் களத்தில் இறங்கி என்று பெருமை கொள்வோம். பொறுத்துக்கொள்வோம். எல்லாம் கொஞ்ச காலம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
11-நவ-201612:12:28 IST Report Abuse
Rajasekar ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 ரூபாய் தான் மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது ஆனால் பலர் பல 2000 ரூபாய் நோட்டுகளுடன் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள். வங்கி காசாளரும் பல 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாக வாடிக்கையாளருக்கு தருகிறார் இதுபோல் நடந்தால் மக்கள் பட்ட கஷ்டம் வீணாகி விடும். இந்த திட்டத்தால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது எனவே வங்கி ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட உத்தரவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
10-நவ-201616:15:43 IST Report Abuse
Balaji இந்த கட்டுரையில் 3 வது பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல, அதிகம் பணம் பதுக்கியவர்களுக்கு தான் மிகுந்த சிரமம் என்பது சரிதான்.... ஆனால் தற்போது மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட 50 நாட்களில் 4 முதல் 5 லட்சத்துக்கு மிகாமல் வெள்ளையாக்கிக்கொள்ள முடியாது என்பது சரி..... ஆனால் கோடிகளில் வைத்திருப்பவர்களின் கருப்பு பணம் பிடிபடாமல் போகும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறதே...... அதாவது யாருக்கும் பயனில்லாமல் அவை வெளியில் வராமல் வைத்திருப்பவனுக்கும் இல்லாமல் அரசுக்கும் வராமல் போவதில் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை....... இதனால் எவ்வளவு கறுப்புப்பணம் கணக்கில் வராமலே செல்லாததாக மாறியது என்பது தெரியாமலே போய்விடும்..... பார்க்கலாம் இது முழுமையாக டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரியில் தான் இதன் தாக்கம் முழுவதும் தெரியவரும்.....
Rate this:
Share this comment
Cancel
Suba - Pondicherry,இந்தியா
10-நவ-201613:15:22 IST Report Abuse
Suba நாம் கவனிக்க வேண்டியவை : 1. இன்று புழக்கத்தில் இருக்கும் 10,000 நோட்டுகளில் 40 நோட்டுகள் கள்ள நோட்டுகள். இனி இந்த நோட்டுகள் பயனற்றதாகி விடமுடியும். 2. இரண்டரைஆண்டுகளாக கள்ள நோட்டுகளை ஒழிக்க என்ன செய்தது அரசு என்று கேட்டோம். கள்ள நோட்டுகளை ஒழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அதை செய்ய மக்களின் ஒத்துழைப்பு நிச்சயம் தேவை. கள்ள நோட்டுகள் பொதுவாகவே 500, 1000 ஆகத் தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றை புழக்கத்தில் கொண்டு வர முடியும் (100, 2000 நோட்டுகளாக ). நாட்டின், நாட்டு மக்களின் நன்மைக்காக மிகப் பெரிய இந்த முடிவை கொஞ்சம் சிரமேற்கொண்டு ஏற்று தான் ஆகவேண்டும். 3. இந்த முடிவால் தற்போது சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளவர்கள், திருமணம் போன்ற விசேஷங்கள் வைத்திருப்பவர்கள், இன்று கையில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் வைத்திருப்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை விடவும் மிகுந்த சிரமத்துக்குள்ளாக இருப்பது, லட்சங்கள் கோடிகள் என கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான். ஏனெனில். 11-11-2016 முதல் வங்கியில் ரொக்க பரிமாற்ற அளவு ஒரு நாளைக்கு 10000ம் தான். வாரத்திற்கு 20000ம் தான். ஏடிஎம் ரொக்க பரிமாற்றம் ஒரு நாளைக்கு 2000ம் தான். ஆகவே இன்னும் இருக்கும் 50 நாட்களுக்குள் 4 முதல் 5 லட்சத்துக்கு மேல் கருப்பு பணத்தை சட்டத்திற்குட்பட்ட முறையில் மாற்றி, வெள்ளையாக்க இயலாது. கண்டிப்பாக ஆதார் அல்லது பான் எண் மூலம் மீதி பணத்தை வங்கிகளில் கட்டி ஆகவேண்டும். எனவே பெரிய கவலை, பெரிய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான். 4. மேலும் சாமானியன் இந்த சூழ்நிலைகளை எதிர் கொள்ளத்தான். ஜன் தன் யோஜனா போன்ற வங்கி பரிவர்த்தனை தொடர்பான திட்டங்களை முதலில் அரசு ஊக்குவித்தது. 5. மேலும் இன்னும் வங்கிக் கணக்கு இல்லாத சாமானியர்கள் வங்கிக் கணக்கு துவக்க இது ஒரு வாய்ப்பாகிறது. 6. ஏன் இந்த கணக்கில் வராத பணத்தை நாமாகவே தெரிவிக்க, தனிச்சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 30 வரை காலக்கெடு கொடுத்திருந்தது அரசு. நியாயமாக வழங்க வேண்டிய அத்தனை வாய்ப்பையும் வழங்கிவிட்டு தான் இப்பொது இதை செய்கிறது அரசு. எல்லாமே முன்னரே பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது சில ஆண்டுகளாக. இது வெறும் சில நாள் கஷ்டம். 7. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை நிலையாக்க, வளர்க்க இந்த சிரமத்தை நாம் தாங்கி கொள்ளத்தான் வேண்டும். ஏன் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் வந்த போது 15, 20 நாட்கள் முதல் மாதக் கணக்கில் நாம் இதை தாங்கிக்கொண்டு மீண்டு வரவில்லையா. அது போல் நாம் ஒருவருக்குஒருவர் உதவிகொண்டு இந்த 2 நாட்களை கடக்க வேண்டியதுதான். நாட்டின் முன்னேற்றத்துக்காக இதை கூட தாங்கிக்கொள்ளவில்லை என்றால் அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும். 8. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மொத்தமே 9 கோடி வரை மட்டுமே வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. ஆனால், மோடியின் ஆட்சியில், ஜன் தன் திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளிலேயே 24 கோடி கணக்குகள் துவக்கப்பட்டன. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. 8. கறுப்பு பணத்திற்கெதிராக நானும் போராடுகிறேன் களத்தில் இறங்கி என்று பெருமை கொள்வோம். பொறுத்துக்கொள்வோம். எல்லாம் கொஞ்ச காலம்.
Rate this:
Share this comment
Cancel
Stephen Jawahar - Trivandrum,இந்தியா
10-நவ-201612:36:39 IST Report Abuse
Stephen Jawahar நம்ம கட்டு மரம் இத பத்தி ஒன்னும் பேசல... என்ன ஆச்சி தலைக்கு....
Rate this:
Share this comment
Cancel
Amanulla Arshad - Riyadh,சவுதி அரேபியா
10-நவ-201611:28:28 IST Report Abuse
Amanulla Arshad இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால் திட்டமிடுதலில் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கலாம். இதை நான் 2% என்று தான் சொல்லுவேன், உள்நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகள் கண்டிப்பாக பணத்தை தங்கமாகவோ, அமெரிக்க டாலர்களாகவோ அல்லது ஸ்டாக் மார்க்கெட்டில் தான் வைத்திருப்பார்கள். வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாகவோ அல்லது யூரோவாகவோ வைத்திருப்பார்கள். அதை கண்டு பிடித்து கொண்டு வர முற்சிக்கோணும். கடைசியாக இந்த திட்டமிடுதலில் கண்டிப்பாக அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு எந்த ஒரு செய்தியையும் கொடுக்க கூடாது. கண்டிப்பாக மத்திய மோடி அரசை பாராட்டியே ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
10-நவ-201610:51:51 IST Report Abuse
R Sanjay கருப்பு பணத்தை ஒழிக்க அரசாங்கம் முற்று புள்ளி(.) தான் வைக்கணும் ( 500, 1000 நோட்டு செல்லாது ) அதுக்கு பதிலா கமா(,) வச்சி இருக்காங்க ( புதிய 500/2000 நோட்டு மீண்டும் விடுவது ), இந்தியாவை பொறுத்த வரை ஒரு தவறுக்கு தண்டனை தான் கொடுக்குறாங்க, அந்த தவறு மறுபடியும் தலை தூக்க கூடாதுன்ற நோக்கம் துளியும் இல்லை. அதை சரி செய்ய சரியான வழி முறையும் இல்லை. புதிய 500 / 2000 நோட்ட விட்டா என்ன ஆகும்.. கருப்பு பணத்தை இழந்தவங்க மறுபடியும் இன்னும் அதிகமா ஆவேசமா கருப்பு பணத்தை சேர்த்து வைப்பாங்க. அதுத்த அஞ்சி பத்து வருடம் கழித்து மீண்டும் இதே கதை தான் தொடரும். 500 / 2000 பணத்துக்கு பதிலா அதிகபட்ச பணமா 100 ரூபாவை மட்டும் வச்சிட்டு, கீழ்த்தட்டு/பொது மக்களுக்கு டெபிட் கார்டு வழியாக பணப்பரிமாற்றம் கொடுக்கல்/வாங்கல் செய்யுறது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்( ஆனா காய்கரி விக்குறவங்க மீன் விக்குறவங்க கிட்ட எப்படி இந்த கார்டு பணவர்த்தனை பண்ண முடியும் நம்ம பொருளாதார வாழ்க்கை முறை அவ்வளவு உயர்ந்ததா இருக்கு/ மேலும் நம்ம மக்கள் அவ்வளவு அறிவானவங்களா? ன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது, ஆனா அதுக்கு ஆரம்பன்ற ஒரு முயற்சியை இப்ப எடுக்கலாமே எப்போ எடுக்க போறோம்?), இப்பத்துக்கி கள்ள நோட்டும் கருப்பு பணமும் ஒழிஞ்சிடலாம் ஆனா முற்று புள்ளி வைக்காத செயல் எதுவுமே முற்று பெறாத செயலாகவே இருக்கும், மீண்டும் கருப்பு பணபதுக்கள் தொடரும்/கள்ள நோட்டு புழக்கம் அதிகரிக்கும். இப்பத்திக்கு யாருகிட்ட நிறைய கருப்பு பணம் இருக்குன்னு இந்த அரசாங்கத்துக்கு தெரியும் அவங்கள நேரடியா போயி நாலு உதை உதைச்சி பணத்தை புடுங்க துப்பில்லாது அரசாங்கம் தான் இது. கல்வனையும்/சாமானிய மனிதனையும் சேர்த்து போட்டு தாக்கி இருக்காங்க (எப்படி மழை பெஞ்சாலும் வெயில் வாட்டி வதைத்தாலும் எல்லாருக்குமே கஷ்டமோ அதுபோல), முயற்சின்னு ஒன்னு எதுவுமே இல்லாததுக்கு இப்ப போட்டு இருக்குற இந்த ஒரு சிறு பொறி பரவால்ல தான் ஆனா கள்ள/கருப்பு பணத்தை ஒழிக்க இது தீர்வு ஆகாது
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
10-நவ-201610:13:41 IST Report Abuse
R chandar Government need not spend money for printing notes of Rs 500 and Rs 2000 now instead they can induce people to transact through debit and credit card,cheque,neft transaction by giving rebate in tax or waive tax for transaction upto Rs 5.00 lakhs through bank, that will encourage people to go in to bank for deposit and avoid circulation of black money and fake notes in market.
Rate this:
Share this comment
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
10-நவ-201607:46:12 IST Report Abuse
Arsath Ali 500/2000 முற்றிலுமாக நீக்கிவிட்டால் நல்லது.பல நாடுகளில் உள்ளது போல் 100 ரூபாய் போதும். மோடி அரசின் சிறந்த நடவடிக்கை. நல்லது நடந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
10-நவ-201605:41:55 IST Report Abuse
mohankumar jio (இலவசத்தில் )போன் க்காக மணிக்கணக்கில் ரோட்டில் நின்று சாராயக்கடைகளில் வெயிலில் வரிசையில் நின்று வாங்க முண்டியடித்து கொண்டு செல்கிறார்கள் இதற்காக நாட்டிற்காக செய்யமாட்டார்கள் . இதற்கு அரசை குறை கூறி கொண்டு இருப்பார்கள் . சிங்கப்பூர் போல ஆக வேண்டும் ஜப்பான் போல ஆகவேண்டும் ,என ஆசை தான் .அனால் அங்கே உள்ள மக்கள் இந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கும் பொது அரசுக்கு ஆதரவாக ஒத்துழைத்தாள் . மோடி எங்கே கருப்பு பணத்தை ஒழித்தார் என்றெல்லாம் ஆயிரம் வியாக்கியானம் பேசுவார்கள் அவர் இப்போது நடவடிக்கைகளில் இறங்கும் போது இதே வாய்தான் வேறுவகையான படி விமர்சிப்பதும்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
10-நவ-201602:51:50 IST Report Abuse
மலரின் மகள் இந்த முயற்சியை முற்றிலுமாக நான் ஆதரிக்கிறேன். பாராட்டத்தக்க செயல். இது கான்கிரஸ் காரர்களுக்கும் அவர்களின் காலத்தில் ஆதரவு பெற்று கருப்பாக பதுக்கியவர்களுக்கும் பிடிக்காது தான். அதே நேரத்தில் மக்கள் எப்படி எல்லாம் கசட்டப் படுவார்கள் என்று தெரியாதா அரசிற்கு. அதற்கு முன்னெச்சரிக்கையாக அரசு என்ன செய்திருக்க வேண்டும். வெளியூர் சென்றவர்களால் திரும்ப முடியவில்லை. எந்த பஸ் நடத்துனர் கிரெடிட் கார்டு வாங்கி கொள்கிறார். அல்லது ரயிலில் முன் பதிவில்லா டிக்கெட்டுகளை எந்த வங்கியின் கார்டின் மூலம் வாங்க முடியும். எந்த சிறு குறு ஓட்டல்களில் டெபிட் கார்டு மூலம் இட்லி காபி வாங்க முடியும். இவர்கள் இலவசமாக பேருந்தை இயக்கி இருக்கலாம். அல்லது பேருந்துகளில் ஒரே ஒரு நாளுக்காகவாது 500, ஆயிரம்r ஏற்றுக் கொள்ள செய்திருக்கலாம். அல்லது ஆங்காங்கே பல்வேறு முகாம் அமைத்து ஒரு குடும்பத்தினருக்கு ஒரு ஆயிரம் ருபாய் வரை உடன் நூறு அம்பதாக மாற்றி கொள்ள மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம்அ. பொது மக்களை அம்போ என்று விடும் அரசு கண்டனத்திற்கு உரியது. எந்த மாநில அரசுகளும் மக்களை கண்டு கொள்ள வில்லையே. வேறு ஒரு செட்டப் பிரச்சினைக்கு வருகிறே. ரூபாய் நோட்டுகள் என்பது ஆர் பி ஐ ஆள் தரப்படும் வைத்திருப்போர் மாற்றத்தக்க செக் போன்றதே. ஓபன் செக். பேரர் செக். யார் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அதன் மதிப்பை அரசு தருவதாக உத்திர வாதம் தருகின்ற செக். ப்ரோமிஸ் தான். ருபாய் என்பது PAYING INSTRUMENT அதாவது வரை ஓலை செக் போன்ற இத்தியாதி வகையை சேர்ந்தது. இந்த செக் மற்ற அனைத்து பெயரிடப் பட்ட செக் போன்றது தான். ஒரு வித்தியாசம் தேதியிடப் படைத்தது. ஆகையால் இதன் செல்லுபடி காலம் எத்தனை காலம். அதுவும் நடப்பில் உள்ள செக்கிற்கு உண்டான அதே கொள்கைதான் பொருந்தும். அதன் படி மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் என்று கொள்ள வேண்டும். தேதி இடப்பட்ட செக்கிற்கு தேதி இடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதற்கு மேல் செல்லுபடியாக வேணுமானால் ரிவேலிடேட்.செய்ய வேண்டும். ருபாய் நோட்டுகளை பொறுத்தவரையில் என்று மத்திய சர்க்கார் அதை திரும்பப் பெரும் என்று அறிவிக்கிறது அன்றே அது தேதியிடப் பட்ட செக் ஆகக் கொள்ளப் பட வேண்டும். அவ்வாறு கொள்ளும்போது, அந்த செக்கின் செல்லுபடி காலம் 90 நாட்கள். ஆகையால் டிசம்பர் 30 கடைசி தேதி என்று சொல்வது அடிப்படை இல்லாதது. சட்டப்படி அறிவிப்பு செல்லாத தக்கது அல்ல. பெப்ரவரி 7 ஆம் தேதி வரை ஆர் பி ஐ அல்லது அதன் கட்டுப் பாட்டில் இயங்கும் வங்கிகள் 500 மற்றும் 1000 ரூபாய்களை ஏற்று அதற்கு இணையான பொருளையோ அல்லது பணத்தையோ தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் அது செக் பௌன்ஸ் ஆனதாகத் தான் கருத வேண்டும். கையொப்பமிட்ட பைனான்ஸ் செகரெட்டரி அல்லது கோவெர்னெர் அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர். அவர் கொடுத்த செக் டிசம்பர் 31 முதல் 7 பெப்ரவரி வரையில் மாற்றாத தக்க தள்ள என்றால் அவர்கள் செக் மோசடி வழக்கில் தண்டனை பெறாத தக்கவர்களாகத் தானே இருக்க வேண்டும் என்று நம்ப வேண்டுமல்லவா என்று கேட்டல் அது தவறு இல்லை என்று கொள்ளத் தானே வேண்டும். இது சரியா தவறா. படிக்க வேண்டிய கருத்தோ அல்லது சிந்திக்க வேண்டிய கருத்தோ இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை