அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள்
பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம்

புதுடில்லி: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதை, பார்லி.,யில் கூட்டாக சேர்ந்து எதிர்ப்பது குறித்து, டில்லியில் நேற்று, காங்., - திரிணமுல் காங்., கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.

 அரசுக்கு எதிராக இணையும் எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் நெருக்கடி கொடுக்க திட்டம்

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், நாளை துவங்க உள்ளது. இந்த தொடரின்போது, ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு எதிராக, காங்., தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.


ஓரணியில் எதிர்க்கட்சிகள்


இது தொடர்பாக, டில்லியில் நேற்று, காங்., - திரிணமுல் காங்., மூத்ததலைவர்கள் கூடி விவாதித்தனர். காங்., சார்பில், லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபா காங்., தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர், லோக்சபா திரிணமுல் காங்., தலைவர் சுதிப் பந்தோபாத்யாயாவை சந்தித்து பேசினர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, காங்., துணைத் தலைவர் ராகுலுடன், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடனும், காங்., தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

யெச்சூரியுடன் மம்தா போனில் பேச்சு


அரசியல் களத்தில் பரம வைரியாக கருதப்படும் மார்க்., கம்யூ., கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மம்தா பேசினார். அப்போது, 'பழைய நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மார்க்.கம்யூ., - திரிணமுல் காங்., சேர்ந்து செயல்பட வேண்டும்' என, மம்தா விருப்பம் தெரிவித்தார்.

Advertisement

இந்நிலையில், டில்லியில் நேற்று, நிருபர்களிடம் பேசிய, சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, மம்தா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் பேசினார். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும்போது, யார், என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கும் முடிவு, பா.ஜ., தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
15-நவ-201620:15:05 IST Report Abuse

adithyanஎச்சூரியை கேளுங்கள் சீனாவில் இந்த மாதிரி நடந்தால் எதிர்ப்பீர்களா என்று கேளுங்கள்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-நவ-201617:20:12 IST Report Abuse

Endrum Indianஇதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்த உதிரிக்கட்ச்சிகள் எல்லாம் நிஜமாகவே கருப்பின் உதவி கொண்டு தான் இது வரை இங்கும் அங்குமாக ஆட்சி புரிகின்றனர் என்று தெரிகின்றது. இவர்கள் மக்களின் நன்மையில் அக்கறையற்றவர்கள் என்று அக்மார்க் முத்திரை இட வேண்டும்.

Rate this:
rajan - kerala,இந்தியா
15-நவ-201616:45:24 IST Report Abuse

rajanஇம்முறை இந்த எதிர்கட்சிகள் ஏன் ஒன்று கூடுகிறது? பாராளுமன்றத்தை முடக்கியாவது தங்களுடைய கறுப்பு பணத்தை காப்பாற்ற முனைகிறது. இந்த தற்குறிகள் மக்கள் இப்போ மக்களால் அடையாளம் காணபடுவார்கள். ஒழிக்கவும் படுவார்கள்.

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-நவ-201616:12:55 IST Report Abuse

Ramamoorthy Pசெல்லாக்காசுகள் எல்லாம் இணைந்து என்ன கூப்பாடு போட்டாலும் மோடி பின் வாங்கப்போவதில்லை.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-நவ-201615:00:23 IST Report Abuse

தமிழ்வேல் மம்தா, பாட்டிக்குப் போன் போடலியா ?

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
15-நவ-201621:22:34 IST Report Abuse

Chandramoulliசோனியா பாட்டியை தானே சொல்கிறீர்கள் ?????? பாட்டி சொல்லி தான் இந்த கூட்டமே ????...

Rate this:
Chakram - Phily,யூ.எஸ்.ஏ
15-நவ-201614:53:45 IST Report Abuse

Chakramதிருட்டு கூட்டம். நாட்டுக்கு ஏதாவது நல்லது நடந்தா இவங்களுக்கு பிடிக்காது. பிஜேபி ஜெயிக்க கூடாதுன்னா தீவிரவாதியோட கூட கூட்டு வெக்கற கும்பல். இவங்கள ஆதரிக்கற மக்கள் முழிச்சுக்கணும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
15-நவ-201614:29:46 IST Report Abuse

Balajiநாள் ஆக ஆக இவர்களின் எதிர்ப்பு அதிகரிப்பதை பார்க்கும் போதே என்ன காரணம் என்று யூகிக்க முடிகிறது...... அவ்வளவு கொள்ளை புரிந்துள்ளனர் போலும்........

Rate this:
Shakul Periyakulam - CHENNAI,இந்தியா
15-நவ-201613:52:05 IST Report Abuse

Shakul Periyakulamஅப்போ வெஸ்ட் பெங்கால் பிஜேபி ஒரு கோடி 8-11-16 அன்று டெபாசிட் பண்ணுன BANK STATEMENT WHATS APP ல யாரும் பாக்கவில்லையா சகோதரரே . வேணும்னா உங்க நம்பரை இங்க TYPE பண்ணுங்க நான் அனுப்பறேன்

Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
15-நவ-201615:10:13 IST Report Abuse

kurinjikilanஅய்யா ஷாஹுல் அவர்களே மேற்கு வங்கத்தில் 8 .11 .2016 அன்று BJP ரூ 1 கோடி டெபாசிட் பண்ணியது நான் வாட்ஸாப்ப்பில் பார்த்தேன்..ஓகே. ஒரு கோடி வங்கியில் டெபாசிட் பண்ணியதில் என்ன தவறு ?. அக்கௌன்ட் டுக்கு தானே கொண்டுவந்துள்ளார் ?. ஏன்..நீங்களும் பத்து கோடி கைவசம் இருந்தால் கொண்டுபோய் வங்கியில்கட்டி அக்கவுண்டில் காட்டுங்களேன் ?. சரியான முகாந்திரம் கட்டவேண்டியது BJP பொறுப்பு..இப்போது கட்சிகள் நன்கொடை வாங்கலாம் என்பது வழக்கில் உள்ளது..கள்ள ட்ரெயின் ஏறி சென்னை வந்திறங்கிய பெரியவரின் வாரிசுகள் 1 லட்சம் கொடிகளுக்குமேல் சம்பாதிக்கும் காலமிது..BJP பணத்தை மூடிமறைக்கவில்லையே ..வங்கியில் தான் செலுத்தியுள்ளனர்..BJP யின் பொறுப்பு சரியான கணக்கு வருமானவரித்துறைக்கு காண்பிக்கவேண்டியது..மற்றபடி அந்த கணக்கின் முழு விபரம் குறைந்தது 6 மாதகாலம் ஸ்டேட்மெண்ட் ஐ பார்த்தால்தான் தெரியும்..அனைத்து கட்சிகளும் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளன..பல கோடிக்கணக்கில் பணமும் உள்ளது..அனைத்தும் தணிக்கைக்கு உட்பட்டவை..ஒருவேளை ஒரு கோடி செலுத்தி விட்டு 500 / 1000 கட்டிவிட்டு 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றியிருந்தால் சந்தேகத்துக்கு இடமுண்டு..முதலில் அடுத்தவர் கணக்கை வலைதளத்தில் பரவ விட்டதே வங்கி சட்டதிட்டங்களுக்கு புறம்பானது..வங்கியில் பணியாற்றும் ஏதோ ஒரு புல்லுருவியின் செயல் இது..சட்டப்படி குற்றம்..காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று வலைத்தளத்தில் ஒப்பீனியன் தரவேண்டாம்.....

Rate this:
rejish babu FR - trivandrum,இந்தியா
15-நவ-201616:15:17 IST Report Abuse

rejish babu FRகண்ணா இன்னைக்கு வேணும்னாலும் ஒரு கோடி டெபாசிட் பண்ணலாம்...பணம் இருந்தால்..அதற்குண்டான tax அடைத்தால் போதும்...பிஜேபி ஒரு கோடி 8-11-16 டெபாசிட் பண்ணினது பாங்கில்... அப்போது அது எப்படி கருப்பு பணம் ஆகும்......

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201613:34:08 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஈனாப்பேச்சிக்கு மரப்பட்டி கூட்டு - இது ஒரு மலையாளப் பழமொழி. இது என்ன என்றால் நாட்டுக்கு ஆகாத இரு கட்சிகளின் நட்பு என்பது நாட்டுக்கே ஆபத்து .

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15-நவ-201613:32:07 IST Report Abuse

Mirthika Sathiamoorthiவங்கிகளின் முன்னாலும், ஏ.டி.எம். இயந்திரங்களின் முன்னாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அன்றாடச் செலவுக்குக்கூடப் பணமில்லாமல் சாமானியர்கள் தவிக்க வேண்டியதாகி விட்டது என்பதில் சந்தேகமே இல்லை...இந்த முடிவால் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது, கள்ளநோட்டுகளுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்றெல்லாம் பேசுவது (பிதற்றுவது)' அரசியலே தவிர, தேசத்தின் மீது உண்மையான அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர்கள் பேசுகிற பேச்சல்ல... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தால், கருப்புப் பண முதலைகள் மோப்பம் பிடித்திருப்பார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...நில உச்சவரம்பு கொண்டுவந்தபோது, இதேபோலத்தான் மிகப்பெரிய ஓலம் எழுப்பப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவித சிரமமோ பாதிப்போ கூடாது என்றால், மாற்றங்களை ஏற்படுத்த முடியாது..மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுத் திட்டமிடல் இருந்திருக்கிறது.... வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை சட்டப்படி இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது...கருப்பு பண வேட்டையில் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக அவர்கள் அந்தக் கருப்புப் பணத்தை ஹவாலா பரிமாற்றத்தின் மூலமும், அந்நிய முதலீடு என்கிற பெயரிலும் இந்தியாவிற்குக் கொண்டு வர முற்பட்டனர்...கருப்பு பணத்தை ஒழிக்கும் முதற்கட்டமாக சாமானியர்கள் தங்களது கையிருப்புகளையும் சேமிப்புகளையும் மாற்றிக் கொள்வதற்கு வழிகோலும் வகையில் "ஜன் தன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி 25.45 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன....ஒரு புறம், நேரடி மானியம் செலுத்துவதற்கும், இன்னொரு புறம், தங்களிடம் இருக்கும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கும் இது உதவப் போகிறது...அடுத்த சில நாள்களில் புதிய ரூ.500, ரூ.2000 வரும்வரை மட்டுமே சாமானியர்கள் சிரமப்பட வேண்டிவரும். அதற்குப் பிறகு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதால் அடித்தட்டு வர்க்கத்தினர், சாமானியர்கள், நேரிடையாக வரி செலுத்துபவர்கள் யாருடைய சேமிப்பும் பாதிக்கப்படாது...கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரும் வகையில் வருமானம் வெளிப்படுத்துதல் திட்டம் (இன்கம் டிஸ்க்ளோஷர் ஸ்கீம்) அறிவிக்கப்பட்டது....இத்தனைக்கும் பிறகுதான், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இனியும் அரசைக் குறை சொல்வது நியாயமாகாது.. ஏன் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்? உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாலே போதும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும். இந்தியாவில் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 1% பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள். அன்றைய புள்ளிவிவரப்படி, கணக்குத் தாக்கல் செய்யும் 2.87 கோடி பேர்களில், 1.62 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்குக் காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 26 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன...இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களின் அளவு மட்டுமே 85%...இந்தப் பணம் வங்கிப் பரிமாற்றமாக இல்லாமல் இருப்பதால்தான் கருப்புப் பணம் உலவ முடிகிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைத் தடாலடியாகச் செல்லாததாக்குவதால், ஒன்று அனைத்துப் பணமும் வங்கி வளையத்துக்குள் வர வேண்டும், அதற்குக் கணக்குக் காட்டப்பட்டு வருமானவரி கட்டப்பட வேண்டும். அப்படிக் கணக்குக் காட்ட முடியாவிட்டால் குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டும்..அரசு எதற்காகப் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரேயடியாக பணப் பரிமாற்றம் அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனையாக மாற்றுவது சாத்தியமல்ல. (உதாரணம் மாட்டு சந்தைகள் இங்கு வாங்கி பரிமாற்றம் சாத்தியமல்ல)....அடுத்த சில ஆண்டுகளுக்கு, நாணயமான பரிவர்த்தனைக்கு உதவ புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதைப் படிப்படியாகக் குறைத்து வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே பெரிய தொகைகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் திட்டம்...கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடந்திருக்கின்றன. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் புதிய கரன்சி நோட்டுக்கள் அடிக்கப்பட்டுத் தயார் நிலையில் வங்கிகளுக்கு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...இந்தியாவில் இந்த அளவுக்குத் திட்டமிட்டு ஒரு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை நினைத்தால் மலைப்பு மேலெழுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாக சரித்திரம் இந்த முடிவைப் பதிவு செய்யப் போகிறது.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement