”பணநோட்டுக்களும்,புரளிகளும்”:| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

”பணநோட்டுக்களும்,புரளிகளும்”:

Added : நவ 15, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”:

பணநோட்டுக்களைஅவ்வப்போது செல்லாது எனஅரசுஅறிவிப்பது, வெவ்வேறு காரணங்களுக்காக. நோட்டுக்கள் மிகப்பழையதானால் அவை கிழிந்து பயனற்றுவிடும்.இந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்த அந்நிய சதியாகவோ, உள்நாட்டுச் சதிகாரர்களோ, கள்ளப்பணத்தை அச்சிட்டு மக்களுக்குள் புழக்கத்திற்கு விட்டிருக்கலாம் எனும் தகவல் கிடைத்திருந்தால், அல்லது அது குறித்த சந்தேகம் இருந்தால், மக்களே பணநோட்டுக்களை வரி ஏய்ப்பிற்காக பதுக்கி வைத்திருந்தால், அரசு அச்சடித்த பணத்தாட்களை புழக்கத்திற்குவிட்ட பின்னர், பணத்தாட்களில்அச்சுக்குறை, பாதுகாப்புக்குறை இருப்பதாக, அறிய நேர்ந்தால், ஆகிய சந்தர்ப்பங்களில் அந்த குறிப்பிட்ட மதி்பிலான நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவிக்கும்.உண்மையில் அரசு அச்சடிக்கும் நோட்டுக்கள் அரசு ஆவணங்களே.


பிராமிசரி நோட்டுக்களும், பணநோட்டுக்களும்:

பண நோட்டுக்கள் பிராமிசரி நோட்டுக்களுக்கன இலக்கணங்களைக் கொண்டிருந்தாலும், பண நோட்டுக்கள் பிராமிசரி நோட்டுக்கள் அல்ல. பிராமிசரி நோட்டுக்களில், “நான், இவருக்கு 500 ரூபாய் தருகிறேன்” எனச் சொல்வதே ஆகும். இதில் எந்த கண்டிஷனும் இராது. அதாவது இன்ன தேதியில் தருகிறேன், இதைச் செய்தால் தருகிறேன் என்பது போன்ற கண்டிஷன்களும் இராது. ரூபாய் நோட்டுக்களும் ரிசர்வ் வங்கி கவர்னரால், “ ஐ ப்ராமிஸ் டு பே 500ருபீஸ்” என எழுதப்பட்டு அவரது கையெழுத்துடன் இருக்கிறது. ஆனால், ரூபாய் நோட்டுக்கள் பிராமிசரி நோட்டுக்கள் அல்ல.ஒரு பிராமிசரி நோட்டிற்கு காலாவது தேதி மூன்று வருடங்கள் மட்டுமே. ஆனால் ரூபாய் நோட்டு அனேக வகையில் பிராமிசரி நோட்டு போல இருந்தாலும் அதற்கு காலாவதி தேதி கிடையாது.ஒரு நோட்டு செல்லாது எனச்சொல்வது காலாவதி தேதியாகக் கொள்ள இயலாது. ஒரு பிராமிசரி நோட்டு காலாவதி தேதி முடிவடைந்து விட்டால் (மூன்று வருடங்கள்) பிறகு அது செல்லாது. ஆனால், ஒரு ரூபாய் நோட்டு செல்லாது எனச் சொல்வதன் பொருள், அந்த நோட்டைக் கொடுத்தால் ரிசர்வ் வங்கி தமது பிராமிசை எப்போதும் காப்பாற்றும். அந்த நோட்டுக்கு மாற்றாக, பிராமிஸ் செய்த தொகையைத் தரும். எனவே இது பிராமிசரி நோட்டு அல்ல.இதுபோக பிராமிசரி நோட்டு என்பதற்கான விளக்கம்The Negotiable Instruments Act, 1881 - ந் பிரிவு 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது. “Promissory Note” is an instrument in writing (not being a bank - note or a currency - note) containing an unconditional undertaking signed by the maker to pay a certain sum of money only to, or to the order of, a certain person, or to the bearer of the instrumentபிராமிசரி நோட்டில் எந்த கண்டிசனும் சேர்க்கப்பட்டிருக்கக்கூடாது.சமீபத்தில் இணையதளங்களில், பணத்தாளினை திடீரென்று செல்லாது என அறிவிப்பதற்குப் பதில், ஒவ்வொரு பணத்தாளிலும் அதன் எக்ஸ்பயரி தேதி சொல்லி இருந்தால் என்னாகும்? எனும் தியரி பற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எக்ஸ்பயரி தேதி குறித்துவிட்டால், அதில், இன்ன தேதிவரைதான் அதற்கு மதிப்பு எனும் கண்டிசன் சேர்ந்துவிடுகிறது. எப்படிஇருந்தாலும் பணத்தாள் பிராமிசரி நோட்டும் அல்ல. பிராமிசரி நோட்டு பற்றிய விளக்கத்தில், (not being a bank - note or a currency - note)என, அதாவது பிராமிசரி நோட்டிற்கான விளக்கத்துடன் ஒத்துப்போனாலும் பணநோட்டுக்கள் பிராமிசரி நோட்டின் விளக்கத்திற்குள் வராது என தெளிவாகவே சட்டம் சொல்லிவிட்டது.


பணநோட்டின்உருவமைப்பும்,பாதுகாப்பும்:

பணத்தாளில் காலியாக உள்ள இடம் உண்மையில் காலியானது அல்ல. அது water mark ஐக் கொண்டிருக்கும். இது பாதுகாப்பிற்காக.சமீபத்தில் வெளியான 2000 ரூபாய்நோட்டுகொஞ்சம் அளவில் சிறியது. 66mm, 166mm அளவில்இருக்கும்.தேவநாகரியில், RBI என்றும் 2000 ரூபாய் எனவும் இடதுபுறம் அச்சாகி இருக்கும்.விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் அதில் வாட்டர் மார்க்காக 2000 என்பதும்தெரியும்.மஹாத்மாகாந்தியின் உருவம் மத்தியில் இருக்கும். அந்த முகம் வலதுபுறம்நோக்கினாற்போலஅமைந்திருக்கும்.மறுபுறம் மங்கல்யான் உருவமும், ஸ்வச்பாரத் அப்யான் - ன்லோகோவும்,பாதுகாப்புஇழையும், அதில் 'பாரத்' என தேவநகரியிலும், RBI, மற்றும் 2000 நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் அமைந்திருக்கும். பாதுகாப்பு இழையும் பச்சை, நீல நிறங்களில்அமைந்திருக்கும்.அசோகசக்கரமும், கவர்னர்கையெழுத்தும், பன்மொழிகுறியீடும், செவ்வககுறியீடாகபார்வையற்றவர்அடையாளம்காணும்வகையிலும்,பணத்தாளில், ஆங்கிலம்தவிர 16 மொழிகள்மட்டுமேஉள்ளன. எட்டாவதுபட்டியலில்இணைக்கப்பட்டமொழிகளும்கூடஇந்தியபணத்தாளில்இடம்பெறவில்லை. இந்தியஅரசியலமைப்புச்சட்ட்த்தில்இடம்பெற்ற 22 மொழிகள்தவிரஇந்தியாவில் official மொழிகளாகமொத்தம் 31 மொழிகள்உண்டு. ஆனால்அனைத்துமொழிகளையும்பணத்தாளில்பயன்படுத்தஇயலாதுஎன்பதும், சிலமொழிகள்பேசுவோர்எண்ணிக்கைமிகமிக்க்குறைவுஎன்பதும், இதுஒன்றும்பெரியவிசயமில்லைஎனரிசர்வ்வங்கிநினைப்பதுமேகாரணமாகஇருக்க்கூடும்.இணையதளங்களிலும், வாட்ஸப்பிலும்பகிரப்பட்டபுரளியைஅடுத்து, ரூபாய்நோட்டுக்களில் GPS Tracking System ஏதும்அமைக்கப்பட்டிருக்கவில்லைஎனரிசர்வ்வங்கிஅறிவித்துவிட்ட்து. அதுசாத்தியமும்அல்ல.2000 ரூபாய்த்தாளில்நானோசிப்பொருத்தப்பட்டிருப்பதாகபுரளிஒன்றுவெளியானது. அதன்உதவியுடன், செயற்கைக்கோள்மூலம், ஒரு நோட்டு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விடமுடியும்என்றும், பணநோட்டுக்களைப் பதுக்கினால் கண்டுபிடிக்க ஏதுவாக அப்படி ஒரு சிஸ்டம் சேர்க்கப்பட்டிருக்கிறது எனவும்புரளி கிளம்பியது.GPS எனும்தொழில்நுட்பத்தில், நாம்இருக்கும்இடத்தைக்கண்டுகொள்ளமுடியும்தான். ஆனால்இங்கிருந்துஎந்ததகவலும்செயற்கைக்கோளுக்குஅனுப்பப்படவில்லைஎன்பதேஇதன்தொழில்நுடபம்.செயற்கைக்கோளில்இருந்துநேரடியாக சிக்னலைப்பெறுகிறது ஆனால், செயற்கைக்கோளுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. இதில்செயற்கைக்கோளில்இருந்து சமிஞைகளை நேரடியாகப் பெறவேண்டிஇருப்பதால் கட்டிடங்களுக்குள் இதுபெரிதாகபயந்தராது.Assisted GPS என்பதுஇணையவசதியுள்ளகருவிகளில்செயல்படுத்தலாம். இதுஇணையவழி சமிஞைகளைப்பெறுகிறாது.


இது சாத்தியப்படாமல்போகஉள்ளகாரணங்கள்:

இவைஇரண்டிற்கும் மின்சாரம்தேவை. அதை ஒரு ரூபாய் நோட்டில் எப்படி இணைப்பது? சாத்தியமில்லை. அல்லவா?இவ்வசதியைஇணைக்கரூபாய்நோட்டில்அளவு. நோட்டின்தடிமன்கூடவாகஇருக்கவேண்டும். அதாவதுகுறைந்தபட்சம் 3மிமீ.அப்படியானதொழில்நுட்பம்வேறெங்கேனும்பயன்படுத்தப்படுகிறதாஎன்றால் அதுவும்இல்லை. அதுஇன்னமும்ஆராய்ச்சிநிலையிலேயேஉள்ளது.ஆக, இந்த்த்தொழில்நுட்பம்புகுத்துவதுஎன்பதுஇப்போதைக்குசாத்தியமேஇல்லைஎன்பதேஉண்மை.


கள்ளப்பணஒழிப்பு:

பண நோட்டுக்களை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் விதிகள் சொல்வதன் படி, (RBI(Note Refund) Rules, 2009) ஒருவருக்கு அந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாற்ற எடுத்துவரும் அழுக்கான கிழிந்த நோட்டுக்களை (அதன் எண்கள் கிழியாது/அழியாது இருக்கும்பட்சத்தில்) மாற்றித் தரவேண்டும் என்கிறது. ஆனால் சமீபத்தில் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை அப்படி மாற்றுவதில் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்றோ, வேறு அடையாளமோ காட்ட வேண்டும் என்றோ சொல்வதன் காரணம், கருப்புப் பணம், கள்ளப்பணத்தை ஒழிப்பதே ஆகும்.பணநோட்டைக்கையாளுதல்:ரிசர்வங்கிகவர்னர்அதில்எழுதிகையெழுத்திட்டவாசகத்தின்படி, அந்த நோட்டுக்களை செல்லாது எனச்சொன்னால், அதன் பொருள் அதே மதிப்பிலான தொகைக்கு வேறு பணநோட்டு தருவதாகவே பொருள். இந்நிலையில்ஒரு குறிப்பிட்ட மதிப்பிலான பின்ன பணத்தாள் செல்லாது என ரிசர்வ்வங்கிஅறிவித்தால், அதன்பொருள் அந்த பணநோட்டு குப்பைக்குப்போக வேண்டியது எனச்சொன்னதாகப்பொருள்கொண்டு, அந்தபணநோட்டைகிழிப்பதும்எரிப்பதும்பிழையே. ஏனெனில்அதுஅப்போதும்ஒருஅரசு டாக்குமெண்ட்டே. அரசு டாக்குமெண்டை தவறாகக் கையாள்வதும் குற்றமே. இதுவும்போக, ஒவ்வொருபணத்தாளினையும்அச்சடிக்கஅரசுசெலவழிக்கும்தோகையைநாம் அழிப்பதாகவே பொருள்.உதாரணமாக, ஒரு 500 ரூபாய்நோட்டைஅச்சடிக்கஇரண்டரைரூபாய்வரைசெலவாகிறது.எனவேபொறுப்புடன்இவற்றைப்பயன்படுத்துவோம். வீண்புரளிகளைத் தவிர்ப்போம்.
-ஹன்ஸா ஹன்ஸா (வழக்கறிஞர்)
legally.hansa68@gmail.com"@gmail.com, PH.9994949195

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
19-டிச-201605:12:03 IST Report Abuse
Paranthaman ரிசர்வ் வங்கியால் அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்த 500 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு 15லட்சம் கோடி 43ஆயிரம். அவற்றில் ரிசர்வ் வங்கியிடம் மீண்டது ரூ.12லட்சம் கோடிகள் என்று கணக்கு கூறுகிறார்கள். மீதமுள்ள 3லட்சம் கோடி 43 ஆயிரம் 500 1000ரூபாய் எங்கே எவரிடம் முடங்கியுள்ளன என்பதை கண்டு பிடிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thurai - Chennai,இந்தியா
23-நவ-201611:37:51 IST Report Abuse
Thurai எல்லாமே சூப்பர் ...
Rate this:
Share this comment
Cancel
pius - Nagercoil,இந்தியா
15-நவ-201613:28:24 IST Report Abuse
pius Thanks for your information
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X