ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று எதிர்க்கட்சிகள் பேரணி| Dinamalar

ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று எதிர்க்கட்சிகள் பேரணி

Added : நவ 16, 2016 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று எதிர்க்கட்சிகள் பேரணி

புதுடில்லி : ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பேரணி செல்ல உள்ளன. ஊர்வலமாக சென்று இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.


எதிர்க்கட்சிகள் பேரணி :


இன்று பார்லி., கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக இருஅவையிலும் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன் அவைக்கு வெளியே, மத்திய அரசுக்கு எதிராக பேரணி நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ், வாடிக்கையாளர்கள் கையில் மை வைக்கும் விவகாரம் ஆகியவற்றிற்கு எதிராக பேரணியாக சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


மம்தா தலைமை :


மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் இந்த பேரணி நடக்க உள்ளது. இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. மகாராஷ்டிராவில் பா.ஜ.,வின் கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனாவும் இந்த பேரணியில் கலந்து கொள்ள உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்லும் இந்த பேரணியில் கலந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navasathishkumar - MADURAI,இந்தியா
26-நவ-201613:59:02 IST Report Abuse
navasathishkumar நடந்து ..நடந்து கால் தேய போகுது ...மம்தா .. மனித சங்கிலி போராட்ட காரர்களுக்கு ...மக்கள் சப்போர்ட் மோடிக்கு இந்த விசயத்தில் மட்டுமல்ல இன்னும் தங்கம், வீடு, அரசு ஊழியர்களின் லஞ்சம் ஒடுக்குதல் போன்றவற்றில் அதிரடியை எதிர்பார்க்கின்றார்கள் ...உங்கள் மடியில் படுத்து தூங்கும் பூனையை போன்ற மக்கள் இருக்க மாட்டார்கள் .எவ்வளவு நாள் தான்யா அடிமையாவே இருப்பது ..
Rate this:
Share this comment
Cancel
Devar - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
16-நவ-201614:33:18 IST Report Abuse
Devar மக்களுக்காக மக்களின் துன்பத்தை புரிந்து செய்யப்படும் மம்தாவை பாராட்டவே வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
16-நவ-201614:25:06 IST Report Abuse
navasathishkumar அட இப்பத்தான்யா ..ஜனாதிபதி வங்கிக்கு போயிருக்காரு ..பணம் எடுக்க ..கொஞ்சம் வெயிட்டிங்க போடுங்க ... அய்யா வர வரைக்கும் லைன் பார்ம் பண்ணி பக்கத்துக்கு பேங்க் போய் நின்னீங்கனா உங்களுக்கும் நாலாயிரம் ரூபாய் பணம் மாத்தி தருவாங்க..நீங்க சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் ஹோல்டரா ..அப்ப ...இன்கம் டாக்ஸ் பக்கம் போங்க..வழி சொல்லுவாங்க ..நல்லா வந்துட்டாங்கய்யா கூட்டமா
Rate this:
Share this comment
Cancel
Matram Ondre Marathathu - Chennai,இந்தியா
16-நவ-201613:37:58 IST Report Abuse
Matram Ondre Marathathu மக்களே உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. உங்க வாழ்க்கையில கிடைச்ச ஒரு மிக பெரிய வரப்பிரசாதம் எல்லா ஊழல் தலைவர்களையும் ஒண்ணா பாக்குறே பாக்கியம். பாவம் ஜனாதிபதி எல்லாருக்கும் எப்படி டீ பிஸ்கேட் கொடுப்பாரு. அவங்க சாப்பிட்ட குடிச்ச பொருள் அப்படியே தூக்கி வெளியே போட்ருங்க. இல்லேன்னா அந்த பாவம் ஜனாதிபதி மாளிகைலே தங்கிரும்.
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
16-நவ-201612:54:14 IST Report Abuse
nimmi குடியரசுத் தலைவரை சந்திப்பதால் எவ்வித பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மனுவைப் பெற்றுக் கொண்டு " பரிசீலனை செய்க", அல்லது எம்ஜியார் போல "நீதி செய்க" என்ற குறிப்புரைதான் மத்திய அரசுக்கு போகும். வீண் ஆர்பாட்டம். அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
16-நவ-201612:27:36 IST Report Abuse
Krishnan G இந்த போராட்டத்துல கலந்துக்குற எல்லாரையும் கூண்டோட உள்ள தூக்கி போட்டு கருப்பு பணம் பற்றி விசாரணை நடத்தலாம்னு நினைச்சாலும், ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏன்னா, இதுல யாரு கருப்பு பணம் வைச்சுருக்குறவனா கலந்துக்க போறானுங்க.. அவனுங்க அதுக்கும் காசு குடுத்து நம்மள மாதிரி ஏழை மக்களைத்தான் கலந்துக்க சொல்லி நல்ல சொகுசா ac ரூம்ல வீட்டுல உக்கார்ந்துக்கிட்டு டிவி-ல போராட்டம் எப்படி நடக்குதுன்னு பார்ப்பானுங்க. எல்லாம் நம்ம தலை எழுத்து. இந்த மாதிரி தலைவர்கள் மற்றும் அரசியல் காட்சிகள் மேலும் நம்ம நிலைமையும் அப்படி. என்ன செய்ய.
Rate this:
Share this comment
Cancel
Subash - Thanjai,இந்தியா
16-நவ-201612:27:22 IST Report Abuse
Subash இந்த ரௌடி ராக்கம்மா மமதாவோட சுய ரூபம் என்னன்னு மக்களுக்கு தெரியாதா என்ன? அடிதடி, கொலை, கொள்ளை கேசுல தன்னோட கட்சிக்காரன் போலீஸ் கஸ்டடியில இருந்தா நேரா போயி ஸ்டேஷன் உள்ள போலீசை திட்டி அவமானப்படுத்திவிட்டு கையோட அழைச்சுக்கிட்டு போற இந்த மங்காத்தா மக்களோட பிரச்சினைக்கு குரல் கொடுக்குதாம் வேடிக்கையா இருக்கு. சீட்டு நிறுவன கொள்ளைக்கு இதுவரை சரியான பதில் இல்லை, ஊருக்கு உபதேசம். கொள்ளையடிச்சு வைத்துள்ள பணம் எதுவும் செய்யமுடியாம போய்விடுமே என்கிற ஆதங்கம். வேறு எந்த மக்கள் பிரச்சினைக்கும் ஒண்ணுகூடாத இந்த திருட்டு கொள்ளைக்கூட்டம், இப்ப ஒண்ணு கூடுவது ஏன்னு மக்களுக்கு தெரியாதா என்ன?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16-நவ-201611:43:35 IST Report Abuse
Subburamu Krishnaswamy சாரதா சிட் ஊழல் கட்சியிடம் கட்டுக்கட்டாக இருக்கும் பணம் இப்போ வெறும் காகிதமாகிவிட்டது. சாதாரண மக்களைவிட அரசியல்வாதிகளுக்கு பெரிய கேடீஸ்வரர்களுக்கு இப்போ மோடி நல்ல ஆப்பு வச்சிட்டார்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-நவ-201610:18:08 IST Report Abuse
இந்தியன் kumar இவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் வரும் தேர்தல்கள் அதை நிரூபிக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
16-நவ-201609:48:51 IST Report Abuse
Sanjisanji நல்லத்துக்கெல்லாம் ஒண்ணுசேராத நீங்க இப்படி கருப்ப்பாயி நிக்கறீங்களே ... மோடி வெடியில தெருவுக்கு வந்தோர் சங்கம் ......... வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை