என் ஹீரோ நவரச நாயகன் - நடிகை பிரியா ஆனந்த்| Dinamalar

என் ஹீரோ நவரச நாயகன் - நடிகை பிரியா ஆனந்த்

Updated : நவ 30, 2016 | Added : நவ 18, 2016
Advertisement
என் ஹீரோ நவரச நாயகன் - நடிகை பிரியா ஆனந்த்

இவள் அழகை பிரதிபலிப்பதால் விண்மீன்களும் வெளிச்சமாகும். பொறாமை தாங்காத நட்சத்திரங்கள் பொழுது விடிவதற்குள் தற்கொலை செய்து கொள்ளும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளெல்லாம் இவர் குரல்கேட்டு கவிதை பாடும்... இப்படி 'வாமனன்' மூலம் ரசிகர்கள் மனதை 'வாட' வைத்த வைரச்சிலை பிரியா ஆனந்த். தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தார், இதோ:

* பிரியா ஆனந்த் பற்றி
பிறந்தது சென்னை. வளர்ந்தது ஐதராபாத், அமெரிக்கா. பிசினஸ் கம்யூனிகேஷன் அன்ட் ஜர்னலிசம் படிச்சிருக்கேன்.

* சினிமாவுக்கு எப்படி...
எனக்கு திரைப்பட இயக்குனர் ஆகணும்னு தான் ஆசை. இயக்குனர் சங்கர் சாரோட பெரிய ரசிகை, நான். அவர்கிட்ட உதவி இயக்குனரா சேரலாம்னு இருந்தேன். அதுக்கு முன்னாடியே படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

* இப்போ என்னென்ன படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க...?
தமிழில் முத்துராமலிங்கம், கன்னடத்தில் ராஜகுமாரா, மலையாளத்தில் எல்ரா, தெலுங்கு, ஹிந்தின்னு வரிசையா படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.

* எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பம்
இந்த கேரக்டர் தான் நடிப்பேன், இதுல நடிக்க மாட்டேன்னு இல்லீங்க. நல்ல கதைகள் வந்தால் எல்லா கேரக்டரிலும் நடிப்பேன்.

* யாரோட நடிக்க உங்களுக்கு இஷ்டம்?
ஸ்ரீதேவி மேடம், நவரச நாயகன் கார்த்திக் சார் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை.

* ஹீரோயினா மக்கள் மனசுல இடம் பிடிக்க...
மக்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல அழகான ஹீரோயினா இருந்தாலே போதும். அழகு மட்டும் இல்ல... திறமை, நடிப்பும் வேணும்.

* ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல...
பேமிலி, பிரெண்ட்சோட இருப்பேன். என் செல்லக்குட்டி நாய் இருக்கு. அதோட விளையாடுவேன். நிறைய புதுசு புதுசா கத்துக்கணும்னு நினைப்பேன். அதனால ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.

* நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியமா...
ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போர் அடிச்சிடும். நடிப்ப வளர்த்துக்கிட்டு எல்லா கேரக்டர்லயும் நடிக்கணும். கவர்ச்சி தேவைன்னு இல்ல. விருப்பப்பட்டால் நடிக்கலாம்.

* பிரியா யாரோட ரசிகை?
நவரச நாயகன் கார்த்திக் சார், அப்புறம் என்னோட பாட்டிக்கும்.

* தினமும் சினிமாவுக்கு நிறைய ஹீரோயின்ஸ் வர்றாங்களே...?
வரட்டும்.. வரட்டும். போட்டி இருந்தாத்தான் நம்மளோட திறமையை வளர்த்துக்க முடியும்.

* கடவுள் நம்பிக்கை இருக்கா
கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் இவ்ளோ துாரம் வந்ததுக்கு காரணம் கூட கடவுளா தான் இருக்கும்.

* பெண்கள் பற்றி...
பெண்கள் வெளியே வந்து அவங்களுக்கு பிடிச்சத பண்ணனும். பெத்தவங்க, 'நீ ஒரு பெண், அதனால நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்'னு கட்டாயப்படுத்த கூடாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X