சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது: சுஷ்மா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது: சுஷ்மா

Added : நவ 19, 2016 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறுநீரகங்களுக்கு மத அடையாளம் கிடையாது: சுஷ்மா

புதுடில்லி : இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் தானமாக அளிக்க முன்வந்த சிறுநீரகம் தொடர்பாக நன்றி தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'சிறுநீரகங்களில் மத அடையாளம் கிடையாது' என தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாற்று சிறுநீரகங்கள் பொறுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் சுஷ்மாவுக்கு சிறுநீரகம் வழங்க பலரும் முன்வந்துள்ளனர்.தனக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்த நண்பர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்த சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.இந்நிலையில், இஸ்லாமியர்களான நியமத் அலி ஷேக், ஜான் ஷா மற்றும் முஜிப் அன்சாரி ஆகியோரும் நேற்று சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இவர்களில் தனது விருப்பத்தை சுஷ்மாவுக்கு 'டுவிட்டர்' மூலம் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஜிப் அன்சாரி, 'நான் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர். ஆனால், நீங்கள் எனக்கு தாய் போன்றவர். உங்களுக்கு எனது இரு சிறுநீரகங்களையும் தானமாக அளிக்க விரும்புகிறேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்' என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், 'மிக்க நன்றி சகோதரர்களே.., சிறுநீரகத்துக்கு மதமுத்திரைகள் கிடையாது என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muhammad Aslam - Jeddah,சவுதி அரேபியா
20-நவ-201601:26:51 IST Report Abuse
Muhammad Aslam விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,மத முத்திரை சிறுநீரகத்தில் மட்டுமல்ல இதயத்திலிருந்தே எடுத்து எறியுங்கள் சகோதரி.நாமெல்லாம் ஒரு குடும்பம்.பல மதமாக இருந்தாலும் நாங்கள் எல்லாம் எவ்வளவு ஒற்றுமையாகவும், மகிச்சியாகவும் இங்கே சவுதியில் வாழ்ந்து வருகிரோம்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-நவ-201622:37:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாடி பார்ட்ஸ் க்கு எல்லாம் மத அடையாளம் கிடையாது.. அதையெல்லாம் சுமக்கிற மனுஷனுக்கு மட்டும் தான் மத அடையாளம்.. கருமம்டா..
Rate this:
Share this comment
Cancel
Faithooran - Thondamaan Puthukkottai,இந்தியா
19-நவ-201622:37:03 IST Report Abuse
Faithooran அரசியல் இதிலும் சட்டப்படி தானம் பற்றிய ரகசியங்கள் வெளிவிடுவது எவருக்கும் அழகல்ல. ஊடகங்கள் எங்கே செல்கின்றன ?
Rate this:
Share this comment
Cancel
karuppan - clementi,சிங்கப்பூர்
19-நவ-201619:54:10 IST Report Abuse
karuppan நான் பெங்களூரில் இளம்வயது முஸ்லீம் ஆட்டோ டிரைவர் ஒருவரின் அவசர சிகிச்சைக்காக ரத்த தானம் செய்தேன் தேவையை ஒப்பிடும்பொழுது அது மிகச்சிறிய அளவே. இருந்தும் அவரின் தந்தை என்கையை பிடித்து நன்றி கூறி வாழ்த்தினார். உதவியும் தானமும் சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்டது தயவு செய்து உதவி செய்பவரையும் உதவி பெறுபவரையும், தானம் செய்பவரையும் தானம் பெறுபவரையும் கொச்சை படுத்தாதீர்கள். உகவும் மனப்பான்மையும் தானம் செய்யும் குணமும் அனைவரிடமும் வளர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-நவ-201619:13:24 IST Report Abuse
மலரின் மகள் சாதாரண விசயத்திற்கு ஏன் எமோஷனல் ஆகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
19-நவ-201618:35:09 IST Report Abuse
muthu Rajendran எதையும் மறைவின்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் தலைவரையும் அவரிடம் பரிவுடன் உதவ முன்வரும் மக்களும் பற்றி செய்திகளை படிக்கும்போது மனம் நெகிழ்வடைகிறது. உன்னதமான நாகரீகமான அரசியல் களம் வடமாநிலங்களில் உள்ளது. விரைவில் திருமதி சுஷ்மா அவர்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவராக
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
19-நவ-201618:33:36 IST Report Abuse
சாமி சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு,சிறுநீர் அங்கங்களை தானாக தானம் அளிக்க முன்வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். சுஷ்மா சுவராஜ் அவர் பூரண குணமடைய வாழ்த்துக்கள், அதேபோல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள் சிறுநீர் அங்கங்களை தானம் அளிக்க முடிவு செய்தால் ஒரு ஏழை இந்துவுக்கு செய்யுங்கள் ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு தாய் அல்லது தந்தை கிடைப்பார்கள், நீங்கள் செய்யும் உதவி புனிதமாகும், சுஷ்மா சுவராஜ் மாதிரி ஆட்களுக்கு செய்தால் இன்னும் ஒரு நாட்டை கொள்ளை அடிக்கும் ரெட்டி சகோதரர்கள் லலித் மோடிகள் உருவாகும் வாய்ப்பு தான் அதிகம், ஆகவே எதை செய்தாலும் ஏழைகளுக்கே செய்யுங்கள், இந்த செய்தி வெளியிட்ட தினமலர்க்கும் என் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
19-நவ-201615:58:17 IST Report Abuse
Palanisamy T இந்தச் செய்தியை இந்திய மக்களின் சார்பாக பேரினவாத சிங்கள இனத்தவர்களிடம் கொண்டுச் செல்லுங்கள் "சிறுநீரகங்களில் மத அடையாளம் கிடையாது" என்றுச் சொல்கின்றீர்கள் அன்று இலங்கையில் புலிகளுக்கு எதிரானப் போரில் மாந்தர்க் குலமே தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு நிறைய போர்க் குற்றங்கள், நிறைய உயிர்க் கொலைகள் செய்துவிட்டு, பின்பு அங்கிருந்த இந்துக் கோயில்களை ராணுவத்தினர் இடித்துத் தள்ளினார்களே. இவர்களிடமும் கொண்டுச் செல்லுங்கள் இந்த நல்லச் செய்தியை இந்திய மக்களுக்கு இந்தச் சேதி தேவையில்லை. இயல்பாகவே இந்திய மக்கள் மாந்தர்க்குரிய பண்போடும் உணர்வோடும் வாழ்கின்றவர்கள் இந்திய மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
19-நவ-201615:06:48 IST Report Abuse
Ravi Manickam சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு,சிறுநீர் அங்கங்களை தானாக தானம் அளிக்க முன்வந்த இலாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைத்தான் நான் பலமுறை கூறியது, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும். பிறப்பிலும், கலாச்சாரத்திலும் நாம் இந்தியர்கள் தான், எந்த மதமானாலும் மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்ர்கள் தீவிரவாதிகள் தான்.ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - singapore,சிங்கப்பூர்
19-நவ-201614:49:58 IST Report Abuse
suresh kumar நல்லா உரைக்கிற மாதிரி சொல்லி இருக்கிங்க...உங்க கட்சியின் அமாவாசை கேரக்டருக்கு புரிஞ்சா சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை