பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல் | பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிக்கல்!
பத்திரப்பதிவு வருவாய்
வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு

தமிழகத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில், சொத்து பரிமாற்ற பத்திரப்பதிவு முடங்கி உள்ளதால், அரசின் திட்டங்களுக்கு நிதி கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

 பத்திரப்பதிவு வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி:அரசு திட்டங்களுக்கு சிக்கல்

நேரடி வருவாய்:தமிழகத்தில், சொத்து பரி மாற்ற ஆவணங்களை பதிவு செய்ய, 8 சதவீதம் முத் திரைத் தீர்வை, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

2011 நிலவரப்படி, ஆண்டுக்கு, 35 லட்சம் பத்தி ரங்கள் பதிவாகி, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. மக்களிடம் இருந்து அரசுக்கு நேரடியாக கிடைக்கும் இந்த.

குறையத் துவங்கியது. இதனால், ஆண்டு தோறும் பட்ஜெட்டில், பத்திர பதிவு வருவாய் இலக்கை, அரசு குறைத்து வருகிறது. அத்துடன், மனை விற்பனை தொடர்பான, உயர் நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்துவதில் உள்ள குளறுபடி, ரூபாய் நோட்டு கட் டுப்பாடு போன்ற காரணங்களால், சொத்து பரிமாற்ற பத்திரங்கள் பதிவுக்கு வருவது, முற்றிலும் முடங்கி உள்ளது.

500 பத்திரங்கள்


இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரியல் எஸ்டேட் சந்தை நிலவரத்தில் ஏற்படும் மாற்றங்களால், பத்திரப்பதிவு வருவாய் மாறுவது இயல்பு தான்.ஆனால், சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தற்போது பத்திரப்பதிவில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

தினமும், 200 பத்திரங்கள் பதிவாகும் சார் பதிவாளர் அலுவலகங்களில், தற்போது,50 பத்திரங்கள் கூட வருவது இல்லை. சில மாதங்களாக, பதிவுத்துறை வருவாய், மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது.
திருமணம், நிறுவனங்கள், சங்கங்கள், கூட்டு

Advertisement

ஒப்பந்தங்கள், செட்டில்மென்ட் போன்ற பத்தி ரங்கள் மட்டுமே தற்போது பதிவாகின்றன. இதே நிலை தொடர்ந்தால், அரசு திட்டங்களுக் கான நிதி ஆதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.

இதை, பதிவுத்துறை சார்ந்த பிரச்னையாக பார்க்காமல், நிதித்துறை தலை யிட்டு சிக்கலை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-நவ-201612:44:36 IST Report Abuse

Malick Rajaதூங்குபவனை எழுப்பலாம் ஆனால் அதுபோல் பாவனையில் இருப்பவனை எழுப்ப முடியாது அந்த நிலையில் நமது அரசோ ?

Rate this:
rajan - kerala,இந்தியா
21-நவ-201620:36:38 IST Report Abuse

rajanஅப்போ ஒரு துறை சார்ந்த கொடிகள் சார்ந்த ஊழல் முடக்க பட்டு வித்திட்டது. GOOD.

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
21-நவ-201620:29:16 IST Report Abuse

venkateshதமிழ்நாடு எல்லாவற்றிலும் வீழ்ச்சி ஆனால் ஊழலிலும் டாஸ்மாக் விற்பனையில் மட்டும் கொறச்சல் இல்லீங்க .

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-நவ-201616:47:36 IST Report Abuse

Cheran Perumalநிலத்தின் வழிகாட்டி மதிப்பை பலமடங்கு உயர்த்தியபோதே பத்திரப்பதிவு குறைந்துவிட்டது. அதிகமாக வருமானம் ஈட்ட ஆசைப்பட்டு உள்ள வருமானத்தையும் இழந்து நிற்கிறது அரசு.

Rate this:
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
21-நவ-201615:44:41 IST Report Abuse

Vijay D.Ratnamஇடம் வாங்கும்போதும் விற்கும் போதும் அதற்கான முழு தொகையும் பதிவாளர் முன் DD டிமாண்ட் டிராஃப்ட் ஆக இருக்கவேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்ட வேண்டும். பணத்தை கேஷாக கொடுப்பது தடை செய்ய வேண்டும்.

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-நவ-201615:15:50 IST Report Abuse

ezhumalaiyaan200 பாத்திரங்கள் பதிவு செய்யப்படும் இடங்களில் ஐம்பது பத்திரம் பதிவாகிறது என்றால்,அலுவலர்கள் ,நிதானமாக படித்து கையொப்பம் இடலாம்.

Rate this:
Santhosh -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201614:35:45 IST Report Abuse

SanthoshThe actual registration value shall match with the actual selling|buying rates. but in the real case scenario, the guideline value is considered for registration which is just 20% of the transaction value!. Government is loosing lots and lots of revenue from the land registration!! Each and every citizen is cheating government by doing this!!! The officials and authorities are well aware of the situations but not taking any actions!!! It needs to be eleminated entirely!

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
21-நவ-201614:13:52 IST Report Abuse

S.Ganesan200 பத்திரங்கள் பதியும் இடத்தில் 50 பத்திரங்களே பதிவு செய்யப்படுவதற்காக வருத்தப்படுவது யார் என்று பார்த்தீர்களா ? இப்படி கூறியது பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர். இதன் பின்புலம் என்னவென்றால் இவர்கள் அடாவடியாக வசூல் செய்வது நின்று போனதால்தான் இப்படி கூறி இருக்கிறார். இவர்களுக்கு அரசு திட்டங்கள் எப்படி போனால் என்ன ? தங்கள் வருமானமே முக்கியம் என்று அதிலேயே குறியா இருப்பவர்கள் தானே இந்த அரசு அதிகாரிகள். இப்போது இப்படி போடுவதை கேட்டால் எரிச்சலாகத்தான் வருகிறது.

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-நவ-201613:46:07 IST Report Abuse

அம்பி ஐயர்ஏறிய விலை ஒரு போதும் இறங்கியதாகச் சரித்திரம் இல்லை.... இன்னுமொரு “சுனாமி” வந்தாலும் அடங்க மாட்டார்கள்.... பணப்பேய்கள்....

Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
21-நவ-201613:06:56 IST Report Abuse

kurinjikilanபத்திரப்பதிவு வருவாய் அதிகமானால் மட்டுமென்ன அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம்..தமிழ்நாட்டில் திட்டங்கள் போட்டால் பெரும்பான்மை பணம் அதிகாரிகளால் மற்றும் அரசியல்வாதிகளால் சுருட்டப்படுகிறது..உங்கள் திட்டங்களை குப்பையில் போட்டு அதோடு ஊழலையும் சேர்த்து புதையுங்கள்..நாடு உருப்படும்..நமது வாரிசுகளாவது ஒரு ஊழல் இல்லா சமுதாயத்தில் வாழட்டும்..

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement