கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு... ஏமாறாதீங்க! | கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு... ஏமாறாதீங்க!:ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
ஏமாறாதீங்க!
கறுப்பு பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு
ஏழை, எளிய மக்களுக்கு மோடி எச்சரிக்கை

ஆக்ரா:''கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, உங்களது, 'ஜன் தன்' வங்கிக் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்காதீர்கள்; அவ்வாறு செய் தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

கறுப்புப் பண முதலைகளின் ஆசை வார்த்தைக்கு... ஏமாறாதீங்க!:ஏழை, எளிய மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்டுள்ள ஜன் தன் வங்கிக் கணக்கில், கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர் மோடி பேசியதாவது:

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என,
அறிவிக்கப்பட்டது. இதனால் சில சிரமங்கள் ஏற்படும்.வேண்டுகோள் இருப்பினும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கைக்காக, அரசுக்கு, 50 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

இத்தனை பெரிய நாட்டில், இந்த மிகப்பெரிய பிரச்னைக்கு தீர்வு காண, 50 நாட்கள் இந்த
சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என, மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த, 50
நாட்களுக்குப் பின், மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

இந்த திட்டத்தால், உண்மையில் பாதிக்கப்படு வது, கறுப்புப் பண முதலைகளே. அதனால் தான், அவர்கள் இதை எதிர்க்கின்றனர்; குறுக்கு வழிகளில், பணத்தை மாற்ற முயற்சிக்கின் றனர்.

மக்களின் நலனுக் காக கொண்டு வரப்பட்ட

ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தை, இவர்கள் பயன்படுத்துவ தாக தகவல் கிடைத்துள்ளது. உங்கள் கணக்கில், 2.5 லட்சம் ரூபாயை முத லீடு செய்வர்; 'ஆறு மாதங்களுக்குள், இரண்டு லட்சம் ரூபாயை தந்தால் போதும்; உங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறுவர்.

மிகச் சரியாக திட்டமிட்டு, பல்வேறு கட்டுப்பாட்டு கள், கண்காணிப்புடன் தான் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உங்கள் கணக்கில் சேரும் இந்த திடீர் பணம் குறித்து கேள்வி எழுப்பப்படும். அப்போது, கறுப்புப் பண முதலைகள் தப்பிவிடுவர்; சாதாரண மக்கள் தான் சிக்க வேண்டும்.

கறுப்புப் பணத்துக்கு எதிரான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அப்பாவி மக்கள் இதில் சிக்க வேண்டாம். உங்கள் கணக்கில் மற்றவருடைய பணத்தை டிபாசிட் செய்ய அனுமதிக்காதீர்; சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம்.

பாராட்டு


செல்லாத நோட்டுகளை மாற்றித் தருவதில், திறம் பட செயல்படுத்தி வரும் அனைத்து வங்கிகளுக்கும், ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் என் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன்.அரசின் நோக் கத்தை புரிந்து,ஆதரவு அளித்து வரும் அனைத்து பொதுமக்களுக்கும் பாராட்டுகள்.இவ்வாறு அவர் பேசினார்.

அனைவருக்கும் வீடு


அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட் டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முறைப்படி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, கிராமப் பகுதி யில் உள்ள, ஐந்து கோடி பேருக்கு, வரும், 2022 ம் ஆண்டிற்குள், சொந்த வீடு கட்டித் தரப்பட உள்ளது.

மின்சாரம், குடிநீர், சமையல், 'காஸ்' உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 2019க்குள், ஒரு கோடி பேருக்கு வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மம்தா - மாயாவதிக்கு சூடு


ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியில், அரசின் நட வடிக்கையை எதிர்த்து விமர்சனம் செய்து வரும்,

Advertisement

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்கள் குறித்து மோடி பேசியதாவது:

லட்சக்கணக்கான மக்கள், சேமிப்பு என்ற பெயரில், 'சிட்பண்ட்' திட்டங்களில் முதலீடு
செய்கின்ற னர். ஆனால், சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், தற்போது அர சின் திட்டத்தை எதிர்க்கின்றனர்.கடந்த,70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
கட்சிக்கு, மக்கள் நலனை விட, ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம்.

கறுப்புப் பணம் எத்தனை பெரிய நோய் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை; காரணம், ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது தான்.செல்லாத நோட்டு அறிவிப்பால், சில கட்சிகளும் பாதிக்கப் பட்டுள்ளன.

எம்.எல்.ஏ., 'சீட்' வேண்டுமானால், இத்தனை கோடி கொடுக்க வேண்டும் என்று பணத்தை
வாங்கியுள்ளனர்; தற்போது அது செல்லாததாகி விட்டது. அதனால் தான், அரசின் திட்டத்தை அவர்கள் எதிர்க்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-நவ-201608:17:00 IST Report Abuse

மதுரை விருமாண்டிஅரசியல்வியாதியாதியிடமும் ஏமாறாதீங்க..

Rate this:
Thamaraikannan - Chennai,இந்தியா
21-நவ-201620:39:43 IST Report Abuse

Thamaraikannanவங்கியில் செலுத்தப்படும் பணம் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்திற்கு உட்பட்டதாய் இருப்பின் அது அவரவர் கணக்குகளிலேயே இருக்கும். இதனால் நேர்மையை உழைத்து சேர்த்த இவரின் பணமும் பறிபோகப்போவதில்லை. இத்தகைய திட்டத்தை திடீரென்றுதான் செயல்படுத்த வேண்டும், மாறாக முன்னறிவிப்பு செய்து அமல்படுத்தியிருந்தால் இத்திட்டத்தின் நோக்கமே பயனற்றதாக மாறியிருக்கும். திடீரென்று செயல்படுத்தியதால் ஏழைகளுக்கு சிலபல இன்னல்கள் விளைந்தன என்பது உண்மை, அதை நாம்தான் கடந்து செல்ல வேண்டும். மோடி ஒன்றும் மந்திரவாதி அல்ல, ஒரே நாளில் முழு இந்தியாவையும் மாற்ற. எந்தவொரு நாடும் தனி ஒரு மனிதனால் மாறாது, நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஆதரித்தாலொழிய மாற்றம் மற்றும் முன்னேற்றம் சாத்தியமாகாது. மோடி அவர்களின் இத்திட்டம் உண்மையில் வரவேற்பிற்குரியது. என்னை பொறுத்தவரையில் இத்திட்டத்தை எதிர்ப்போர் மற்றும் குறைகூறுவோர் அனைவரும் கருப்பு பணத்தை வைத்திருப்போர் மற்றும் ஆதரிப்போர் ஆவீர்.

Rate this:
Rangaraj - Coimbatore,இந்தியா
21-நவ-201615:53:24 IST Report Abuse

Rangarajபொறுத்துக்கொள்ளுங்கள் இன்னும் 2 வருடம் 6 மாசம் பாக்கி மோடி என்ன செய்வாரு பாவம் அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தா அறிங்கனும் கோமாளித்தானே முதலில் செய்யவேண்டிய காரியத்தினை பின்னால் செய்வதும் பின்னால்செய்யவேண்டிய காரியத்தினை முன்னாள் செய்வதும் தவறுதான் Modi அவர்களின் திட்டம் சரிதான் நடைமுறை படுத்திய முறை சரியில்லை என்பதே என்போன்ற பலஸ்துடைய கருது இதனால் கள்ள பணம் ஒளிந்து விட்டது என்று நம்ப முடியாது டிசம்பர் 30 வரை பொறுப்போம் இது பொது மக்களாகிய நம் மாற்றமுடியாத thalami எழுத்து

Rate this:
Yogiyan - Connecticut,யூ.எஸ்.ஏ
21-நவ-201623:34:11 IST Report Abuse

Yogiyanஅறிவு களஞ்சியமே..நடைமுறை படுத்திய விதம் சரியில்லை என்று கமெண்ட் அடிப்பது ரொம்ப ஈஸி.. நீதான் ரொம்ப அறிவாளி கொஞ்சம் கரெக்டா செய்யிறது எப்படினு கமெண்ட் கொடுக்கலாம் இல்லையா?...

Rate this:
Hariharan Iyer - Nagpur,இந்தியா
21-நவ-201615:20:26 IST Report Abuse

Hariharan Iyerமோடி எடுத்த தைரியமான முடிவால் கதி கலங்கி போய் இருக்கும் கருப்பு பணம் வைத்து இருக்கும் தேச துரோகிகளும், முஸ்லீம் தீவிரவாதிகளிக்கு துணையாக இருக்கும் இந்திய முஸ்லிம்களும் என்ன செய்வது என்று தெரியாமல் முட்டாள் தனமாக பிதற்றுகிறார்கள். மல்லையாவின் கடன் தள்ளிப்படி செய்யப்படவில்லை. write off என்றல் என்னவென்று தெரியாத முட்டாள்களுக்கு write off என்பது எங்களால் கடனை வசூல் செய்யமுடியவில்லை ஆகையால் கடன் வாங்கியவர்கள் மீது அரசாங்கம் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கடன் வாங்கியவர்கள் பட்டியலை அரசாங்கங்கத்திடம் பரிந்துரை செய்வதுதான். ஏற்கனவே அரசாங்கம் மல்லையாவின் 10000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டது இந்த நாதரிகளுக்கு தெரியாது போல. அதுவும் முஸ்லிம்களுக்கு மோடி என்றால் என்ன பயம் என்று தெரியவில்லை. தப்பு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் மோடியிடம் இருந்து தப்ப முடியாது.

Rate this:
Ashokraj Raja - chennai,இந்தியா
21-நவ-201614:47:07 IST Report Abuse

Ashokraj Rajaமோடி இந்தியாவிற்கு கிடைத்த மகா பொக்கிஷம் ..............

Rate this:
21-நவ-201614:43:16 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்மக்களுக்கும் பொறுப்புணர்வு வரவேண்டும். நமக்காக செயல்படுத்தப்படும் திட்டம் நாமே அதை கெடுக்கலாமா ?

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
21-நவ-201614:42:21 IST Report Abuse

ganapati sbஅனைத்தும் திறம்பட நடக்க கொஞ்சமாவது நேர்மையோடு செயல்படும் மாவட்ட கலெக்டர்களையெல்லாம் கூட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் செயல்களை நெருக்கமாக நேர்மையாக கண்காணிக்க செய்ய வேண்டும்

Rate this:
eshwar - chennai,இந்தியா
21-நவ-201614:13:15 IST Report Abuse

eshwarஇதெல்லாம் கருப்பு பணம் என்றால் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்திய அரசாங்கம் எத்தனையோ கோடிகளை வாராக்கடன் என்று தள்ளுபடி செய்து இருக்கின்றது பல பெரிய முதலாளிகளுக்கு. அந்த அரசாஙக பணமெல்லாம் இப்பொழுது தனியாரிடத்தில் அதுவும் இப்பொழுது கருப்பு பணம்தானே?

Rate this:
21-நவ-201613:01:52 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இந்த விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நமக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. இங்கு சிலர் மத காழ்ப்புணர்ச்சி கொண்டு உளறுவதை புறம் தள்ள வேண்டும். பிரதமர் அனைவருக்கும் சேர்த்து தான் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். நாளை விலைவாசி குறைந்தால் நீங்களும் தான் அனுபவிப்பீர்கள்.

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
21-நவ-201612:55:39 IST Report Abuse

கும்புடுறேன் சாமிநாங்க ஏமாறது இருக்கட்டும் நீங்க ஏமாறாதீங்க மோடி உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொன்னிங்கள்ல அதிலிருந்து தப்பிக்க பாருங்க

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement