'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? | 'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார் Dinamalar
பதிவு செய்த நாள் :
'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்?
அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார்

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக,
500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என,
அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த அதிரடி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளிக்க உள்ளது.

 'ஜன்தன்' கணக்குகளில் ரூ.10 ஆயிரம் டிபாசிட்? அடுத்த அதிரடிக்கு பிரதமர் தயார்

கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என, சமீபத்தில், பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு, வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; பல்வேறு
கட்டுப்பாடுகளால் மக்களும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசுக்கு
எதிரான விமர்சனங்களை தவிடு பொடியாக்க வும், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகை யிலும், புதிய அறிவிப்பை பிரதமர் மோடி விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில நாட்களில்


அதாவது, கணக்கில் எந்த இருப்பும் இல்லாத, ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு, தலா 10 ஆயிரம்

ரூபாய் டிபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளது; அடுத்த சில நாட்களில், இதற்கான அறிவிப்பு வெளி யாகும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜன்தன் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டது. அவ்வாறு துவக் கப்பட்ட, 25 கோடி கணக்குகளில், 5.8 கோடி கணக் குகள், ஒரு ரூபாய் கூட கணக்கில் இருப்பில் இல்லாத கணக்குகளாக துவக்கப்பட்டன.

இந்த, 5.8 கோடி கணக்குகளில், தலா, 10 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்கும் வகையில், மத்திய அரசு டிபாசிட் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தற்போதைய அறிவிப்பால், நாட்டில் மக்களி டையே ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், எதிர்க்கட்சி களின் விமர்சனத்தையும் சமாளிக்க முடியும்.

காங்., விமர்சனம்


கடந்த லோக்சபா தேர்தலின் போது, வெளிநாடு
களில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வந்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என, மோடி அறிவித் திருந்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. இந் நிலையில், கறுப்புபணத்தை ஒடுக்கும் நட வடிக்கை யாக, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஜன்தன் வங்கிகணக்கில், பணத்தை டிபாசிட் செய்வதன் மூலம், தன் தேர்தல் வாக்குறுதி களை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்பதை மக்களிடையே கொண்டு செல்ல முடியும்.

எப்படி சாத்தியம்?


ஜன்தன் வங்கி கணக்குகளில், தலா, 10 ஆயிரம்

Advertisement

ரூபாய் டிபாசிட் செய்யும் திட்டத்துக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இருப்பி னும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளியே வரும் என, மத்திய அரசு எதிர்பார்க் கிறது. அதில் இருந்து, இந்த பணம் டிபாசிட் செய்யப்படலாம்.

இதன் மூலம், மேல்தட்டு மக்களுக்கான கட்சி என்பதில் இருந்து விலகி, சாமானிய, ஏழை, எளிய, விவசாயிகளுக்கான கட்சியாக, பா.ஜ., தன்னை முன்னிலைப்படுத்த முடியும்.

ஆனந்த அதிர்ச்சி


மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தவும், தன் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடரவும், இந்த திட்டம் வெகுவாக உதவும் என, மோடி உறுதியாக நம்புகிறார்.

அதன்படி, ஜன்தன் வங்கிக் கணக்கில், தலா, 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என்ற ஆனந்த அதிர்ச்சி திட்டம் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Monikumar Ramakrishnan - doha,கத்தார்
21-நவ-201623:03:14 IST Report Abuse

Monikumar RamakrishnanIt is better to clear world bank debts rather than depositing in people accounts.The way to strengthen our Indian currency is the best way. Or spend the money only for infrastructure and education.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
21-நவ-201620:18:56 IST Report Abuse

r.sundaramஏழை என்றவுடன் ரூபாய் 10000 கணக்கில் வரவு வைப்பது என்பது மூடத்தனம். இந்த உலகில் எதுவுமே சும்மா வராது என்பது உண்மை. இவர்களுக்கு சும்மா ரூபாய் 10000 கொடுப்பதாய் இருந்தால் அதை வேறுஒருவர் அரசாங்கத்துக்கு ஈடு கட்டுகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். காரணமே இல்லாமல் சும்மா ஒருவரிடம் இருந்து எடுத்து அடுத்தவரிடம் கொடுப்பது தப்பு. இதன்பிறகு வாங்கினவர்களின் எதிர்பார்ப்பு கூடும்.பின் அவர்களை சமாளிப்பது சிரமம். அதனால் ஒரு அரசாங்கம் இந்த மாதிரி ஒரு திட்டத்தை அமுல் படுத்துவது தவறு.

Rate this:
Indian Tamilan - Trichy,இந்தியா
21-நவ-201619:42:28 IST Report Abuse

Indian Tamilanபெற்றவர்கள் மகிழ்வதை விட .... பெறாதவர் எரிச்சல் ???

Rate this:
Indian Tamilan - Trichy,இந்தியா
21-நவ-201619:40:41 IST Report Abuse

Indian Tamilanடோல் கேட் அனைத்தையும் இலவசம் ஆக்கலாம்

Rate this:
Sekar KR - Chennai,இந்தியா
26-நவ-201600:39:48 IST Report Abuse

Sekar KRடோல் கேட்டை இலவசமாய் ஆக்கினால் மட்டும் போதாது நல்லமுறையில் பராமரிக்க வேண்டும்....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-நவ-201616:55:08 IST Report Abuse

Nallavan Nallavanஐந்நூறு, ஆயிரம் வாபஸ் என்ற முடிவை அறிவிக்க வேண்டியது ரிசர்வ் வங்கி நிர்வாகம் .... பணம் மாற்றுதல் அல்லது அபராதம் கட்டி வெள்ளையாக்குதல் இதையெல்லாம் முறையாகச் செய்யாமல் தகிடுதத்தம் செய்பவர்களைக் கண்காணித்துப் பிடிக்க வேண்டியது / விசாரித்து அபராதம் போட வேண்டியது வ.வ.துறை, வங்கி அதிகாரிகள், காவல்துறை கூட்டணி .... இதில் பிரதமருக்கே வேலை இல்லை (அப்ரூவல் வேண்டுமானால் அவரது பணியாக இருக்கலாம்) ..... மக்களிடம் "கருப்புப்பண ஒழிப்பில் என்னை அர்பணித்துக்கொண்டேன்" என்ற நல்ல பெயரும் எடுக்கணும் .... "அதனால என்னைக் கொல்லப்பாக்குறாங்க" என்று இரக்கத்தைச் சம்பாதிக்க புலம்பவும் செய்யணும் .... எதிர்க்கட்சிகள் போராட்டம் என்று இறங்கி மக்களை சந்தித்துவிட்டாலும் கோபம் வருது என்ற நிலைப்பாடு நோகாம நொங்கு தின்கிற ஆசையைத்தான் காட்டுது ....

Rate this:
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
21-நவ-201616:42:31 IST Report Abuse

Selvaraj Thiroomalஅரசே மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்போகிறது வழிக்கு வரவைக்கவா அல்லது வழிக்கு வந்ததற்கா ??? நிதி குவிந்ததால் நாட்டில் செய்யவேண்டிய எண்ணற்ற அடிப்படை வேலைகள் பாக்கியுள்ளன,, அடைக்கப்படவேண்டிய கடன்கள் ஏராளம்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-நவ-201616:35:14 IST Report Abuse

Pugazh Vவட்டார செய்தி என்வதே கற்பனை செய்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் மக்களை இது பிகிச்சைக்காரன் ஆக்குகின்ற செயல் இல்லியா? மோடி ஜாலராக்கள் தான் மூளையைக் கழட்டி வெச்சு பல வருஷம் ஆறாதே அதான், நல்ல திட்டம், வந்தேமாத்தரம் - வந்து ஏமாத்தறோம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-நவ-201616:33:12 IST Report Abuse

Pugazh Vமிக்சி கிரைண்டர் இலவசமா குடுத்ததுக்கே, ஆஹா மக்களை பிச்சைக்காரன் ஆக்குறாங்க, சோம்பேறி ஆக்குறாங்க என்று கூவிய கூட்டம் எப்படித் தான் மனசாட்சியை யில்லாமல், இப்படி மக்களுக்கு லவசமா பணத்தையே கொடுத்து நிஜமாகவே பிச்சை போடுவதை நல்ல திட்டம் என்று எழுதுகிறார்கள்? படிப்பறிவுடன் தான் ஜீவிக்கிறார்களா ??//தைரியம் இருந்தால் இந்தக் கருத்தைப் போடுங்களேன், வாசக ஜாலராக்கள் என்ன தான் சொல்லுதுன்னு பார்ப்போம்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-நவ-201614:35:28 IST Report Abuse

Malick Rajaகெட்டிக்க்காரன் சமைத்து எட்டுநாள் என்று சொன்னது உண்மையாகும்... மனிதர்களில் வெகு சிலர் தனது சாவை நினைப்பதில்லை ஆனால் பெரும்பாலோர் தமது இறப்பை marappathillai.. இறப்பை மறந்தவன் ஆடும் ஆட்டம் வெகு விரைவில் அடங்கும்

Rate this:
T.G.Balaguru - Rajapalayam(Residency at Bhimavaram,இந்தியா
21-நவ-201614:33:17 IST Report Abuse

T.G.Balaguruநாட்டில் எத்துணையோ பிரச்சனைகள் இருக்கிறது. நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. நதிநீர் இணைப்பிற்கு பயன் படுத்தினால். மக்கள் அரசுக்கு பணம் டெபாசிட் செய்வார்கள். அரசு மக்களுக்கு பணம் டெபாசிட் செய்யவேண்டிய அவசியம் இல்லை, தமிழ் நாட்டில் திராவிடக்கட்சிகள் செய்யும் தப்பான விஷயத்தை, தற்பொழுது மத்திய அரசு செய்வது தான் வேதனைக்குரிய விஷயம். கருப்புப்பணத்தை மீது முன்னேற்றப்பணிகளுக்கு பயன்படுத்தாமல், அதை மறுபடியம் கறுப்பாகவே மக்களிடம் கொடுக்கிறார்கள். அணைகட்டவேண்டிய இடத்தில ஆணை கட்டுவதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு மக்களுக்கு பிச்சை போட்டு மக்களை கையேந்தி நிற்கவைத்துவிடாதீர்கள்

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement