பாலியல் வழக்கில் ஜாமின் பெற்ற மதபோதகர் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கில் ஜாமின் பெற்ற மதபோதகர் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : நவ 22, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெற்ற மத போதகர் சாம் ஆரோன் மீது, மேல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஷைக்கினா அசெம்பளி சபை மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: நாமக்கல் குப்பம்பாளையத்தில், ஷைக்கினா அசெம்பிளி சபை உள்ளது. அதன் போதகராக சாம் ஆரோன் என்பவர், கடந்த, 20 ஆண்டுகளாக இருந்து வந்தார். கடந்த, 2015ல், நிர்மலா என்ற பெண், அவரது வீட்டில், வேலைக்கு சேர்ந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய, போதகர் முயற்சி செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார், கடந்த, மார்ச், 17ல், அவரை கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தவர், சபை மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வருகிறார். இதுவரை, அவ்வழக்கின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது, மீண்டும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை