Bala Murali Krishna passes away | ‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்'': பாலமுரளி கிருஷ்ணா மறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்'': பாலமுரளி கிருஷ்ணா மறைவு

Updated : நவ 23, 2016 | Added : நவ 22, 2016 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
‛‛சின்னக்கண்ணனை அழைத்துக்கொண்ட இறைவன்'': பாலமுரளி கிருஷ்ணா மறைவு

சென்னை : பத்மவிபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரான பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியில், சங்கரகுப்தம் என்ற ஊரில், பட்டாபி ராமைய்யா - சூரியகாந்தம் தம்பதியருக்கு 1930ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பிறந்தவர். அப்பா-அம்மா இருவருமே இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். பட்டாபி ஒரு இசை ஆசான். சூரியகாந்தம் ஒரு வீணை கலைஞர். பாரம்பரியமிக்க இசை குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பாலமுரளி கிருஷ்ணா, பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பவரிடம் முறைப்படி இசை பயின்றார்.


முதுபெரும் கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் காலமானார்

9 வயதில் பல வாத்தியங்களில் தேர்ச்சி :

தனது 6வது வயதிலிருந்து கச்சேரிகளில் பாட தொடங்கினார். 9 வயதில் வாய்பாட்டு இல்லாமல் வயலின், மிருதங்கம், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றார்.


பிரபலங்களுக்கு வயலின் கலைஞர் :

வானொலியில் முதன்முதலில் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் ‛பக்தி மஞ்சரி' என்ற நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி, செம்பை, மகாராஜபுரம், ஜி.என்.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணி பாடகர்களுக்கு வயலின் கலைஞராக பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.


25 ஆயிரம் இசைக்கச்சேரி :

தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-ம் ஆண்டு ‛பக்த பிரகலாதா' என்ற படத்தில் நாரதர் வேடத்திலும், சந்தினே செந்தின சிந்தூரம்(மலையாளம்) படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.


72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் :

கர்நாடக சங்கீதத்தில் எண்ணற்ற ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகம் என்று சொல்லப்படும் தாய் ராங்கள் 72 தான். இந்த 72 மேலகர்த்தா ராகங்களில் கிருத்திகள் இயற்றி சாதனை படைத்துள்ளார். கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது பல அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயக்கும் திறன், ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் ஜூகல்பந்தி என்ற இசையில் பல்வேறு பரிமாணங்களில் வல்லவர். மேடைகச்சேரி, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் பிரதிபலித்தவர்.


புதிய ராகங்களை உருவாக்கியவர் :

சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள், மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்றே சுவரங்கள்), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே, மோகன்காந்தி... இப்படி பல புதிய ராகங்களை உருவாக்கியவர்.


இசை பயின்றவர்கள் :

பி.ஜெயச்சந்திரன், கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, டிஎம் சுந்தரம்(இசை ஆராய்ச்சியாளர்) உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரிடம் இசை பயின்றவர்கள்.


இசையமைப்பாளர் :

சந்தியராகா (கன்னடம்), சங்கரச்சாரியா (சமஸ்கிருதம்), மாத்வாச்சாரியா (கன்னடம்), ராமானுஜசாரிய (தமிழ்), தலைவனுக்கோர் தலைவி 0(தமிழ்) போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட கர்நாடக பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.
கே.வி.மகாதேவன், இளையராஜா, எம்எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல தமிழ் படங்களின் இசையமைப்பாளர்களின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல தென்னிந்தியாவில் பிரபலமாக திகழ்ந்த பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.


விருதுகள் :

இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதையும், இரண்டு முறை தேசிய விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே , சங்கீத கலாநிதி (1975), சங்கீத கலாசிகாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


பாலமுரளி கிருஷ்ணாவின் பிரபல தமிழ் பாடல்கள் :

தமிழில் ‛திருவிளையாடல்' படத்தில் இவர் பாடிய ‛ஒரு நாள் போதுமா....', ‛கவிக்குயில்' படத்தில் ‛‛சின்ன கண்ணன் அழைக்கிறான்...', ‛கலைக் கோயில்' என்ற படத்தில், ‛‛தங்கம் ரதம் வந்தது வீதியிலே...'', ‛சாது மிரண்டால்' படத்தில் ‛‛அருள்வாயே நீ அருள்வாயே...'', ‛சுபதினம்' படத்தில் ‛‛புத்தம் புது மேனி...'', ‛கண்மலர்' படத்தில் ‛‛ஓதுவார் உன் பெயர் ஓதுவார்...'', ‛உயர்ந்தவர்கள்' படத்தில் ‛‛ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே...'', ‛நூல் வேலி' படத்தில் ‛‛மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே....'', ‛திசைமாறிய பறவைகள்' படத்தில் ‛‛அருட்ஜோதி தெய்வம்...'', ‛வடைமாலை' படத்தில், ‛‛கேட்டேன் கண்ணனின் கீதோ உபதேசம்...'', ‛தெய்வத்திருமணங்கள்' படத்தில் ‛‛தங்கம் வைரம் நவமணிகள்...'', ‛மகாசக்தி மாரியம்மன்' படத்தில், ‛மகரந்தம் தான் ஊதும், சக்கரவர்த்தி மிருதங்கம் படத்தில், ‛‛கேட்க திகட்டாத கானம்...‛, ‛இசைப்பாடும் தென்றல்' படத்தில் ‛‛ரகுவர நின்னோ...'' போன்ற பாடல்கள் கேட்க கேட்க என்றும் திகட்டாதவை.
பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னை, ஆர்கேவி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு பல கர்நாடக இசை பிரபலங்கள், திரையுலகினர்... என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amma_Priyan - Bangalore,இந்தியா
23-நவ-201608:06:50 IST Report Abuse
Amma_Priyan ராக்கம்மா பாட்டுக்கும் ராகமா பாட்டுக்கும் வித்யாசம் கொண்டுவந்தவர்...
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
23-நவ-201605:21:09 IST Report Abuse
mohankumar ஆத்ம சாந்தி அடைய வாழ்த்துவோம்
Rate this:
Share this comment
Cancel
babugj - NY,யூ.எஸ்.ஏ
23-நவ-201600:53:17 IST Report Abuse
babugj கண்ணன் அழைத்துக் கொண்டான் இந்தச் சின்னக் கண்ணனை. இவரின் ஆன்மா இறைவனுடன் இன்புற்றிருக்க பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-நவ-201600:50:22 IST Report Abuse
Kasimani Baskaran ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
22-நவ-201623:26:45 IST Report Abuse
Devanand Louis கர்நாடகா இசையில் முடிசூடாமனனன் அமரர் பாலமுரளி கிருஷ்ணா ஒரு சிறந்த கலைஞர் ,அவரது மறைவு இசைத்துறைக்கு பேரிழப்பு ,அவரது ஆத்மா சாந்தி அடைய எங்களின் பிராத்தனைகள்
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
22-நவ-201623:23:21 IST Report Abuse
vidhuran கர்னாடிக் இசையை முறையாக கற்றவன் என்ற முறையில் இந்த மஹா விதவானைப் பற்றி நன்கு அறிவேன். 18-அம நூற்றாண்டில் வாழ்ந்த மும்மூர்த்திகளை பற்றி கேட்கிறோம், ஆனால் அவர்களுக்கு அடுத்த நிலையில் என்று சொல்லலாம் இந்த மஹானை. செம்பை, செம்மங்குடி, DK, ML, MS போன்றோர் செய்யாத காரியத்தை இவர் செய்திருந்தாலும், இவர் 10 -க்கு மேற்பட்ட புதிய ராகங்கள், புதிய தாள முறைகளையும், 100 -க்கணக்கான க்ரித்தி, தில்லானா போன்றவற்றை இந்த சாஸ்த்ரீய சங்கீத உலகத்திற்கு தந்திருந்திலும், இவர் ஆந்திராவை பிறப்பிடமாக கொண்டதாலோ என்னவோ இவர் மேற்கண்ட மற்ற இசை மேதைகளை போல புகழ் பெறவில்லை என்று தான் சொல்லணும். பண்டிட் பீம்சென் ஜோஷி, ஹரிப்ரசாத் சௌராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசை மேதைகளோடு சிரமமே இல்லாது ஜுகல்பந்திகளை அனாசியமாக செய்திருக்கிறார். தெலுங்கிலும் தமிழிலும் கடுமையான மறக்கமுடியாத சினிமா பாடல்களை பாடியிருந்தாலும், இந்த மகானின் தியாகராஜ-பஞ்சரத்ன கீர்த்தனைகளை கர்னாடிக் உலகில் மறக்க முடியாத ரெபர்ன்ஸ் பொக்கிஷங்கள் என்று கூட சொல்லலாம். இவரைப் போன்றோருக்கு பாரத்ரத்னா கொடுக்கவில்லை என்றால், பாரதரத்னா விருதுக்குத் தான் இழுக்கு. இம்மஹானின் இசை எனது குடும்பத்தில் எப்பொழுதும் ஒலிக்கும், இம்மேதையின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
22-நவ-201623:21:59 IST Report Abuse
R.Subramanian சில நாட்களுக்கு முன்பு தான் 'சின்ன கண்ணன் அழைக்கிறான்' பாடலை முதல் முறையாக கேட்டேன், பால முரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் இளையராஜா இசையில் பாடல் அற்புதமாக இருந்தது ( இன்று வரையில் விடாமல் கேட்டு கொண்டு இருக்கிறேன் ) அவர் ஏன் அதிகமாக சினிமாவில் பாடவில்லை என்று தெரியவில்லை. பால முரளி கிருஷ்ணா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-நவ-201603:46:39 IST Report Abuse
Sanny பாலமுரளி கிருஷ்ணனா அவர்களை சின்னக்கண்ணன் அழைத்துவிட்டார், அவர் கர்னாடக இசை, மற்றும் தனது இசை திறமையை சினிமாவுக்காக பாடி சம்பாதிக்க விரும்பவில்லை, அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் பாடல்கள் காலத்தால் அழியாதது....
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
22-நவ-201623:16:01 IST Report Abuse
S Rama(samy)murthy எனக்கு மிகவும் பிடித்த பாடல் சின்ன கண்ணன் ....... ஆத்மா சாந்தியடையட்டும்
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201623:00:00 IST Report Abuse
Kathirvel,Mylapore RIP
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
22-நவ-201622:57:16 IST Report Abuse
Jesudass Sathiyan பூத உடல் நீத்து புகழுடல் எய்தினார். இசையில் சாதனை பல செய்தவர். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை