இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

Added : நவ 25, 2016 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


சென்னை: இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும். இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
26-நவ-201611:23:40 IST Report Abuse
அம்பி ஐயர் இதே போல முஸ்லிம் சமய அற நிலையத் துறை, கிறிஸ்தவ சமய அற நிலையத் துறை மற்றும் இன்ன பிற மத அற நிலையத் துறைகளை ஏற்படுத்தி மற்ற சிறுபான்மையினராக உள்ள மதத்தினருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....இது இந்துக்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.... மதச் சார்பற்ற அரசாங்கம் என்று வாய்கிழியப் பேசும் அரசியல்வாதிகள் இதற்குச் செவி மடுப்பரா...?? அந்த மதத்தினர் தான் ஒத்துக்கொள்வார்களா....??? அல்லது இந்துக் கோவில்களை இந்துக்களிடமே ஒப்படைத்துவிடுங்கள்.... ஆர்.எஸ்.எஸிடம் ஒப்படைத்து விடுங்கள்.... ஆக்கிரமிப்புகள், கொள்ளைகள் குத்தகை பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்....
Rate this:
Share this comment
Samraj - Trichy,இந்தியா
26-நவ-201620:39:41 IST Report Abuse
Samrajவிரக்தியால் மாற்றம் ஏற்படாது.உரிமையை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
26-நவ-201609:52:20 IST Report Abuse
Chandramoulli எல்லாம் கண்துடைப்பு நாடகம் .
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-நவ-201609:32:36 IST Report Abuse
Kasimani Baskaran சர்ச் மற்றும் மசூதிகளையும் கூட அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
26-நவ-201607:17:09 IST Report Abuse
K.Sugavanam நல்லசெய்தி..வேலை இல்லா திண்டாட்டம் குறையும்..
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-நவ-201611:34:35 IST Report Abuse
Nallavan Nallavanதேர்வு எழுதத் துணிவோரை அளவில் கூட்டவே அதிக அளவில் காலியிடங்களை அறிவிப்பார்கள் (அனைத்து மத்திய மாநில அரசுத் தேர்விலும், வங்கி, ரெயில்வே -க்களிலும் இதே நிலைதான்) ..... அதற்குப் பின்னர் நடப்பதெல்லாம் நீங்கள் அறியாததல்ல ..... படித்து முடித்து, பல போட்டித் தேர்வுகளை எழுதிய எனக்கு இந்த உண்மைகளை அறியவே சில ஆண்டுகள் பிடித்தன ........
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
26-நவ-201606:43:49 IST Report Abuse
Ray ஏல அறிவிப்பு
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
26-நவ-201605:58:24 IST Report Abuse
குரங்கு குப்பன் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு உண்டா, பணம் கிடைக்கிறது என்றால் பி-மும் வாயை பிளக்கும் என்று சொல்லுவார்கள்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-நவ-201608:00:10 IST Report Abuse
Nallavan Nallavanஇந்துவாக இருப்பவர் மட்டுமே எழுதக்கூடிய தேர்வு இது ........
Rate this:
Share this comment
Arsath Ali - Malaysia,மலேஷியா
26-நவ-201609:43:41 IST Report Abuse
Arsath Aliநல்லவன் அவர்களே...ஐந்து அறிவு கொண்ட குரங்குக்கு இந்த தேர்வு எழுத என்ன தகுதிகள் என்று எப்படி தெரியும்... நடப்பது இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலருக்கான தேர்வு.....
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
25-நவ-201621:42:21 IST Report Abuse
Ramesh Sundram இந்த பதவிக்கு முக்கியம் நாத்திகனாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு கழகத்தோடு தொடர்பு இருக்க வேண்டும். லஞ்சம் வாங்க தெரிய வேண்டும். ஊழல் செய்ய தெரிய வேண்டும். அரசியல் வியாதிகளுக்கு மாமா வேலை செய்ய வேண்டும். கோயில் உண்டியல் பக்தி மட்டுமே இருக்க வேண்டும். முடிந்த வரை கோயில் சொத்துக்களை அபேஸ் செய்ய வேண்டும். இது எல்லாம் இருந்தால் இந்த பதவி ஓகே
Rate this:
Share this comment
Cancel
25-நவ-201621:37:11 IST Report Abuse
செண்மதுரை இந்த அறிவிப்பு இந்து அறநிலையத்துறைக்கு என்பதை நினைவில் வைத்து இந்துக்களை மட்டுமே எடுக்கணும்.... அனைவரையும் எடுக்கலாம் என்றால் அனைத்து அரசு உதவி பெறும் மாதம் சம்பந்தப்பட்ட அலுவலகபதவிகளுக்கும் இந்துக்களையும் எடுக்கலாம் என்ற நிலை வேண்டும்.....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-நவ-201607:59:26 IST Report Abuse
Nallavan Nallavanஇந்தத் தேர்வுக்கு உள்ள அடிப்படை விதிகளில் ஒன்று தேர்வு எழுதுபவர் இந்துவாக இருக்க வேண்டும் என்பதே ........
Rate this:
Share this comment
Arsath Ali - Malaysia,மலேஷியா
26-நவ-201609:47:10 IST Report Abuse
Arsath Aliநடப்பது இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலருக்கான தேர்வு.. சென் மதுரை, முதலில் தினமலர் இந்த கட்டுரையில் ://www.tnpsc.gov.இந்த லிங்கை போட்டு உள்ளார்கள். இதை கிளிக் பண்ணி விபரத்தை தெரிந்து கொள்ளுங்கள். நல்லவனுடைய கருத்தையும் படிங்க .. முதலில் இந்த பதவிக்கு தலித் ஒருவரை தேர்ந்து எடுப்பார்களா?...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-நவ-201619:52:54 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ முதலில் இந்த பதவிக்கு தலித் ஒருவரை தேர்ந்து எடுப்பார்களா?... //// தலித்து மட்டுமல்ல, இந்தப் பதவிகளிலும் இட ஒதுக்கீடு உண்டு ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை