NIA arrests 4 suspected al-Qaeda operatives who were planning to kill PM Modi | அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில் சிக்கினர்: பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்  சிக்கினர்:  பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்

அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய அதிரடியில் சிக்கிய இக்கும்பல், பிரதமர் உட்பட, 22 முக்கிய தலைவர்களை கொல்ல, சதித் திட்டம் தீட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

அல் - குவைதா அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் மதுரையில்  சிக்கினர்:  பிரதமர் உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி செய்ததாக தகவல்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஆதரவாளர்கள் சமீப காலமாக பெருகி வருகின்றனர். அக்டோபர், 1ல், கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் கண்ணுார் நகரங்களில், சதிச் செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்த, ஆறு பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.
அவர்களுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், சிரியாவில் நடந்த போரில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரிய வந்தது. அவர்களில், சென்னை, கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்த சுவாலி முகம்மது; கோவை, உக்கடத்தைச் சேர்ந்த அபு பஷீர் மற்றும் திருநெல்வேலி, கடையநல்லுாரைச் சேர்ந்த சுபுஹானி ஹாஜா மைதீன் ஆகிய மூவரும் அடக்கம். அதனால், அதிர்ச்சி அடைந்த, தமிழக போலீசார், கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
ஆனால், அவர்கள் கண்ணில் மண்ணைத் துாவி, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் - குவைதாவுடன் தொடர்புடைய, நான்கு பேர், மதுரையில் இருந்தபடி, சதிச் செயல்களில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

சர்வதேச பயங்கரவாதி, சுட்டுக் கொல்லப்பட்ட, ஒசாமா பின்லேடனின், அல் - குவைதா ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருப்பதை மோப்பம் பிடித்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள், மதுரையில் ரகசிய விசாரணை

மேற்கொண்டனர்; அவர்கள் எடுத்தஅதிரடி நடவடிக்கையில், நேற்று மதியம், பயங்கரவாதிகள் சிக்கினர்; இதை, டில்லியில் உள்ள, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

'பென் டிரைவ்'


இது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடக மாநிலம், மைசூரு நீதிமன்ற வளாகத்தில், ஆக., 1ல் நடந்த குண்டு வெடிப்புதாக்குதல் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த தாக்குதலுக்கு, அதுவரை கேள்விப்பட்டிராத, 'தி பேஸ் மூவ்மென்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த துண்டு பிரசுரங்களில், அத்தகவல் காணப்பட்டது. கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும், 'பென் டிரைவ்' மூலம், அவர்கள் தகவல்களை பரப்பி வந்துள்ளனர்.
இது போன்ற துண்டு பிரசுரங்கள், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்களிலும் காணப்பட்டன. இது பற்றி, 20ம் தேதி, வழக்குப் பதிவு செய்தோம். பின், தெலுங்கானா மற்றும் தமிழக போலீசாருடன் இணைந்து, மதுரையில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போது, நான்கு பேர் சிக்கினர்.
அவர்கள், மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரம், நான்காவது தெருவில் வசித்த, அப்பாஸ் அலி, 27; கரீம்ஷா பள்ளிவாசலைச் சேர்ந்த, சுலைமான், 23; கே.புதுார், விஸ்வநாத நகர், ராமு கொத்தனார் வளாகத்தைச் சேர்ந்த, சம்சுன் கரீம் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேல் விசாரணை


மேலும், மதுரை, ஐலேண்ட் நகரைச் சேர்ந்த, காது கேட்கும் கருவி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, அயூப் அலி என்பவனிடம் விசாரணை நடக்கிறது; அவன் கைதுசெய்யப்படவில்லை. கைதான மூன்று பேரிடம் இருந்து, 'மொபைல் போன், ஹார்ட் டிஸ்க்'

Advertisement

போன்ற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட, மூன்று பேர், சென்னை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேல் விசாரணைக்காக, பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்குள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், இந்த நான்கு பேரும், பிரதமர் உட்பட, 22 முக்கிய தலைவர்களை கொல்ல சதி செய்த தகவல் கிடைத்துள்ளது. அது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கும்பல் தலைவன் சாப்ட்வேர் இன்ஜினியர்

மதுரையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில், ஒருவனான சுலைமான், தற்போது சென்னையில் வசித்தவன். அவன், சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தான். அவன் தான், இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளான்.
அப்பாஸ் அலி, எட்டாம் வகுப்பு படித்துள்ளான்; பெயின்டராக வேலை செய்து வந்தான். அவன், இஸ்லாமிய நுாலகம் ஒன்றை நடத்தினான்.சம்சுன் கரீம் ராஜா, பி.காம்., படித்தவன். மதுரையில் கோழிக்கறிக் கடை நடத்தியவன்.

பயங்கரவாதிகளின்வெடிகுண்டு தாக்குதல்


* கடந்த, ஏப்., 4ல், ஆந்திர மாநிலம், சித்துார், மாவட்ட நீதிமன்ற வளாகம்
* ஜூன், 15ல், கேரள மாநிலம், கொல்லம், முதன்மை தலைமை ஜுடிஷியல் நீதிமன்றம்
* ஆக., 1ல், மைசூரு நீதிமன்ற வளாகம், கர்நாடகா
* செப்., 12ல், நெல்லுார், ஆந்திர மாநிலம்
* நவ., 1ல், நீதிமன்ற கழிப்பறை, மலப்புரம், கேரளா
இந்த இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், இந்த கும்பல் ஈடுபட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. - நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
29-நவ-201621:00:37 IST Report Abuse

நிலாசில வருடங்களுக்குமுன்பு திருமங்கலத்தில் முகமது அலி .... மசூதி முன்பு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு... அத்வானி வந்த பாலத்தில் வெடிகுண்டு மதுரை இவர்கள் பாசறையாக இருக்குமோ??? இப்போது எல்லாம் மதுரையில் தான் நடக்கிறது மத்திய அரசு மதுரையில் உள்ள அனைத்து இடங்களை தீவிரமாக சோதனை செய்ய வேண்டும்

Rate this:
நிலா - மதுரை,இந்தியா
29-நவ-201620:46:36 IST Report Abuse

நிலாஏன் இவர்கள் இப்படி மதவெறியர்களாக இருக்கிறார்கள்????? இந்த கேவலமான காரியத்துக்கு இந்த மதம் துணை போகிறதா???

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-நவ-201618:26:19 IST Report Abuse

Vijay D Ratnamஐயோ ஐயோ இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்த மோடி அரசாங்கம் இப்படி கைது பண்றங்களேன்னு மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், அதுங்கள அண்டி ஈன பொழப்பு நடத்துற அல்லைக்கைகள்ன்னு கெளம்பிடாதீங்கய்யா. தேசிய புலனாய்வு துறையிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். கொண்டு போய் வைத்து நிதானமாக தயவு தாட்சண்யம் இல்லாமல் இஸ்ரேலிய பாணியில் அணுஅணுவாக சிதைத்து சித்திரவதையின் உச்சத்தை காட்டி மொத்த சதித்திட்டத்தையும் வெளிக்கொண்டு வரவேண்டும். இப்பல்லாம் உயிர் போகாமல் கொடூரமாக சித்திரவதை செய்ய எலக்ட்ரானிக், லேசர் மெஷினெல்லாம் இருக்குதாம்ல.

Rate this:
மேலும் 108 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X