சிலை கடத்தல்: 2 தொழில் அதிபர்கள் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிலை கடத்தல்: 2 தொழில் அதிபர்கள் கைது

Added : நவ 29, 2016 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிலை கடத்தல், நெல்லை, பழவூர், நாறும்புநாதர்

சென்னை: நெல்லை கோவில் சிலைகள் கடத்தல் வழக்கில், இரண்டு தொழில் அதிபர்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சிலை கடத்தல் வழக்கில் சில மாதங்களுக்கு முன் சென்னையில் தீனதயாளன் என்பவனை சிலை கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து, அவன் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகளையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நெல்லை, பழவூர், நாறும்புநாதர் கோவிலுக்கு, சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சிலை வியாபாரிகள், சாமி கும்பிடுவது போல சென்றனர். அங்கு இருந்த அபூர்வமான ஆனந்த நடராஜர் சிலை கட்டாயம் வேண்டும் என வெளிநாடு வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுபாஷ் சந்திர கபூரும், தீனதயாளனும் கூலியாட்கள் மூலம், அந்த கோவிலில் இருந்து 13 சிலைகளை கடத்தினர். இந்த வழக்கில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மானிக்கவேல், சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:


15 கோடி ரூபாய் மதிப்பு:

இது பழைய வழக்கு. 2005ல் நெல்லை, பழவூர் கோவிலில் 13 சிலைகளை கடத்தினர்.அதில் நான்கு சிலைகள் வெளிநாட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் தொடர்புடைய தொழில் அதிபர்கள் ஆதித்திய பிரகாஷ், வல்லப பிரகாஷ் ஆகியோரை மும்பையில் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை உள்ளிட்ட நான்கு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும், மும்பையில், ‛இந்தோ - நேபாள் ஆர்ட் சென்டர்' என்ற நிறுவனத்தை கடந்த 1959 முதல் நடத்தி வந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
29-நவ-201620:55:03 IST Report Abuse
Rangiem N Annamalai எங்கள் வாழ்த்துக்கள் அய்யா .நீங்கள் செய்துவரும் செயலுக்கு (உங்களுக்கு உங்கள் பணி) உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் தமிழக இனமே நன்றி கடன் பட்டு உள்ளது .இது நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிறிது விளக்கமாக டிவி ,சினிமா,பத்திரிக்கை வாயிலாக கூறவும் .இந்த அடிமட்ட திருடர்கள் சாராயம் குடிக்க மட்டும் சிலை திருடுவார்கள் .அது நமது நாகரிக /கலை/கலாச்சாரம் திருட்டு என்பதே அவர்களுக்கு தெரியாது .இதை புரிய வைத்தால் போதும்.சிலை திருட்டு இருக்காது .எல்லா சிலைகளுக்கும் மாதிரியை ஐம்பொன்னில் செய்து விற்கலாமே ?.காந்தி கண்ணாடியும் ,கடிகாரமும் மாதிரிகள் விற்கிறார்கள் அது போல் .இதனால் வேலை வாய்ப்பு கூடும் அல்லவா ?.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
29-நவ-201619:52:44 IST Report Abuse
Rajendra Bupathi பொன் மாணிக்க வேலுகிட்ட மாட்டுனா அதே கதிதான்? தமிழ் நட்டுல சகாயத்துக்கு சரி சமமான ஒரு அதிகாரின்னா அது பொன்மாணிக்க வேலுதான்?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
29-நவ-201613:19:20 IST Report Abuse
மலரின் மகள் களவாணிப பயலுகளை தொழில் அதிபருன்னு சொல்றது ரொம்பவே தப்பு.
Rate this:
Share this comment
Cancel
Rocky - chennai,இந்தியா
29-நவ-201612:45:24 IST Report Abuse
Rocky பாரதப் பண்பாட்டை கலாச்சாரத்தை திருடி விற்றுப்பிழைப்பு நடத்தும் இதுகளைப் போல தமிழகத்திலும் பாரதப் பண்பாட்டை கலாச்சாரத்தை இழிவு செய்து கட்சி நடத்தி, கோவில் நிலங்களை, இடங்களை ஆட்டையைப்போட்டு கோடி கோடியாய் கொள்ளையடித்த தி.க, தி.மு.க கும்பல்கள் உண்டு
Rate this:
Share this comment
Rajavel - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201614:16:38 IST Report Abuse
Rajavelதீணதயாளன் ஆரிய கும்பல்....
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
29-நவ-201612:20:07 IST Report Abuse
Rpalnivelu தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே ஒரு சிறந்த போலீஸ் அதிகாரி இந்த பொன்மாணிக்கவேல். ஆனால் தன்னுடைய முன் கோபத்தால் சிறிது சறுக்கல். அம்மா அவர்கள் இவரை பெரிய பதவியில் அமர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை
Rate this:
Share this comment
ramasamy naicken - Hamilton,பெர்முடா
29-நவ-201618:28:22 IST Report Abuse
ramasamy naickenAmmavin pathaviye adikkatril aadi kondu irukkinrathu...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-நவ-201612:01:22 IST Report Abuse
Pasupathi Subbian 1959 முதல் இவர்களின் தொழில் இதுதானா ? இதுவரை காவல்துறையின் பார்வையில் இவர்கள் படவே இல்லையா? என்ன கொடுமசாமி இது.
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
29-நவ-201611:12:40 IST Report Abuse
Karuppu Samy கடந்த 1959 முதல் நடத்தி வந்துள்ளனர்....அட பாவிகளா? இதுபோல SINCE 19xx ன்னு போட்டிருக்கிற எல்லா பயபுள்ளைகளையும் நல்லா சோதிக்கணும். இனிமே வெளிநாட்டு காரனுக்கு கோவிலுக்குள்ளே வரவே வேண்டாம். இதுக்குத்தான் அரை கால் சட்டையோடு சுத்துறானுகளா?
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
29-நவ-201611:08:16 IST Report Abuse
Jayadev இந்த திரு பொன்மாணிக்கவேல் காவல்துறையில் நேர்மையான கண்டிப்பான அதிகாரி. ஒரு சில அரசியல்வாதிக்கு இவரை பிடிக்கவில்லை... இருந்தாலும் வேலையில் துணை ஐஜி, நல்லது தான்
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
29-நவ-201611:06:36 IST Report Abuse
vasu பொன் அவர்களுக்கு . எங்களின் கோடானு கோடி நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை