ரூ.200 கோடி சுவாமி சிலைகள் மீட்பு : மும்பை தொழில் அதிபர்கள் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.200 கோடி சுவாமி சிலைகள் மீட்பு : மும்பை தொழில் அதிபர்கள் சிக்கினர்

Added : நவ 29, 2016 | கருத்துகள் (5)
Advertisement
ரூ.200 கோடி சுவாமி சிலைகள் மீட்பு : மும்பை தொழில் அதிபர்கள் சிக்கினர்

சென்னை: சுவாமி சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்று வந்த, மும்பை தொழில் அதிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பழங்கால சுவாமி சிலைகளை கடத்தி வந்த, சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூர், 2008ல், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின், அவனது கூட்டாளியான, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாள், 84, கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை போலீசார் மீட்டனர். அதற்கு முன், தீனதயாளனிடம் இருந்து, நடராஜர் உட்பட, நான்கு சிலைகளை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு இருந்தனர். இந்த சிலைகளை, அவன் அமெரிக்காவுக்கு கடத்தி, சுபாஷ் சந்திர கபூரிடம் விற்றுள்ளான்.
அதிரடி சோதனை : இந்த தகவலை, போலீசார் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை, தற்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். அது தொடர்பாக, அவர் விசாரணை நடத்திய போது, 2005ல், நெல்லை மாவட்டம், பழவூர், நாறும்பு நாதர் கோவிலில், தீனதயாள் மற்றும் அவனது கூட்டாளிகள், 13 பஞ்சலோக சிலைகளை திருடியதும், அதில், ஆனந்த நடராஜர் உட்பட, ஆறு சிலைகளை, அவன் மும்பையில் பதுக்கி வைத்து இருப்பதாகவும், தகவல் கிடைத்தது.இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில், போலீசார் மும்பை சென்றனர். நேற்று முன்தினம், 'பீச் வியூ' என்ற இடத்தில் உள்ள, 'இந்தோ - நேபாள் ஆர்ட் சென்டரில்' அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு, ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட, ஐந்து ஆளுயுர சிலைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு, 200 கோடி ரூபாய். இதுதொடர்பாக, தொழில் அதிபர்கள், ஆதித்ய பிரகாஷ், 86, அவனது மகன் வல்லப பிரகாசம், 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும், நேற்று சென்னை அழைத்து வந்த போலீசார், தென் மாவட்டங்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆதித்ய பிரகாஷ் மற்றும் வல்லப பிரகாசம் அளித்துள்ள வாக்குமூலம்:எங்கள் பூர்வீகம், நேபாளம். 1959ல் இருந்து, தமிழகம் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்று வருகிறோம். தீனதயாள், தமிழக சிலைகளை திருடி வந்து கொடுப்பான்.
அமெரிக்காவுக்கு கடத்தல் : நாங்கள் மும்பை வழியாக, அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்தி சென்று, சுபாஷ் சந்திர கபூரிடம் ஒப்படைப்போம். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், சுபாஷ் சந்திர கபூருக்கு சொந்தமாக, நட்சத்திர ஓட்டல் உள்ளது. அங்கு தான், சர்வதேச சிலை வியாபாரிகள் கூடுவர். சிலைகளை பார்வைக்கு வைத்து, நல்ல விலைக்கு விற்று விடுவோம். எங்களுக்கு தெரியாமல், சுபாஷ் சந்திர கபூருடன், சென்னை, மாமல்லபுரத்தைச் சேர்ந்த, நரசிம்மன் என்பவனும் சிலைகளை விற்று வந்தான். இவ்வாறு போலீசாரிடம் கூறிஉள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201622:56:48 IST Report Abuse
Tamilan இவர்களைப்போல் இனியும் ஏகப்பட்ட திருடர்கள் நாட்டில் உள்ளார்கள். இது தவிர இப்போது மோடியின் பெயரிலும் பல்வேரு குண்டர்கள், திருடர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201622:55:10 IST Report Abuse
Tamilan கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஏமாற்றுகிறார்கள். தற்பொழுது மோடி பெயரை சொல்லி நாட்டை ஏமாற்றி ரோட்டில் தெருவில் சுற்றி திரியும் குண்டர்களைப்போல் நல்லவர்களை போல் நடித்து சட்டத்தை ஏமாற்றி வந்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Emperor SR - Ooty,இந்தியா
30-நவ-201616:08:51 IST Report Abuse
Emperor SR திருட்டு களவாணி கூட்டம். இவர்களை ஆயுள் முழுதும் சிறையில் அடைக்க வேண்டும். சிறையில் இவர்களுக்கு உணவு கொடுப்பது வீண் செலவே. கடும் வேலைகளை செய்து வாங்க வேண்டும் இந்த திருடி கொழுத்த பன்னாடைகளிடம்
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
30-நவ-201614:55:29 IST Report Abuse
Abdul Rahman அட பாவிகளா...
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
30-நவ-201606:13:17 IST Report Abuse
kundalakesi மொள்ளுமாரி பொறுக்கிகளை தொழில் அதிபர்னு வேறே பட்டம் போட்டு, அந்த வார்த்தைக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம். திருட்டு நாய்கள் எத்தனை வருஷங்களாக கவுரவமான வேஷம் போட்டன வாத்ரா சம்பந்தம் எப்ப வெளில வரும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை