தி.மலை கோவில் உண்டியலில் கட்டுக்கட்டாக செல்லாத நோட்டுகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மலை கோவில் உண்டியலில் கட்டுக்கட்டாக செல்லாத நோட்டுகள்

Added : நவ 30, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் அன்னதான உண்டியலில், கட்டுக்கட்டாக, செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன.திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாளில், லட்சக் கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்து செல்வர். கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்த தனி உண்டியலும், அன்னதானத்திற்கு என்று தனி உண்டியலும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் தனித்தனியே, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று மாலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், அன்னதான உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், செல்லாத, 500 ரூபாய் நோட்டுகள், 18 கட்டும், 1,000 ரூபாய் நோட்டுகள், எட்டு கட்டுகளும் இருந்தன.மொத்தம், 17.70 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும், தலா ஒரு கிலோ வீதம், ஐந்து கிலோ வெள்ளி கட்டிகளும், 88 கிராம் உதிரி வெள்ளி நகைகளும், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை