பாலியல் புகாரில் கைதான போதகர்: சபைக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகாரில் கைதான போதகர்: சபைக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு

Added : டிச 05, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், பாலியல் புகாரில் கைதான கிறிஸ்தவ மத போதகரை, மீண்டும் சபைக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சபை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அடுத்த குப்பம்பாளையத்தில், ஷைக்கினா அசெம்பிளி சபை போதகராக சாம் ஆரோன் என்பவர், கடந்த, 20 ஆண்டுகளாக இருந்தார். கடந்த, 2015ல், நிர்மலா என்ற பெண், அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவரை, போதகர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பாக, நாமக்கல் போலீசார், கடந்த, மார்ச், 17ல், சாம் ஆரோனை கைது செய்தனர். அவர், தற்போது நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே உள்ளார். இதற்கிடையே, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைந்து தண்டனை பெற்றுத்தரக்கோரி, சபை மக்கள், சில வாரங்களுக்கு முன், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், தன்னுடைய பெயரில், சர்ச் மற்றும் நிலம் இருப்பதாக கூறி, நேற்று காலை, 10:00 மணிக்கு, சாம் ஆரோன், தன் ஆதரவாளர்களுடன் சர்ச்சுக்கு சென்றார். அங்கிருந்த மக்கள், 'சர்ச் எங்களுக்கு தான் சொந்தம்' எனக்கூறி, சாம் ஆரோன் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சபைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த நாமக்கல் போலீசார், இரு தரப்பினரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை