ஹீரோவாக்கிய அந்த வார்த்தை - 'சந்தோஷ' அபி சரவணன்| Dinamalar

ஹீரோவாக்கிய அந்த வார்த்தை - 'சந்தோஷ' அபி சரவணன்

Added : டிச 08, 2016
Advertisement
ஹீரோவாக்கிய அந்த வார்த்தை - 'சந்தோஷ' அபி சரவணன்

மதுரை மண்ணில் இருந்து கிளம்பி, ஹீரோ கனவில் ேஹாலிவுட்டில் கால் வைத்து ஆபீஸ் பொறுப்பு முதல் ஆசிஸ்டென்ட் டைரக்டர் வேலை வரை பார்த்து, போராடி இளம் ஹீரோக்கள் வரிசையை எட்டிப்பிடித்துள்ளவர் அபி சரவணன்.ஆடுகளம், அட்டக்கத்தி, குட்டிப்புலி, சாகசம், டூரிங் டாக்கீஸ் உட்பட பல சினிமாக்களில் சிறு சிறு ரோல்களில் தலை காட்டிய இவர், கேரள நாட்டிளம் பெண்களுடனே, தாயம், பிளஸ் ஆர் மைனஸ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் கனவு பலித்தது.தற்போது 'பட்டதாரி' படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை கேரளாவில் 55 தியேட்டர்களில், டிச.,9ல் வெளியிட இயக்குனர் குமரனுடன் முகாமிட்டுள்ள அபி சரவணன் நம்மிடம்...மதுரை புதுாரை சேர்ந்தவன் நான். பிளஸ் 2 முடித்து மெக்கானிக் வேலை செய்தேன். இதன்பின், பி.இ., மற்றும் எம்.பி.ஏ., படித்து பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை செய்தேன். சினிமா தான் என் லட்சியமாக இருந்தது.இதற்காக சென்னை சென்று சான்ஸ் கேட்டு பல சினிமா கம்பெனிகளுக்கு ஏறி இறங்கினேன். வெற்றிமாறனின் ஆடுகளத்தில் சின்ன ரோல் கிடைத்தது. பின் அட்டக்கத்தியில் ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு, குட்டிப்புலி என அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. குட்டிப்புலி படத்தின் போது அப்பட இயக்குனர் குமரனிடம், உதவி இயக்குனராக இருந்தேன்.அப்போது 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படத்துக்காக ஹீரோ குறித்து பேச்சு நடந்தபோது, என் பெயர் அடிபட்டது. அப்போது, "இந்த பயன் சிவப்பா இருக்கான். மதுரைக்காரன் போல் இல்ல. செட் ஆக மாட்டான்," என இயக்குனர் சொன்ன போது, "அண்ணே... நானும் மதுரை தானே" என மதுரைக்கே ஏற்ற 'ஸ்லாங்'குடன் சொன்னவுடன் அவருக்கு பிடிச்சு போச்சு... அடுத்த நிமிடம் ஹீரோ வாய்ப்பும் கிடைச்சது.மதுரை 'சப்ஜெக்ட்' என்பதால் 'பட்டதாரி' படத்துக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஹீரோ இடத்தை பிடிக்க மூன்று ஆண்டுகள் கடும் போராட்டமாக இருந்தது. 'எதிர்கொள்', 'பவுடர்', 'வச்சு செய்றோம்' படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன்.எனக்கு அஜீத் பிடிக்கும்.ஏன்னா அவரும் மெக்கானிக்கா இருந்து ஹீரோ ஆனவர். எந்த ரோல் கொடுத் தாலும் சவாலா எடுத்துக்கிட்டு நடிப்பேன். நடிப்பிற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனை இந்த சினிமா உலகம் எப்போதும் கைவிடாது என்பது என் நம்பிக்கை, என்றார் நம்பிக்கையாக.இவரை 96774 81111 ல் வாழ்த்தலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X