ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி | ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாள் சிகிச்சைக்கு பின், மாரடைப்பால் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் முகம் பொலிவுடன் காணப்பட்டதற்கு, 'எம்பாமிங்' முறையில் பதப்படுத்தப்பட்டது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 ஜெ., முகம் மாறாமல் இருந்தது எப்படி


அவர், மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல், அவரது உடல் வெளியே வரும் வரை, யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் சிகிச்சை பெறும் புகைப்படம் கூட வெளியாகவில்லை.


இந்நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை, ராஜாஜி அரங்கில், 6ம் தேதி, ஜெ., உடல் வைக்கப்பட்டது. அப்போது, ஜெ.,முகத்தை பார்த்த வர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர் உயிருடன் இருந்த போது அவரது முகம் எப்படி இருக்குமோ, அதேபொலிவுடன் இருந்தது.

இரண்டரை மாதமாக, தீவிர சிகிச்சை பெற்றவருக்கு, சக்தி வாய்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டிருக்கும். அதன் விளைவாக உடல் மெலிந்து, முகம் கருத்து இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நோய் பாதிப்பிலிருந்து உயிரிழந்தவர் போலவே, ஜெ., முகம் இல்லை.

இதற்கு காரணம், அவரது கன்னத்தில் காணப்பட்ட, நான்கு புள்ளிகள் தான். அதாவது, 'எம்பாமிங்' முறையில், அவரது உடல்பதப்படுத்தப்பட்டது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரம் கூறிய தாவது: இறந்தவரின் முகம் பளிச்சென்று இருக்க வும், அடக்கம் செய்யும் நேரம் வரை உடல் கெடாமல் இருக்கவும், எம்பாமிங் செய்யப்படுவது

Advertisement

வழக்கம். இது வொரு, 'காஸ்ட்லி மேக்கப்' என, சொல்லப் படுவது உண்டு. இதற்கு, அரை மணி நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வரை ஆகும்.

குறிப்பாக, கன்னத்தில் நான்கு இடங்களில் துளையிட்டு, சருமம் மாறாமல் இருக்க மருந்துகள் செலுத்தப்படும். அந்த தழும்புகள், அப்படியே தான் இருக்கும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
10-டிச-201602:36:37 IST Report Abuse

மதுரை விருமாண்டிகையெழுத்து போட முடியாத அளவுக்கு drips ஏற்றிய குழாய்களால் கைவலி என்று சொன்னார்களே.. அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லையே. அதே அடுத்த நாள் இறந்து போன நடிகர் சோ ராமராமியின் கைகளில் அந்த அடையாளம் கருநீலத்துடன் காணப்பட்டதே? அப்போ, இடைத்தேர்தலுக்கு விண்ணப்பம் கொடுத்தப்பவே ஜோலியை முடிச்சிட்டீங்களா?

Rate this:
T.Palani - Panruti,இந்தியா
10-டிச-201608:52:39 IST Report Abuse

T.Palaniநல்ல கேள்வி ......

Rate this:
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
09-டிச-201620:53:37 IST Report Abuse

Ramachandran CV Ramachandranஅம்மாவை மம்மியாக்கி பல நாட்கள் பாதுகாத்து குணமடைந்து விட்டார் என்று பொய் சொல்லி இறந்துவிட்டார் என்று மீண்டும் பொய் சொல்லி சடலத்தை பாடம் செய்து 5 ஆம் தேதி இறந்து விட்டதாக நாடகம் ஆடி அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களின் வாயை அடைத்து பார்க்க வந்தவர்களை எல்லாம் திருப்பி அனுப்பி வைகோ, திருமா, அல்லகைகளின் கையை நிரப்பி வாயை அடைத்து அரங்கேறிய நாடகம் வெற்றிகரமாக முடிந்தது. நேற்றுவரை ஜெயாடிவியில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவியாக இருந்த மறைந்த முதல்வர் அவர்கள் இன்று அதே டீவியில் வெறும் ஜெயலலிதாவாக அழைக்கப்படுகிறார். இதுதான் அவர் உழைப்புக்கு கிடைத்த பலன். வாழ்க துரோகிகள்.

Rate this:
Muttal - newjersy,யூ.எஸ்.ஏ
09-டிச-201620:45:07 IST Report Abuse

Muttalஅன்று MGR ஐ காப்பாற்ற indra gandhi என்ற இரும்பு பெண் இருந்தார் ஆனால் இன்று எல்லோரும் இரண்டாவது மாடி வேடிக்கை பார்க்கவே சென்றனர்

Rate this:
மேலும் 85 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X