பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது

Added : டிச 22, 2016 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெண் பலாத்காரம்: பாதிரியார் கைது

துாத்துக்குடி: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செந்துார் அருகே, நாசரேத் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர், ஆண்ட்ரூஸ் ரோஸ்லின், 37; எம்.டெக்., பட்டதாரி. கணவரிடம் விவாகரத்து பெற்ற இவர், தந்தை வீட்டில் வசித்து வந்தார். பிரகாசபுரம் பரலோக மாதா சர்ச்சில், பாதிரியாராக இருந்தவன், அருள் பிரகாசம், 33. சர்ச்சுக்கு சென்ற ரோஸ்லினுக்கும், பாதிரியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரோஸ்லினை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் பாதிரியார், 'உறவு' வைத்துள்ளான். திருமணம் செய்து கொள்ளும்படி ரோஸ்லின் கேட்ட போது, பாதிரியார் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். புகாரை அடுத்து, திருச்செந்துார் மகளிர் போலீசார், பாதிரியார் அருள்பிரகாசத்தை கைது செய்தனர். டிச., 4ல், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, மேலப்பட்டி சர்ச் பாதிரியார் சுரேந்திர மோகன், 39 என்பவன், கல்லுாரி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
23-டிச-201619:42:38 IST Report Abuse
Naduvar 'பழக்கம்' ஏட்பட்டு 'உறவு' வைத்திருந்தால் அது எப்படி பாலியல் பலாத்காரம் ஆகும் ? இவளுக்கும் ஆசை இருந்துதானே எல்லாம் நடந்துருக்கு?
Rate this:
Share this comment
Cancel
siva - rasipuram,இந்தியா
23-டிச-201618:46:06 IST Report Abuse
siva நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, மேலப்பட்டி சர்ச் பாதிரியார் சுரேந்திர மோகன், 39 என்பவன், கல்லுாரி மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசியல்ல எது எல்லாம் ஜகம் ???????????????????\\\\\\\????????????
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
23-டிச-201616:15:43 IST Report Abuse
CHANDRA GUPTHAN இதே ஒரு ஹிந்து சாமியார்ன்னா 2000 கருத்துக்கள் கொட்டியிருக்கும் இது பாவாடை சாமி தானே 8 பேர் தான் . இவனை மாதிரி எல்லா சர்ச்சுகளில் உண்டு . வெளிநாட்டு பணம்,சுக போக வாழ்க்கை அதை பயன்படுத்தி பெண்வேட்டை. மொத்தத்தில் ராஜ வாழ்க்கை இந்த பொறம்போக்குகளுக்கு. வருமான வரித்துறையினர் இவனைப்போன்றவர்களின் வீடுகளிலும் சோதனை போட்டு கொல்லனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X