ராம மோகன் ராவ் ‛அட்மிட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராம மோகன் ராவ் ‛அட்மிட்'

Updated : டிச 24, 2016 | Added : டிச 24, 2016 | கருத்துகள் (142)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராம மோகன் ராவ், சென்னை, போருர் தனியார் மருத்துவமனை

சென்னை: வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளான, ராம மோகன் ராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கருதி, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ.,வில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம மோகன் ராவ். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் குழு உறுப்பினருமான சேகர் ரெட்டி வீடு மற்றும்அலுவலகங்களில், 130 கோடி ரூபாய் ரொக்கம், 171 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து , டிச.,21 ல் ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது மகன் விவேக் வீடு, அலுவலகங்கள், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட, 12 இடங்களில், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.




வருமான வரித்துறை சம்மன் :

இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை உருவாக்கியது. தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் நீக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் அவருக்கும், அவரது மகனுக்கும் சம்மன் அனுப்பியதாக, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு ராம மோகன் ராவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கருதி, சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ராமமோகன ராவ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஒரு வதந்தி உலாவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-டிச-201602:51:50 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஐ திங்க்... இந்தாளையும் மாபியா க்ரூப்பு தூக்கிட்டு போயி வச்சிருக்குன்னு தான் தோணுது.. ஜெயலலிதாவை அப்போலோவிலே வச்சி செஞ்சா மாதிரியே, இந்தாளை இவிங்க இங்கே வச்சி செய்யப்போறாங்கன்னு விஷயம் கசிந்துள்ளது. அப்போலோவிலே செய்தால் ஜெயலலிதாவின் கூட்டும் அம்பலம் ஆகும் வாய்ப்பு அதிகமாகி விடும் என்று இளவரசி குடும்பத்தார் அப்படி வேண்டாமென்று சொல்லியதால் இந்த ஏற்பாடாம். அதற்கு சசி ஓகே சொன்னதால் ராவோடு ராவாக ராவை தூக்கி ராவாக விசாரிக்கிறார்களாம். கிரானைட் கொள்ளை, அதை விட மிடாஸ் கொள்ளையும் ராவுக்கு விவரமாக தெரியுமாம். மொத்த ஊழல் இந்தியாவையே திடுக்கிட வைக்கும் அளவுக்கு இருக்குதாம். அதனால் பத்து நாளில் ராவுக்கு ஊ ஊ ஊ தானாம்.. வெயிட் அண்ட் ஸீ..
Rate this:
Share this comment
Cancel
NELLAI BHARATHI - Chennai,இந்தியா
25-டிச-201600:40:48 IST Report Abuse
NELLAI BHARATHI போதும்டா சாமி உங்க நடிப்பு இதை எல்லாம் நாங்கள் 20 வருடம் முன்னாடி பார்த்துவிட்டோம் ?ஒழுங்கா வருமான வரித்துறைக்கு போய் தகுந்த விளக்கம் அளிக்கவேண்டும் .இல்லை என்றால் சிறை தான், அது என்ன நாட்டில் படித்தவனுக்கும் மட்டும் ஒரு சட்டம் படிக்காத பாமரனுக்கு ஒரு சட்டம் , ஏன் சிறையில் தான் ஹாஸ்பிடல் வசதி நல்லாத்தான் இருக்கின்றது ? முதலில் இவரை சென்னை அப்போல்லோவுக்கு அனுப்புங்கள் ?
Rate this:
Share this comment
Cancel
சுந்தர் - Rajapalayam,இந்தியா
24-டிச-201622:14:36 IST Report Abuse
சுந்தர் தயவுசெய்து ராவை அப்படியே அப்பல்லோவில் சேர்த்துவிடுங்கள் உங்களுக்கு புண்ணியம்தான். தமிழ்நாடும் உருப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X