பதிவு செய்த நாள் :
மின் வாரிய ஊழியர் நியமனத்திற்கு
சசிகலா குடும்பம் முட்டுக்கட்டை

மின் வாரியத்தில், ஊழியர்களை நியமிக்க, நேர்காணல் நடத்த, மன்னார்குடி குடும்பம் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது.

கூடுதல் பணிச்சுமை


தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. மாதந்தோறும் சராசரி யாக, 300 ஊழியர்கள் ஓய்வு பெற்று வருகின்ற னர். இதனால், மின் ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதை யடுத்து, இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள் ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது.

அதன்படி, ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனால், தொழில்நுட்பம் அல்லாத,

750 பதவிகளுக்கு, தேர்வர்கள் வாங்கிய, மதிப் பெண்ணை, மின் வாரியம், அக்., மாதம் வெளியிட்டது.

அதில், முதல் கட்டமாக, சுருக்கெழுத்தர், வரைவா ளர், தணிக்கையாளர் பதவிகளுக்கு, அதிக மதிப் பெண் வாங்கியவர்களுக்கு,நவம்பர் மாத துவக்கத் தில், நேர்காணல் நடத்துவதாக,மின் வாரியம் அறிவித்தது.பின், அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் இடைத்தேர்தலால், நேர்காணலை மின் வாரியம் ஒத்திவைத்தது. தேர்தல் முடிந்த நிலையில், இம்மாதம், நேர்காணல் நடத்ததிட்டமிட்டது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மறைவால், நேர்காணலை நடத்த விடாமல், சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர், மின் வாரியத்துக்கு, முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது.

நேர்காணல் கூடாது


இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:


முதல் முறையாக, எழுத்து தேர்வு மற்றும் நேர் காணலில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல்வ ராக இருந்த ஜெயலலிதா உத்தரவில், தேர்வு தொடர்பான பணிகள், இதுவரை வெளிப்படையாக, நேர்மை யாக நடந்து வந்தன. ஆனால், சசிகலா குடும்பத்தினர், 'நாங்கள் கூறும் நபர்களுக்கு தான் வேலை தர வேண்டும்; அதுவரை, நேர்காணல் நடத்த கூடாது' என, அதிகாரிகளிடம் கூறிவருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'வர்தா புயல் நிவாரண பணிக ளால், நேர்காணல் தாமதமாகி வருகிறது; விரைவில் நடத்தப்படும்' என்றார்.

அரசு பணிகளில் முடிவெடுக்க அமைச்சர்களுக்கு தடை


மின் வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில், ஆண்டு தோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் மார்ச் மாதத்துடன், நடப்பு நிதியாண்டு முடிவ டைய உள்ளது. இதனால், திட்ட பணிகளை, அரசு துறைகள் முடுக்கி விட்டு உள்ளன.

ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு சசிகலாவை கொண்டு வர முனைப்பு காட்டி வரும் அவரது உறவினர்கள், 'நாங்கள் கூறும் வரை, புதிய பணிகளை மேற்கொள்ள வேண் டாம்' என, அமைச்சர்களுக்கு தடை போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


'நாங்கள் கூறும் வரை, 'டெண்டர்'கள் விடக் கூடாது என்றும், பணி ஆணை தொடர்பாக முடிவு எடுக்கக் கூடாது என்றும், அமைச்சர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தங்களுக்கு நெருக்கமான, உயர் அதிகாரி வழியாக, அனைத்து துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். இதனால், அதிகாரிகள், கோப்புகளை பார்க்காமல் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
28-டிச-201618:51:47 IST Report Abuse

Paranthamanஓநாய் கூட்டம்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
28-டிச-201618:29:17 IST Report Abuse

Paranthamanசசிகலா பொது செயலாளர் பதவி வகித்தால் அவரது அரவணைப்பில் உள்ள பதினெட்டு திருடர்களும் பொது செயலாளர்கள் தான்.

Rate this:
Ravikumar - Bangalore,இந்தியா
28-டிச-201616:13:06 IST Report Abuse

Ravikumarயார் இவர்கள்? அரசாங்க அதிகாரிகள் இவர்கள் சொல்வதை ஏன் கேட்க வேண்டும். இதை கேக்கும் அரசாங்க அதிகாரிகள் வேலையை விட்டு நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் இது அனைத்து துறைகளிலும் இதை மற்றவர்ளும் பின்பற்றுவார்கள். இதை கண்டிப்பாக அரசாங்கம் தடுக்க வேண்டும்.

Rate this:
N MUTHUKRISHNAN - chennai,இந்தியா
28-டிச-201612:39:21 IST Report Abuse

N MUTHUKRISHNANஜெயலலிதாவின் ஆயாம்மா சசி அண்ணா திமுகவிற்கே ஒரு முட்டுக்கட்டை தான். தொண்டர்களே உண்மையில் கட்சியின் பால் விசுவாசம் இருந்தால் தூக்கி எறியுங்கள் இந்த சதிகார கும்பலை. பதவி பணத்திற்கு பங்கம் வராமலிருக்க காவடி தூக்கும் அரசியல் பன்னாடைகளை நம்பாதீர்கள். தொண்டர்கள் இல்லையேல் இந்த பன்னாடைகளுக்கு வாழ்வில்லை என உணர்த்துங்கள். 30 வருட கால ஜெயலலிதாவின் சனி பீடையை (4 மடங்கு - 7 1 /2 x 4 ) அடித்து விரட்டுங்கள்.

Rate this:
Only Real No politics - Chennai,இந்தியா
28-டிச-201611:32:01 IST Report Abuse

Only Real No politicsதுணை வேந்தர்கள் இவரை தான் சந்திக்கிறார்கள், துணைவேந்தர்கள் மீது விசாரணை கிடையாது பதவிநீக்கம் கிடையாது, காவல் துறையினர் போயசுக்கு பாதுகாப்பு omr சாலையில் உள்ள சசியின் பங்களா நிலத்திற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு, மின்வாரிய ஊழியர்கள் நியமனத்தில் தலையிடுகிறார்கள். இதனை தட்டி கேட்கவும் பூனைக்கு மணிக்கட்டும் பொறுப்பும் முதலமைச்சர் பன்னீருக்கு தான் உள்ளது. இதை எல்லாம் தட்டி கேட்காமல் நடவடிக்கையும் எடுக்காமல் நம்ம முதல்வர் என்ன பன்னீர் தெளித்து கொண்டிருக்கிறாரா....................?

Rate this:
ravi - chennai,இந்தியா
28-டிச-201611:00:45 IST Report Abuse

raviஎத்தனை நாளைக்கு அந்த புடவைக்கு பயந்து ஒன்பதாக இருக்கப்போகிறீர்கள் - அவர்களை தூக்கிப்போடுங்கள்-முதல்வரை மறைத்த அழித்த அவருக்கு ஏன் மரியாதை-ஆனால் மின்சார வாரியத்தில் தொண்ணூறு சதவீதம் பேர் ஊழல் வாதிகள்-ஜெய் ஹிந்த்

Rate this:
sam - Doha,கத்தார்
28-டிச-201609:11:06 IST Report Abuse

samஎன்ன நடக்கிறது தமிழ் நாட்டில்? AIADMK தொண்டர்கள் நிச்சயமாக இந்த வீடியோ கும்பலை ஒழித்து காட்டுவார்கள்

Rate this:
S.S .Krishnan - chennai,இந்தியா
28-டிச-201608:13:22 IST Report Abuse

S.S .Krishnanயார் இந்த பொம்பிளை? எல்லாம் இவங்களை கேட்டு செய்வதற்கு இவர்கள் யார்? மின் துறையில் அதிகாரம் யார் கொடுத்தார்கள்.ஆனால் ஒன்று நினைவுக்கு வருகிறது இவர்கள் தான் ஜெயலலிதா எப்படி ஆட்சிக்கு வருவார்? நாங்கள் வரவிடமாட்டோம் என்றவர்கள்..

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
28-டிச-201608:03:31 IST Report Abuse

Rajendra Bupathiகோமள்வல்லியின் ஆத்மா இன்னொரு உயிரை கண்டிப்பா கொண்டு போகுங்குறாங்கள அது உண்மையா?

Rate this:
Palanisamy PK - Chennai,இந்தியா
28-டிச-201605:46:27 IST Report Abuse

Palanisamy PKநவீன பூலான் தேவி கொள்ளைகாரி மன்னார்குடி மணல் மாபியா சசி அக்கா பதவி ஏற்கும் முன்னரே கொள்ளையை ஆரம்பித்து விட்டார். மின் துறை அமைச்சர் தங்க மணிக்கு இனி திண்டாட்டம் தான். பாவம் அவர்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்