வண்ணதாசனுக்கு பிடித்த மாரியப்பனின் படங்கள்...| Dinamalar

வண்ணதாசனுக்கு பிடித்த மாரியப்பனின் படங்கள்...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


வண்ணதாசனுக்கு பிடித்த மாரியப்பனின் படங்கள்...

முகநுால் பதிவுகளை வேகமாக பார்த்தபடி கடந்த போது, ஓருவர் போட்டிருந்த படம்,அதை தாண்டிப் போகமுடியாதபடி பார்வையை நீண்ட நேரம் ஈர்த்தது.
ஒரு சில போட்டோக்களுக்குதான் இந்த தனித்தன்மை இருக்கிறது.இதற்கு காரணம் இத்தகைய போட்டோக்களின் பின்னனியில் உள்ள நேர்தியான புகைப்படக்கலைஞர்கள்.

நான் பார்த்த புகைப்படங்களின் படைப்பாளி மாரியப்பன் கோவிந்தன்.
மதுரை ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வளர்ச்சி அதிகாரியாக இருக்கும் இவரது திருமணத்திற்கு பரிசாக கிடைத்த சிறிய கேமிராதான் இவருக்குள் இருந்த புகைப்படக் கலைஞனை தட்டி எழுப்பியது.

சிறிய கேமிராவில் எடுத்த படங்களை சமூக தளத்தில் போட்டபோது நிறைய பாராட்டுகள் கிடைக்கவே புகைப்படம் தொடர்பான ஆழமான தேடலுக்கு சென்றார்.தேடலின் முதல் தேவையாக டிஎஸ்எல்ஆர் கேமிரா வாங்கியபிறகு இவரது புகைப்பட பார்வை இன்னும் மேம்பட்டது.
நேரமின்மை காரணமாக போட்டோகிராபியை இணையதளம் மூலமாக கற்றுக் கொண்டார்.இதற்காக பல இரவுகள் இவருக்கு பகலாகியிருக்கிறது,பார்வை சர்வதேச அளவிற்கு விசலாமாகியிருக்கிறது.


நெல்லையில் பிறந்து வளர்ந்தவரான இவரை அங்குள்ள நெல்லை கிளிக்கர்ஸ் கிளப் மதன் சுந்தர் பட்டை தீட்ட தீட்ட ஜொலிக்க ஆரம்பித்தார்.குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் இவரது குலசை படங்களின் பரம ரசிகர் என்ற ஒன்றே போதும் இவரது படங்களுக்கு கட்டியம் கூற..
இவர் எடுக்கும் படங்களை விமர்சித்து இவரை ஊக்கப்படுத்தும் முதன்மை ரசிகர் இவரது துணைவியாரும் மதுரை மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியருமான பாரதி ராணிதான்.இப்போது இவர்களது ஐந்து வயது பெண் மீனாட்சியும் அப்பா முன்பு உபயோகித்து சிறிய கேமிராவை எடுத்து கேமிரா கோணம் பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.

தனது சந்தோஷத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் இவரது படங்கள் நாகர்கோவில் மெர்வின் ஆண்டோ நடத்திய கண்காட்சியில் இடம் பெற்று பலரது பாராட்டை பெற்றுத்தந்ததும்,தொடர்ந்து பத்திரிகைகளில் கேட்டுவாங்கி பிரசுரிப்பதும் தனக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்துள்ளதாக மகிழும் மாரியப்பன் கோவிந்தனை பாராட்ட எண்ணுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9994051218.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
12-ஜன-201711:37:26 IST Report Abuse
நக்கீரன் திறமைகளை தட்டிக்கொடுப்போம். வானத்தையே எட்டி வளைப்போம். தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். நீடுழி வாழ்க நெல்லையின் மைந்தன் மாரியப்பன்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜன-201711:21:33 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி மாரியப்பன் கோவிந்தன் அவர்கள் புகைப் படத்துறையில் இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
04-ஜன-201715:05:14 IST Report Abuse
Murugan இதில் இரு படங்கள் எனது சிறு வயதில் நடந்த நினைவுகளை கொண்டுவந்தது .நன்றி .................................... வாழ்த்துக்கள் .......... தொடரட்டும் உங்களது சிறந்த ரசனைகள் .............
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
02-ஜன-201717:22:19 IST Report Abuse
SENTHIL NATHAN அற்புதமான போட்டோக்கள் அருமையான ரசனை
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
31-டிச-201600:35:30 IST Report Abuse
மதுரை விருமாண்டி சிறந்த படைப்புகள். Great pictures.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்