பீஹார் அரசியலில் வருகிறது மாற்றம்?: | பீஹார் அரசியலில் வருகிறது மாற்றம்?: நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
பீஹார் அரசியலில் வருகிறது மாற்றம்?:
நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

பாட்னா:பாட்னாவில் நடந்த, சீக்கிய குரு கோவிந்த் சிங்கின், 350வது பிறந்த நாள் விழா வில் பங்கேற்ற, பிரதமர், நரேந்திர மோடி, பீஹாரில் மதுவிலக்கை அமல்படுத்திய, மாநில முதல்வர் நிதிஷ் குமாரை வெகுவாக பாராட்டி னார்; பிரதமரின் இந்த பேச்சு, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

 பீஹார் அரசியல், வருகிறது மாற்றம், நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின், 350வது பிறந்த நாள் விழா, பீஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான
சீக்கியர்கள் விழாவில் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, மத்திய - மாநில அரசுகளின் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. விழாவின் ஒரு பகுதியாக, பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் ரவிசங்கர்

பிரசாத், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின், 350வது பிறந்த நாள் விழா,பிரம்மாண்டமாக கொண்டாடப் படுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவை இவ்வளவு விமரிசையாக கொண்டாட, அனைத்து ஏற்பாடு களையும் சிறப்பாக செய்த, மாநில முதல் வர் நிதிஷ் குமாருக்கு என் பாராட்டு.விழாவுக்காக, மத்திய அரசின் சார்பில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது. நாடு முழுவதிலும் உள்ள சீக்கியர்கள் இந்த விழா வில் பங்கேற்க வசதியாக, ரயில்வே துறை யும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

பீஹாரில், மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர், நிதிஷ் குமாரின் செயல் பாராட்டுக்குரியது. அவரின் நல்முயற்சி வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறது. எனினும், அதை முழுமையாக வெற்றி பெற செய்ய, நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மது வுக்கு எதிரான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பீஹாரோடு நில்லா மல், நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த, நிதிஷ் குமார் முயற்சி மேற்கொள்ள வேண்டும்; இதை, மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பீஹார் அரசியலில் திருப்பம்


கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., சார்பில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக

Advertisement

அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலகியது; எனினும், தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று மோடி பிரதமரானார்.

அதன்பின் நடந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், அரசியலில் பரம எதிரியான லாலுவின்,
ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன், கூட்டணி வைத்து, நிதிஷ் மீண்டும் முதல்வரானார். கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசின் செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது.

அதற்கு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிதிஷ் குமார், பிரதமர் மோடியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தார். பாட்னாவில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பாராட்டியது, பீஹார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-ஜன-201717:39:54 IST Report Abuse

இந்தியன் kumarநல்லவர்கள் ஒன்றிணைவது நாடிற்கு நல்லது , நிதிஸ் ஜீ மோடிஜியுடன் சேரவேண்டும் .

Rate this:
dharma - chennai,இந்தியா
06-ஜன-201717:58:54 IST Report Abuse

dharmaநீங்க பாராட்டுனா மட்டும் போதாது அவரை முன்னுதாரணமா எடுத்து வெகு ஜன மக்களுக்கு பயன்படும் வகையில் நீங்கள் செயல்படவேண்டும். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ஸ்பெஷல் நிதி தருகிறேன் என சொல்ல வேண்டும். குறிப்பா உங்க பாஜக ஆளும் மாநிலங்களில் இதை கொண்டு வாங்க.

Rate this:
06-ஜன-201714:17:56 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்நிதிஷ் கூடா நட்பான ஊழல் லல்லுவை விட்டு விலகுவதே நல்லது. அது விஷ பூச்சிகளின் கூடாரம். மோடியுடன் சேர்ந்து உங்கள் மாநிலத்தை மேம்படுத்துங்கள்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X