சினிமாவில் நான் ஒரு வியாபாரி : குமுறும் கவிஞர் சினேகன்| Dinamalar

சினிமாவில் நான் ஒரு வியாபாரி : குமுறும் கவிஞர் சினேகன்

Added : ஜன 06, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சினிமாவில் நான் ஒரு வியாபாரி : குமுறும் கவிஞர் சினேகன்

கற்கண்டு ருசியுடன், கடித்துண்டு ருசிக்கும் கரும்புச் சுவைபோலும் பாடல்களை கொட்டியவர். நினைத்த மாத்திரத்தில் சொந்தம், உறவு, குடும்பக் கருத்துக்களுடன் 'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா, அப்பா', 'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...', 'தோழா... தோழா...' என பல பாச, நேச பாடல்களையும் எழுதி பாச வலிமையை உணர வைத்தவர். திண்டுக்கல் புத்தக திருவிழாவிற்கு வந்த கவிஞர் சினேகன் நம்மிடம் பேசியது:எனது ஊர் தஞ்சை புதுகரியம்பட்டி. எட்டு பேர் கொண்ட பெரிய குடும்பம். பிழைப்புக்காக, சென்னை சென்று கவிஞர் வைரமுத்துவிடம் 5ஆண்டு உதவியாளராக இருந்தேன். 15 ஆண்டுகளாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறேன். பாடல்கள் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. பாடல் இசையோடு இருந்தால்தான் சிறப்பு பெறும். ஆனால் இசையால் கடினமாகி விடக்கூடாது. 'பாடல் வரிகள் புரியும் வகையில் உரசாமல் வாருங்கள்' என்பார் வைரமுத்து. காபிக்கு டிகாக்ஷன் போல, கவிஞனுக்கு கற்பனை வேண்டும். சிலர் சினிமாவிற்கு வந்து ஒரு கவர்ச்சிப் பாடலை எழுதி விட்டு நின்று விடுகின்றனர். ஆயுள் பாடல்களை உருவாக்க வேண்டும். கவர்ச்சிப் பாடல்கள் துரித உணவை போன்றது. நல்ல பாடல்கள் கிராமத்து உணவை போல சத்தானது. 'பாண்டவர் பூமி' படப்பாடலை எனது வீட்டுச் சூழ்நிலையை நினைத்து எழுதினேன். இதற்கு வேறு ஒருவரை முயற்சி செய்தனர். அவருக்கு சரியாக வராததால்... என்னிடம் அந்த வாய்ப்பு வந்தது. எனது தாய் அனைத்து குழந்தைகளுக்கும் சோறு ஊட்டுவதை நினைத்தேன்... அந்த கவிதை கொட்டியது. நான் எழுதிய 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா' கடும் விமர்சனத்தை சந்தித்தது. 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அம்மா, அப்பா' என்ற பாடல் எழுதிய போது என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதே நேரம் இந்த வரிகளால் பலர் எனது வீட்டுக் கதவை தட்டினர். அதனால் சினிமாவில் நான் வியாபாரியாக தான் உள்ளேன். நல்ல பாடல்களை எழுத முடிவதில்லை. நான் இயக்குனர், கதாநாயகன் என பல வேடமிட்டாலும், கவிஞர் என்கிற போதுதான் பெருமையாக இருக்கிறது. தற்போது நான், 'பொம்மி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஏற்கனவே 'யோகி', 'உயர்திரு 420' என்ற படங்களில் நடித்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்வது...? வாழ்வின் யதார்த்தங்களை, அர்த்தங்களை படியுங்கள். அது புத்தகங்களில் தான் உள்ளது. வாசிப்பை நேசியுங்கள். உங்களுக்கு பிரச்னை வரும் போது நிச்சயம் அதில் தீர்வு கிடைக்கும், என்றார். இவரை 98400- 27794ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X