அரசியல் பெரியவர்கள் சமாச்சாரம் - நடிகை பாவனா| Dinamalar

அரசியல் பெரியவர்கள் சமாச்சாரம் - நடிகை பாவனா

Added : ஜன 06, 2017
Advertisement
அரசியல் பெரியவர்கள் சமாச்சாரம் - நடிகை பாவனா

பார்க்கும் விழி பூத்திருக்கும் ரோஜா; மஞ்சள் வெயிலில் சிறகடித்து படபடக்கும் பஞ்சவர்ண கிளி; பன்னீர் புஷ்பம் துாவும் மழை மேகம். பார்ப்போர் கண்களில் 'பாவ' ரசம் ஏற்றும் பளிங்குச் சிலை; பவுர்ணமி நிலவில் வார்த்தெடுத்த தயிராடை கட்டியென, ரசிகர்களை 'கிறங்க' வைத்து உறங்க வைப்பவர் பாவனா. சென்னையில் ஷூட்டிங் 'பிசி'யிலும் நம்மிடம் பேசினார்:* சினிமா உங்களை அழைத்ததா?கேரள மாநிலம் திருச்சூர் சொந்த ஊர். தந்தை பாலசந்தர் சினிமா கேமரா மேன். பிளஸ்2 படித்தபோது, போட்டோவில் என்னைப் பார்த்து விரும்பி அழைத்தனர். நானும் ஏற்றுக் கொண்டேன்.* தற்போது நடிக்கும் படம் ?மலையாளத்தில் 'ஹனி பீ-2' பண்ணுகிறேன். இதன் ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது. கதை டிஸ்கஷனில் தீவிரமாக உள்ளேன். * எத்தனை படங்கள் நடித்துள்ளீர்கள்?தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளேன்.* தமிழில் ஹிட்டான படங்கள் எது?தமிழில் தீபாவளி, வெயில், சித்திரம் பேசுதடி ஆகியவை 'ஹிட்'டாகியுள்ளன. இன்னும் சில படங்கள் 'புக்'காகியுள்ளது. பெயர் வைத்தபின்தான் அதனை சொல்ல முடியும்.* கதாநாயகிக்கு முக்கியம் நடனமா, நடிப்பா?கதாநாயகிக்கு உணர்வு பூர்வமாக நடிக்க தெரிந்து இருக்க வேண்டும். உடல் ரீதியாக நடனமாட தெரிந்து இருக்க வேண்டும்.* தற்போது சீரியஸான கதைகள் எடுபடுவதில்லையே, ஏன்?அவரவர் வாழ்க்கையில் சீரியஸான சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பொழுது போக்கு சினிமாவில், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கதையம்சத்தில் கனம் இன்றி எந்த படமும் ஓட வாய்ப்பில்லை.* பல மொழிகளில் நடித்த உங்களுக்கு, பிடித்த ரசிகர்கள் யார்?எனக்கு மிகவும் பிடித்தவர்கள் தமிழ் ரசிகர்கள்தான். அவர்கள்தான் சினிமா கலைஞர்களுக்கு அதிகளவு மதிப்பு கொடுப்பார்கள்.* ஆபாசமாக பல நடிகைகள் நடிப்பது குறித்து?என்னை பொறுத்தவரை ஆபாசம் பிடிக்காது. மற்றவர்களைப் பற்றி 'கமென்ட்' அடித்து காயப்படுத்த விரும்பவில்லை. நான் நடித்த பல படங்களில் நல்ல ஆடைகளை தேர்வு செய்தே நடித்துள்ளேன்.* தமிழ் கதாநாயகர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?அனைத்து கதாநாயகர்களும் எனக்கு பிடிக்கும். அஜித், சுரேஷ்கோபி, பிரிதிவிராஜ் உட்பட அனைத்து மொழி நடிகர்களும் எனக்கு பிடிக்கும். * உங்கள் ரோல் மாடல் யார்?ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்து இருக்கு. அதை அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய தாய், தந்தை யர்தான் எனது முதல் ரோல் மாடல்.* உங்கள் அழகின் ரகசியம்?நான் தினமும் உடற்பயிற்சி செய்வதுதான். ஷூட்டிங் இல்லாத நாளில் 'ஜிம்'முக்கு செல்வேன்.* பிடித்த தமிழ்ப் பாடல்?தமிழ்ப் பாடல்களில் தத்துவம், சோகம், நகைச்சுவை என ஒரு பெரிய அறிவு பொக்கிஷமே பொதிந்து இருக்கிறது. நான் ஏராளமான தமிழ் பாடல்களை சேகரித்து வைத்துள்ளேன்.* தமிழர்களிடம் உங்களுக்கு பிடித்தது ?கடின உழைப்பாளிகள், விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள், மொழியை உயிராக நினைப்பவர்கள்.* அரசியலில் ஈடுபடும் ஆர்வம் உண்டா?அரசியல் எனக்கு பிடிக்காது. அது பெரியவர்கள் சமாச்சாரம்.இவரை தொடர... pranavraaj1@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X