வறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வறட்சி; காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் கண்ணீர்

Added : ஜன 06, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வறட்சி, நெல்லை, ஆய்வு, விவசாயிகள் கண்ணீர்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மழையின்மையால் விவசாயம் பாதித்த பகுதிகளை கலெக்டர், அரசின் முதன்மை செயலாளர். அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும் எனவும் விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சை, நாகையை தொடர்ந்து தென்மாவட்டங்களிலும் விவசாய பாதிப்பு இறப்புகள் துவங்கியுள்ளன.


9ம் தேதி அரசுக்கு அறிக்கை:

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.கலெக்டர் கருணாகரன், நெல்லை மாவட்டத்திற்கான கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மை செயலர் ராஜேந்திரகுமார், ஆதிதிராவிடதுறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் இன்று காலை ஆய்வு துவங்கினர். நெல்லை மானூரை அடுத்துள்ள கானார்பட்டி, வன்னிக்கோனேந்தல், ஆயாள்பட்டி, சங்கரன்கோவில் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்டனர். மழையின்றி கருகிகிடக்கும் நெல்வயங்கள், பயிர் பயிரிடப்பட்ட நிலங்களை பார்வையிட்டனர். நெல்லை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 9ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும் வறட்சி குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
07-ஜன-201700:29:01 IST Report Abuse
Sathish விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாத அரசை மக்கள் தூக்கி எறியவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
venkat - bangalore,இந்தியா
06-ஜன-201721:50:23 IST Report Abuse
venkat I would appreciate the youngsters in villages or (Kind request to Dinamalar to publish more details about Tamil Nadu govt new crop insurance scheme) take initiatives to explain about the Tamil Nadu govt new crop insurance scheme among the uneducated farmers. They can claim indemnity level 70% - 80%. And If anybody knows, if there are hurdles and cons for farmers to use this scheme, please let me know. We, the people of TamilNadu don't want to loose any more farmer's life due to the loss.
Rate this:
Share this comment
Cancel
SINGA RAJA - MADURAI,இந்தியா
06-ஜன-201721:43:16 IST Report Abuse
SINGA RAJA தற்போது, விவசாயிகளின் மீது அரசியல் ரீதியிலான பார்வை தேவையற்றது. இப்போது அவர்களுக்கு தேவை வாழ்வாதாரம். அவர்களின் பணம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய அச்சங்கள். அவற்றை அரசாங்கம் நிச்சயமாக உடனடியாக தீர்க்கவேண்டும். மேற்கொண்டு, விவசாயிகளின் நிலைமைகளை உரிய அளவில் ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், அவர்களுக்கு மாற்றுத்தொழில் ஒன்றை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். மழை மற்றும் நதிகளின் நீர்வரத்து பாதிப்புகள் உருவாகும் பட்சத்தில், அதன் தாக்கத்திலிருந்து மீள்வதற்கோ, அதை மாற்றி வேறு தொழில்கள் புரிவதற்கோ விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் உற்பத்தி அவற்றிற்கான மிகப்பெரிய விற்பனைச் சந்தைகளை அரசு விவசாயிகளுக்காக நிறுவ வேண்டும். அதற்குரிய, அனைத்துக் கட்டமைப்பையும் இந்தியா முழுவதிற்கும், சீரிய முறையில் சிந்தித்து அரசாங்கம் புதிய வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும். விவசாயிகளின் நீர்ப் பயன்பாட்டு முறைகளை, புதிய நவீன மாற்று விவசாயத்திட்டங்களின் மூலமாக செம்மைப்படுத்த வேண்டும். குறைந்த நீர்ப்பயன்பாட்டில் அதிக மகசூல் பெரும் வழிமுறைகளை வேளாண்துறையினர் ஆராய்ந்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். மேலும், நிலப்பகிர்வு விவசாயத்தை, இதுபோன்று நீர் அருகிடும் காலங்களில், விவசாயிகள் மேற்கொள்ள ஒரு அமைப்பை விவசாயிகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, சாதாரண விவசாயி வரையில் பாதிப்பு அடையாத அளவிற்கு, நிலத்திற்கான பாசன அளவில், நீரின் வருகைக்கேற்ப குறைத்து விவசாயம் செய்யவேண்டும். இதன்மூலம், குறைந்தபட்ச விவசாய நிலங்களைக்கொண்ட ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பைப் பெறும். மழையின் அளவு என்ன? நீரின் வரத்து எத்தனை டிஎம்சி என அனைத்தையும் கணக்கிட்டு, பெருந்தனக்கார நிலச்சுவான்தாரர்கள், ஏழை எளிய விவசாயிகளின் நலன் கருதி, தங்களது நிலத்தின் விவசாயப்பரப்பளவை இயற்கையின் சூழலுக்கேற்ப, குறைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீரின் பயன்பாடு அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் சென்று சேர வைப்பதே ' நிலப்பகிர்வு ' விவசாயத்தின் நோக்கம். இதை அடுத்தடுத்து வருகின்ற காலங்களில், விவசாயிகள் ஒருமித்து நடைமுறைப்படுத்தினால், நிலைமைக்கேற்ப விவசாயமும் காப்பாற்றப்படும், விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள். விவசாயம் சார்ந்த இரண்டாம் நிலை தொழில்களை உருவாக்கி, விவசாயிகளின் வருமானத்திற்கு அரசு வழிவகை செய்கின்றபோது, மேலும் விவசாயிகளின் வாழ்வில் நிரந்தரமாக புத்தொளி வீசும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X