புரியும் வகையில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்| Dinamalar

புரியும் வகையில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

Updated : ஜன 08, 2017 | Added : ஜன 08, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
புரியும் வகையில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

புதுடில்லி: ''கிரிமினல் வழக்கு விசாரணை முடிவில், கருத்தை மட்டும் சொல்லாமல், அனைவருக்கும் புரியும் வகையில் முழு தீர்ப்பையும் நீதிபதி அறிவிக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை, விசாரணை கோர்ட் விடுவித்தது. அதை எதிர்த்து, சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை, மற்றொரு செஷன்ஸ் நீதிபதிக்கு மாற்றி, ஐகோர்ட் உத்தரவிட்டது.


நீதிபதிகள் உத்தரவு


இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், நேற்று பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், வெறும் கருத்தை மட்டும் தெரிவித்தால் போதாது. அந்த வழக்கில், முழு தீர்ப்பையும், நீதிபதிகள் அறிவிக்க வேண்டும். குற்றம் சாட்டப்படுபவரும், வழக்கு தொடர்பவரும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், அந்த தீர்ப்பு அமைய வேண்டும். தீர்ப்பு அளிக்காமல், வெறும் கருத்து மட்டும் சொல்வது, ஒருபோதும், தீர்ப்பு ஆகாது. குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ, நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
10-ஜன-201716:47:52 IST Report Abuse
K. V. Ramani Rockfort நல்ல ஆக்கபூர்வமான , அறிவுபூர்ணமா அறிவிப்பு. குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ, நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் - அதுக்கு தானே நீதி மன்றம் இருக்கு. ஜெயா மரணம் பற்றிய வழக்கில் எந்த வித விளக்கமும் சொல்லாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏன் ? 20 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரின் சொத்து குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பை இன்னமும் வழங்காமல் இருப்பது ஏன்? இதற்கு முதலில் புரியும்படி தீர்ப்பை கூறுங்கள் நீதி அரசர்களே?...
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
08-ஜன-201717:11:55 IST Report Abuse
R. Vidya Sagar ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில் எவ்வளவு தேடினாலும் கிடைக்க வில்லை. இதை எங்கே போய்சொல்வது?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜன-201716:52:24 IST Report Abuse
Endrum Indian கீழ்கோர்ட்டு தவறு என்று சொல்லும் மேல் கோர்ட் செய்யும் முறை என்ன. ? கீழ் கோர்ட் 10 ஆவது பெயில் சுப்ரீம் கோர்ட் மட்டும் தான் எம்.ஏ.பி.எல் பாஸ் செய்த நீதிபதிகளா? 1 ) முதலில் சட்ட திருத்தம் செய்ததா? இல்லையே? 100 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நல்லவன் தண்டிக்கப்படக்கூடாது" நடப்பது என்ன இந்த வார்த்தையை எடுத்துக்கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க வைப்பது. 2 ) அரசியல்வாதிகள், பணக்காரர்களுக்கு ஒருக்காலும் தண்டனை கிடைப்பதில்லை, இல்லையென்றால் அவர்கள் வழக்குகள் 20 -30 வருடங்களுக்கு நடக்கும். 3 ) எந்த ஒரு வழக்குக்கும் ஒரு வரைமுறை -அதாவது எவ்வளுவு நாள் - கைது-விசாரணை 7 நாள்- தீர்ப்பு 1 நாளில்-தண்டனை நிறைவேற்றம்-1 நாளில் செய்திருக்கின்றதா. லேட்டஸ்ட் வழக்கு ஜெ., வழக்கு, இன்னும் தீர்ப்பு இல்லை? தீர்ப்பு வந்தாலும் எந்த அரசியல்வாதியும் பணக்காரனும் ஜெயிலில் வீட்டில் இருப்பது போல் (சேகர் ரெட்டி) நல்ல கவனிப்பு. முட்டாள் சொறிவால், மம்தா (முதல் மந்திரி) முட்டாள்தனமாக பிரதம மந்திரி மோடி மீது சாணி வாரி இறைக்கின்றது. இதை ஒரு psuo moto கேஸாக எடுத்து அவர்களை கட்டுப்படுத்தாது (ஒரு சாதாரண ஜனம் சாணம் வாரி அடிக்கலாம், ஆனால் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு வரைமுறை உள்ளது) சுப்ரீம் கோர்ட் சிந்தி சரியாக, முடிவெடு நன்றாக, உன் முதுகு, கழுத்து, உடம்பின் எல்லா பகுதிகளிலும் உள்ள அழுக்கை முதலில் நீக்கு, மற்ற கோர்டுகளுக்கு மாதிரியாக "Role Model" ஆக இரு.
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
08-ஜன-201715:37:04 IST Report Abuse
Ramaswamy Sundaram எங்க நம்ம ஊர்ல பைத்தியநாதன் என்று ஒருத்தர் இதேபோல் முந்திரிக்கொட்டை கருத்தை சொன்னாரே? அவருக்கும் சேர்த்தது தான் இந்த ஆப்பு
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
08-ஜன-201713:34:38 IST Report Abuse
Bala Subramanian இந்த நடவடிக்கை உச்ச நீதி மன்ற நீதிபதி களுக்கும் பொருந்துமா சொத்து குவிப்பு வழக்கில் இந்த கருத்துப்படி நீதி கூறுங்கள் தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது சொல்ல போனால் அம்மாவின் ஆவியும் இதைத்தான் எதிர்பார்க்கும் கூடவே இருந்து குழிபறித்து கொன்றவர்கள் ஆயிற்றே
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
08-ஜன-201709:51:16 IST Report Abuse
Manian சங்கு சக்ர சாமி வந்து சிங்கு சிக்குன்னு ஆடினாராம்ன்னு ஒரு பாட்டு உண்டு. ஆனா அந்த சிங்கு வேறே இங்காரு அய்யம்பேட்டை ஐயங்காரு.
Rate this:
Share this comment
Subbu - chennai,இந்தியா
08-ஜன-201713:17:48 IST Report Abuse
Subbuமுதலில் உச்சநீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புகளை புரியும் வகையிலும், வீண்கால தாமதங்கள் செய்யாமலும்,உரிய முறையில் வழங்கட்டும் அதன்பின்னர் மற்றவர்களுக்கு புத்திமதி கூறட்டும், ஜெயா மரணம் பற்றிய வழக்கில் எந்த வித விளக்கமும் சொல்லாமல் வழக்கை தள்ளுபடி செய்தது ஏன், 20 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த ஜெயா ஊழல் வழக்கின் இறுதி தீர்ப்பை இன்னமும் வழங்காமல் இருப்பது ஏன்? இதற்கு முதலில் புரியும்படி தீர்ப்பை கூறுங்கள் நீதி அரசர்களே?...
Rate this:
Share this comment
Cancel
Harshu - Madurai,இந்தியா
08-ஜன-201709:44:48 IST Report Abuse
Harshu குற்றம் சாட்டப்பட்டவரை, குற்றவாளி என்றோ, நிரபராதி என்றோ, நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் - அதுக்கு தானே நீதி மன்றம் இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
08-ஜன-201709:00:17 IST Report Abuse
Ramesh Kumar அதே போல் லட்சக்கணக்கில் தேங்கி கிடைக்கும் வழக்குகளுக்கும் விரைவில் நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-ஜன-201707:23:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி முதலில் குன்ஹா தீர்ப்பு, அது சரியில்லைன்னு குமாரசாமியோட கணிதப்பிழைகளுடன் ஒரு குப்பை தீர்ப்பு, அந்த அசிங்கத்தை அழிக்க சுப்ரீம் கோர்ட்லே இன்னொரு தபா. ஒரு மாசத்திலே ஆணி பிடுங்கணும்னு அவசரப்படுத்தி... முதல் எதிரி செத்தே போனாங்க 6 மாசம் தாண்டியும் தீர்ப்பை சொல்ல துப்பில்லே..
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
08-ஜன-201708:40:48 IST Report Abuse
NRK Theesanமுதலில் குன்ஹா தீர்ப்பு, குமாரசாமியோட தீர்ப்பு ரெண்டையும் தமிழில் மாற்றி வெளியீடு. வழக்கு போட்ட திருடர்களை பற்றி தெரியும் .பெருசா கணக்கு தப்புன்னு எவன் சொன்னான் ? 2 8 கோடி அபராதம் போட்டாங்க என்ன சிறையில் தண்டனையா கொடுத்தாங்க ? வாங்கப்பட்ட தீர்ப்பை பற்றி சொல்லவேண்டாம் .மீடியாக்கள் கருப்பு பணத்தையும் மக்களை ஏமாற்றவும் தான் உள்ளது .தைரியம் இருந்தால் தமிழாக தீர்ப்பை வெளியீடு ? பிளாக் முகவரியுடன் ? முடியுமா ? யாராக இருந்தாலும் ?...
Rate this:
Share this comment
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
08-ஜன-201712:36:25 IST Report Abuse
Giridharan Srinivasanமதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ, குமாரசாமியோட தீர்ப்பில் கணிதப்பிழைகள் உள்ளதாக கூறும் நீங்கள், குன்ஹா அளித்த தீர்ப்பில் உள்ள கணிதப்பிழைகளை இலகுவாக மறந்தது எப்படி? குன்ஹா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தங்க நகைகளை மதிப்பீட்டை செய்த பொழுது ரூபாய் எண்பத்தியெட்டு லட்சத்து ..... என்று எழுதுவதற்கு பதிலாக ரூபாய் எட்டு கோடியே..... என்று அற்புதமாக எழுதி உள்ளார். இது அவர் எழுதும் பொழுது செய்த பிழையா? அல்லது நீங்கள் கூறுவதுபோல் குறிப்பிட வேண்டும் என்றால் "குன்ஹாவின் கணிதப்பிழைகளுடன் ஒரு குப்பை தீர்ப்பு" என்று கூறலாமா? நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள குறைகளை கூறினால் அது கோர்ட் அவமதிப்பு, ஆனால் அவருக்கு மேல் பணி இடத்தில் உள்ள குமாரசாமியின் தீர்ப்பை பற்றி என்ன வேண்டுமானாலும், தரக்குறைவான வார்த்தைகளால் கூட விமர்சிக்கலாம் அப்படித்தானே? ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-ஜன-201706:36:21 IST Report Abuse
Kasimani Baskaran சிங்கு பதவிக்கு வந்தவுடன் சும்மா நீதிமன்றமே அதிருது.... சிங்குன்னா சும்மாவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை