காவிரி இழப்பீடு வழக்கில் புதிய உத்தரவு| Dinamalar

காவிரி இழப்பீடு வழக்கில் புதிய உத்தரவு

Added : ஜன 09, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காவிரி இழப்பீடு வழக்கு, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: காவிரியில் தண்ணீரை திறந்து விடாத, கர்நாடக அரசு, 2,500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்ய வழக்கில், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த மனுவில், ‛21 ஆண்டுகளாக சம்பா, குறுவை பயிர்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டது கிடையாது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை அந்த அரசு எப்போதும் மதிப்பதில்லை. மத்திய அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் கர்நாடக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தடைப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,045.75 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.1,434 கோடி அபராதம் விதிக்க வேண்டும்.இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து ரூ.2,500 கோடி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள், ஒரு வாரத்தில், சாட்சியங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்; அதன் பிறகு, நான்கு வாரங்களில், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201702:50:58 IST Report Abuse
தமிழ்வேல் இன்றுமுதல் , தண்ணீர் திறக்காத பட்சத்தில் நாளொன்றுக்கு 1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என தீர்ப்பு அளிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Subbu - chennai,இந்தியா
10-ஜன-201713:19:38 IST Report Abuse
Subbuஇந்த உச்சநீதிமன்றத்திற்கு வெட்கம்,மானம்,சுரணை எதுமே இல்லையா, கர்நாடக நீதிமன்ற தீர்ப்புகளை காலில் போட்டு மிதித்து கொண்டுஉள்ளது, ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்க வக்கின்றி மென்,மேலும் அவர்களுக்கு கால அவகாசத்தை வழங்கிக்கொண்டே உள்ளது இதில் ஏதோ அரசியல் சூட்சுமம், உள்ளது....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201702:49:23 IST Report Abuse
தமிழ்வேல் 21 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கவில்லைன்னு சொல்லிட்டு அதுக்கு ரூ.2,500 கோடி போதுமானதா ? இதுலயும் குமாரசாமி கால்குலேட்டரை உபயோகிக்கிறானுவோளா ? . சென்ற மாதங்களில் மட்டும் 45 விவசாயிகள் இறந்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
09-ஜன-201713:11:19 IST Report Abuse
Needhiyin Pakkam Nil உயிரோடு இருக்கும் போது தண்ணீர் தர மாட்டான் செத்த பின்பு பால் ஊற்றுவான் அதுவும் இறந்தவன் தமிழக விவசாயியாக இருந்தால் அதுவும் இல்லை அந்த மாதிரிதான் இந்த தீர்ப்பு எல்லாம் முடிந்த பிறகு வரும்னு நினைக்கிறன் தீர்ப்பை கொண்டுபோய் சமாதியில் வைப்போம் வேறென்ன செய்ய.............
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201702:55:13 IST Report Abuse
தமிழ்வேல் எப்பவும் பால வாயில ஊத்த மாட்டானுவோ .....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-ஜன-201712:12:06 IST Report Abuse
மதுரை விருமாண்டி தமிழ்நாட்டிலே அடிமை அமைச்சர்களுக்கு மாபியா குவீனின் காலை கழுவுறதுக்கும், அவனவன் டவுசரை அவுறாமல் பிடிச்சிக்கிட்டு நிக்கிறதுக்குமே நேரமில்லை. இதிலே கணக்கு பண்ணி வழக்கை சந்திப்பார்களாக்கும்.. குமாரசாமி ஜட்ஜு கிட்டே கேட்டா குண்டக்கமண்டக்க கணக்கை போட்டு குழப்பி விட்டுடுவார். வழக்கு பிஞ்சி போயிடும். வேணுமுன்னா அவரு ஹெல்ப்பை கேளுங்களேன்.
Rate this:
Share this comment
Raj - bangalore,இந்தியா
09-ஜன-201713:41:39 IST Report Abuse
Raj2013 தொடரப்பட்ட வழக்கு? யார் செய்தது ? உங்கள் தந்தையா?...
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
09-ஜன-201711:26:47 IST Report Abuse
Narayanan Muthu கர்நாடக அரசு ஏற்கனேவே தனது மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிய மனுவை ஏற்று மத்திய அரசாங்கமும் உறுதி செய்துவிட்டது. தமிழக அரசு அதற்கான முனைப்பினை தொடங்க கூட இல்லை. இப்படி இருப்பின் நஷ்ட ஈடு கோரிய மனு மீதான தீர்ப்பிற்கு போதிய ஆதாரம் இல்லை என் மறுக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Raj - bangalore,இந்தியா
09-ஜன-201713:45:25 IST Report Abuse
Rajதிரு முத்துகிருஷ்ணன், கர்நாடக பருவ மழை காலம் மே முதல் செப்டம்பர் வரை அந்த காலத்தில் மழை பொய்த்தால் அவர்கள் மத்திய அரசிடம் முறையிட்டு பெற்றனர், நமது பருவ மழை காலம் அக்டோபர் 15 முதல் டிசம்பர் 31 வரை இனிதான் நாம் முறையிட வேண்டும். இத்தனைநாள் தமிழக கோரிக்கையை நிராகரிக்க முடியாது....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
09-ஜன-201713:57:08 IST Report Abuse
தேச நேசன் கர்நாடகத்தில் (தென்மேற்கு) பருவ மழைக்காலம் செப்டெம்பரில் முடிந்துவிட்டது அது முடிந்தால்தான் வறட்சி பற்றி பேசவே முடியும் ஆனால் நமதுவடகிழக்கு பருவமழை சென்ற வாரம்தான் முடிவுற்றது இனிமேல்தான் அறிக்கை கொடுக்க முடியும் பருவமழை முடியுமுன் அளிக்கப்படும் அறிக்கைக்கு எங்கும் மதிப்பில்லை...
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
09-ஜன-201713:58:21 IST Report Abuse
தேச நேசன் இந்த நஷ்ட ஈடு தீர்ப்பாயத்தின் உத்தரவு வந்த நாளிலிருந்து கேட்கப்படுவது தற்போதைய வறட்சியாலல்ல...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜன-201702:53:42 IST Report Abuse
தமிழ்வேல் பிள்ளைகளா, அப்போ எப்புடி 15 நாள் நாராயணசாமி 15 நாட்களுக்கு முன்னாள் நேரடியாக மோடியிடம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார் ? புதுவை தமிழ்நாட்டின் மையத்தில் இல்லையா ?...
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
09-ஜன-201711:22:06 IST Report Abuse
thiru எப்படியோ இந்த மதம் ஓட்டியாச்சு... இப்படியே நான்கு வாரம்ஐ ந்து வாரம் அப்படின்னு கடத்திட்டே போங்க... இருக்குற கொஞ்சம் விவசாயிகளும் சாகட்டும்... கேப்பதுக்கு நாதி இல்லாத தமிழகமா இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Maniraj - Chennai,இந்தியா
09-ஜன-201711:19:30 IST Report Abuse
Maniraj ஒவ்வொரு கேசும் இழுத்தடிக்கப்பட்டு, யுகங்கள் கடந்தாலும் உருப்படியா தீர்ப்பு தர துப்பில்லை?
Rate this:
Share this comment
Raj - bangalore,இந்தியா
09-ஜன-201713:46:54 IST Report Abuse
Rajதிரு மணிராஜ் நீங்கள் கூறிய கருத்து 100 க்கு 100 உண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை