தேர்வாணைய உறுப்பினர்கள் நியமன தடை செல்லும்: சுப்ரீம் கோர்ட்| Dinamalar

தேர்வாணைய உறுப்பினர்கள் நியமன தடை செல்லும்: சுப்ரீம் கோர்ட்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 11 உறுப்பினர்களின் தேர்வு செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், மீண்டும் தேர்வு நடைமுறைகளை நடத்தி உறுப்பினர்களை நியமிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் மாவட்ட நீதிபதி, வி.ராமமூர்த்தி உட்பட, 11 பேரை, தமிழ்நாடு தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட், 'இவர்களின் நியமனம் செல்லாது' என, டிச., 22ல் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் நீக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அளித்த தீர்ப்பு:அரசு பணிக்கான உயர் அதிகாரிகளை தேர்வு செய்யக் கூடிய, தமிழ்நாடு தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் நியமனத்தில் அவசரம் காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், எவ்வித சர்ச்சையிலும் சிக்காத, முழு தகுதி உள்ளவர்களையே உறுப்பினர்களாக நியமித்திருக்க வேண்டும். இந்த, 11 பேரின் நியமனம், ஒரே நாளில் நடந்துள்ளது. இது தொடர்பாக எவ்வித ஆலோசனையும், விவாதமும், போலீஸ் விசாரணை உள்ளிட்டவை நடத்தப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. 'பயோ - டேட்டா' எனப்படும், அவர்களது சுய விபரங்கள் மட்டுமே பெறப்பட்டு, ஒரே நாளில் அவர்களை நியமிக்கும் பரிந்துரை அளிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்ட நியமனத்தில், கோர்ட் தலையிட முடியாது என்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம். அதன்படி, தமிழ்நாடு தேர்வாணையத்துக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட, இந்த, 11 பேரின் நியமனம் செல்லாது. தேர்வு முறைகளை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தி, புதிய உறுப்பினர்களை நியமிக்கலாம். அதுவரை அல்லது அடுத்த மூன்று மாதங்களுக்கு, இந்த, 11 பேரும் தங்கள் பதவியில் தொடர முடியாது.பதவி நீக்கப்பட்டுள்ள இந்த, 11 பேரில், முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தியை தவிர, மற்றவர்களின் பெயர்களை மீண்டும் உறுப்பினர் பதவிக்கு பரிசீலிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம். தன்னுடைய நீதிபதி பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்ய தகுதியில்லாதவர் என அறிவிக்கப்பட்ட, முன்னாள் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தியை, இந்த பதவிக்கு எப்படி பரிசீலித்தனர்? மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மிகவும் வெளிப்படையாக, புதிய உறுப்பினர்களின் தேர்வு இருக்க வேண்டும். இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
பதவியிழந்த உறுப்பினர்கள் : சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ்நாடு தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, பதவி இழந்துள்ளவர்கள் விபரம்:முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, ஆர்.பிரதீப் குமார், வி.சுப்புராஜ், எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.ராஜாராம்.
டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை! : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும், 14 உறுப்பினர்கள், கவர்னரால் நியமிக்கப்படுகின்றனர். காலியாக இருந்த, 12 இடங்களில், 11 உறுப்பினர்கள், 2016ல் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமீறல் இருப்பதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், 11 உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என அறிவித்தது; சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பால், டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பணி நியமனம் தொடர்பாக, உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். தலைவர் மற்றும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்றால் மட்டுமே, கூட்டம் நடத்த முடியும். அதன்படி மொத்தம், 15 பேரில், ஐந்து பேர் இருக்க வேண்டும்.ஆனால், தற்போது தலைவர் அருள்மொழி, உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், குப்புசாமி என, மூன்று பேர் மட்டுமே இருப்பதால், ஆணைய கூட்டத்தை நடத்த முடியாத சூழல் உள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.