ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில் முகாம் | ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில் முகாம்: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., அண்ணன் மகள் தீபா, ஆதரவாளர்கள், சென்னையில் முகாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவின் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில், தீபா பேனர்களை அகற்றிய போலீசாருடன், அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

ஜெ., அண்ணன் மகள் தீபா, ஆதரவாளர்கள், சென்னையில் முகாம்

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும் பாலானோர், தீபாவை அரசியலுக்கு வரும்படி, அழைப்பு விடுத்து வருகின்றனர். தீபா, தன் முடிவை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான, 17ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும், தீபா பேரவையை துவக்கி, ஆதரவு தெரிவித்து வரும், பெரும்பாலான தொண்டர்கள், சென்னைக்கு வந்து, ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துகின்றனர். பின், தி.நகரில் உள்ள தீபா வீட்டை நோக்கி படையெடுக்கின்றனர். இவ்வாறு வரும் தொண்டர்கள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைப்பது, பேரவை துவக்கு வது, ஆலோசனை கூட்டம் நடத்துவது என, தமிழகம் முழுவதும் பரபரப்பான காட்சிகள், தினமும் அரங்கேறி வருகின்றன.

தீபாவுக்கு ஆதரவாக, 'பேஸ்புக்' பக்கத்தை துவக்கி, அதில் பலரும் ஒன்றிணைந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், தீபாவுக்கு ஆதரவு தெரிவிப்போர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.

இந்நிலையில், தன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரும்படி தீபா அழைப்பு விடுத் துள்ளார். அவர்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார். இன்று மாலை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தீபாவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். ஈரோட்டில் தான், முதல் முறையாக, தீபா பெயரில் கட்சி துவங்கப்பட்டுள்ளது. சின்னம், கொடியை அறிமுகம் செய்து,தீபாவை பொது செயலராக முன் மொழிந்து, ஐந்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இந்த தீர்மானங்களை, தீபாவிடம் ஒப்படைத்து, 'புதிய கட்சிக்கு தலைமையேற்க வேண்டும்' என, அழைப்பு விடுக்கவும், தீபாவை நேரில் சந்திக்கவும், ஈரோடு மாவட்ட மீனவரணி முன்னாள் செயலர் பாரூக் தலைமையில், ஐந்து பேர் சென்னை வந்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து, மேலும், பல ஊர்களில் இருந்தும் ஆதரவாளர்கள் சென்னைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்திய பின், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அன்று, தீபா முடிவை அறிவிக்க உள்ளார்.

சேர்க்கை தீவிரம்


இதற்கிடையில், 'ஜெ., - தீபா பேரவை' என்ற பெயரில், அனைத்து மாவட்டங்களிலும், 'வாட்ஸ் ஆப்' குழுக்களை துவக்கி உள்ளனர். இக்குழுக்களில், சசிகலா எதிர்ப்பாளர்கள், உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், நகரம் மற்றும் கிராமங்களிலும், குழுக் கள் அமைக்கும் பணியை துவக்கி உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து, ஆதரவாளர்களை, ஒருங்கிணைக்கும் பணியையும் துவக்கி உள்ளனர்.

Advertisement

சில மாவட்டங்களில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக, தொடர்ந்து பல இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு கரூர், காமராஜபுரத்தில் தீபா ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், திருச்சி மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் செயலர் சவுந்தரராஜன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர்.

* பேனர் அகற்றம்


தமிழகத்தின் பல இடங்களில், தீபா ஆதரவாளர் கள் வைத்திருந்த பேனர்களை, நள்ளிரவில் போலீசார் திடீரென அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபா ஆதரவாளர் கள் சாலை மறியல் செய்தனர், சில இடங்களில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. திரு வண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி முழுவதும் தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்களை, அனுமதி பெறவில்லை என்று கூறி, நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் அகற்ற வந்தனர்.

தீபா ஆதரவாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்திய போலீசார், 'இது, மேலிட உத்தரவு' என கூறி, பேனரை எடுத்துச் சென்றனர். போலீசாருக்கு எதிராக கோஷங் களை எழுப்பி, தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல் நடத்தினர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையிலும் போலீசார் பேனர்களை அகற்றிய தால் ஆத்திரமடைந்த, தீபா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறப்பு பூஜை


தீபாவின் பிறந்த நாளான நேற்று, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில், பூமீஸ் வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், அ.தி. மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் குழு -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று...சசிகலா அவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசை பட்டால் நிச்சயம் அவர் கட்சியில் உள்ள 90 சதவிகிதமானவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்...அப்போது கட்சியில் இருந்து பலரும் வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது...

Rate this:
Alaghu - chennai,இந்தியா
11-ஜன-201719:35:12 IST Report Abuse

AlaghuChidamabaram-Ex finance minster in central > stalin + SASIKALA+ DEEPA+ OPS+ KARUNANIDHI, Thirunavukarasu- Ex minister in Mgr ministry and Ex central Minister Evks-Periar grand son. All dmk , admk, mdk generated by its grand father Mani shankar iyer-More qualified ex central minister Kushboo-Crowd puller They why people go DMK,ADMK,BJP ETC. NOW THEY START TO GO EVEN DEEPA. Kamarajar is only on best CM tamil nadu have that belong to congress. So we go back Congress

Rate this:
ramaswamy - PUDUCHERRY ,இந்தியா
11-ஜன-201721:32:30 IST Report Abuse

ramaswamyChidamabaram-Ex finance ஒரு திருடன் . பேங்க் வாங்குற வட்டிக்கு சர்விஸ் டாக்ஸ் போட்ட மேதை...

Rate this:
jay - toronto,கனடா
11-ஜன-201718:47:38 IST Report Abuse

jayஜே அம்மா தைரியமா அதிரடி முடிவு எடுப்பவர் , ஆனால் தீபா அம்மையார் பொன்னான காலத்தை வீணடிக்கிறார் ,,

Rate this:
jay - toronto,கனடா
11-ஜன-201718:09:16 IST Report Abuse

jayதீபா அம்மா வந்து விடமாட்டார் ,,, நொந்து போய் விடுவார்

Rate this:
GPV - Chennai,இந்தியா
11-ஜன-201717:29:31 IST Report Abuse

GPVஏன் இவ்வளவு முக்கியத்துவம் இவருக்கு?

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
11-ஜன-201716:13:52 IST Report Abuse

ரத்தினம்Diamondu உங்களுடைய பதிவை பார்த்தபிறகு தான் தெரியுது. இந்த பெண்மணியின் background . மதமாற்றம் செய்யும் கூட்டமா? தமிழ் நாட்டுக்கு வேற நல்ல ஆள் கிடைக்கல்லையா?

Rate this:
Krishnan rajamani - Coimbatore,இந்தியா
11-ஜன-201721:28:12 IST Report Abuse

Krishnan rajamaniதமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு தடைவிதித்து சட்டம் இயற்றியவர் ஜெயலலிதா. அன்று அவர் உணரவில்லை தன் வீட்டிலேயே இது போன்று நடக்கும் என்று. தான் பாசமாக வளர்த்த அண்ணன் மகள் தீபா, பேட்ரிக் என்னும் கிருத்துவரை காதலிப்பதை அறிந்து கண்டித்தார். தீபாவின் பிடிவாத குணத்தால், செல்வி ஜெயலலிதாவால் தீபா- பேட்ரிக் காதலை தடுக்க முடியவில்லை. பின் தன் அளவு கடந்த பாசத்தின் காரணமாக காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதிலும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். இதற்கு தீபாவின் காதலன் பேட்ரிக் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி தீபாவை கிருத்துவ மதத்திற்கு மாறவும் கட்டாயப்படுத்தினார். அன்று தன்னை வளர்த்த அத்தையைக் காட்டிலும் தீபாவிற்கு தன்னுடைய காதல் பெரியதென்று தெரியவே, ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க துணிந்தார். தன் காதலன் விருப்பப்படி கிருத்துவ மதம் மாறி, பின் கிருத்துவ மதத்தின் முறைப்படி திருமணமும் செய்து கொண்டார். கட்டாய மத மாற்று தடை சட்டம் கொண்டு வந்த ஜெயலலித்தா அன்று உணர்ந்திருந்தார் தன் அரசியல் எதிரிகள் தன்னை பழிவாங்கும் பொருட்டு தீபாவை பகட காயாக பயன்டுத்தி இப்படி ஒரு காரியத்தில் இறங்கி உள்ளனர் என்று. அன்று முதல் தான் இறக்கும் தருவாய் வரை தீபாவை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா. தன் திருமண பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியேறிய தீபாவும் கடைசி வரை தன் அத்தையை சந்திக்கவேயில்லை. தன்னுடைய அரசியல் எதிரிகளை எளிதில் சம்ஹாரம் செய்யும் ஜெயலலிதா தீபாவிடம் பாச போராட்டத்தில் தோற்றுபோனதும் வரலாறே....

Rate this:
poosari - madurai,இந்தியா
11-ஜன-201715:49:02 IST Report Abuse

poosarikandippaga vara mudiyaathu

Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
11-ஜன-201715:42:22 IST Report Abuse

JAY JAY தீபா அரசியலுக்கு வர வேண்டுமானால், முதலில் நடிக்க வேண்டும்.. இப்போ யாரும் கதாநாயகி சான்ஸ் கொடுக்க மாட்டார்கள்... அம்மா வேஷம் வேணும்னா கிடைக்கும்... இளம் தளபதி, வருங்கால ஹாலிவுட் கிங் , உதயநிதியின் அடுத்த படத்தில் அம்மா வேஷம் போட தகுதியான நபர் தீபா... பாவம் சரண்யா பொன்வண்ணன் , அவருக்கு ஆப்பு வைக்க ஒரு நடிகை ரெடி...

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201717:36:20 IST Report Abuse

Chandramoulliநண்பரே , என்ன இருந்தாலும் அம்மா அவர்களின் மருமகள் . தர குறைவாக பேச வேண்டாம் ....

Rate this:
murumaha - madurai,இந்தியா
11-ஜன-201715:10:00 IST Report Abuse

murumahaஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.................உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ, அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ, புயலுக்கும், நெருப்புக்கும் சிறை போடவோ, மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ...............தீபாவே வா, மக்கள் சக்தியை பார்க்க வா..............

Rate this:
nimmi - Dindigul,இந்தியா
11-ஜன-201714:29:33 IST Report Abuse

nimmi"நமது நிருபர் குழு". தீபாவிற்கு ஆதரவான செய்திகள் திரட்டும் பணியில், ஒரு நிருபர் குழுவே போட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. தீபா தேறுவதும், தேறாததும் தினமலர் கையில் இல்லை. அவரது ஆற்றலில்தான் இருக்கிறது.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜன-201718:46:05 IST Report Abuse

இந்தியன் kumarஇறைவன் அருள் இருந்தால் தீபா வெல்லலாம் மக்கள் ஆதரவோடு...

Rate this:
மேலும் 115 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement