'32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின் கணக்குகளை தணிக்கை செய்யணும்!' | '32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின் கணக்குகளை தணிக்கை செய்யணும்!' Dinamalar
பதிவு செய்த நாள் :
'32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின்
கணக்குகளை தணிக்கை செய்யணும்!

'மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியை பெறும், என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

 '32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின் கணக்குகளை தணிக்கை செய்யணும்!'

என்.ஜி.ஓ.,க்கள் செயல்பாடுகள் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள தாவது:
நாடு முழுவதும், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட, என்.ஜி.ஓ.,க்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளன.

இவற்றுக்கு, கடந்த ஐந்து ஆண்டு களில், 11 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியாக அளித்துள்ளன.
இது போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் கணக்குகளை தணிக்கை செய்ய, அவற்றை கண்காணிப்பதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு வகுக்க வேண்டும். கணக்குகளை தாக் கல் செய்யாத அமைப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்தால் மட்டும் போதாது; அவற்றின் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

கடந்த, 2002 மற்றும் 2008ம் ஆண்டு காலத்தில், என்.ஜி.ஓ.,க்களுக்கு, மத்திய அரசு,4,756 கோடி ரூபாயும், மாநில அரசுகள், 6,654 கோடி ரூபாயும் நிதி உதவியாக அளித்துள்ளன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, முதற்கட்ட விசாரணை நடத்திய, சி.பி.ஐ., நாடு முழுவதும் உள்ள, 32 லட்சம் அமைப்புகளில்,

Advertisement

3 லட்சம் அமைப்புகள் மட்டுமே, கணக்குகளை தாக்கல் செய்துள்ள தாக கூறியுள்ளது.
இந்த அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட நிதி, அது எவ்வாறு செலவிடப் பட்டது என்பது உட்பட, முழு அளவிலான தணிக்கையை நடத்திட வேண்டும். வரும், மார்ச், 31க்குள், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayadev - CHENNAI,இந்தியா
11-ஜன-201720:50:10 IST Report Abuse

Jayadevஅரசியல் கட்சிகளை தணிக்கை செய்யமுடியுமா???நடக்கிற வேலையா ???

Rate this:
11-ஜன-201714:26:06 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்உள்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களை மூளை சலவை செய்து அவர்களின் சொத்து, சம்பாத்தியத்தை அபகரித்து கொள்வது, இவர்களை மதம் மாற்றுகிறேன் என்று வெளிநாட்டில் இருந்து பணம் பெறும் மோசடி கும்பல்தான் அதிக அளவில் இந்த NGO களை நடத்தி வருகிறது. இதற்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201714:17:27 IST Report Abuse

CHANDRA GUPTHANஇப்ப பச்சை பார்ட்டிகளும் + பாவாடை பார்ட்டிகளும் லபோ திபோன்னு குதிப்பார்கள். வருமானம் வரும் அடிமடியிலேயே கை வெச்சா எப்படி

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)