'ரெட் பஸ் முன்பதிவு டிக்கெட் செல்லும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ரெட் பஸ் முன்பதிவு டிக்கெட் செல்லும்'

Added : ஜன 10, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

'ரெட் பஸ் இணைய தளத்தில், முன் பதிவு செய்யப்பட்ட, டிக்கெட்டுகள் செல்லும்; பயணிகள் பீதி அடைய வேண்டாம்' என, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பயணிகள், சொந்த ஊர் செல்ல, 'ரெட் பஸ்' இணையதளம் வழியே, ஆம்னி பஸ்களுக்கான, டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.
பெரும் குழப்பம் : இந்நிலையில், நேற்று மதியம், 'ரெட் பஸ் இணைய தளத்தில் புக்கிங் செய்யப்பட்ட, பஸ் டிக்கெட்டுக்கள் செல்லாது' என, தமிழக ஆம்னி பஸ் மற்றும் டிரைவர்கள், புரோக்கர்கள் சங்க தலைவர் பாண்டியன் அறிவித்தார். இந்த அறிவிப்பு, பயணிகள்மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
தவறான தகவல் : இது குறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர், அப்சல் பர்வின் கூறியதாவது: தீபாவளி பண்டிகையின் போது, ரெட் பஸ் இணையதளத்தில், தங்களை இணைத்து இருந்த, புரோக்கர்கள் சங்கத்தினர் முறைகேடுகளை அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.போக்குவரத்துத் துறை அமைச்சர், அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து, ரெட் பஸ் இணைய தளத்தில் இருந்து, ஆம்னி பஸ் டிரைவர்கள், புரோக்கர்கள் சங்கத்தினர் நீக்கப்பட்டனர்.இதனால், ரெட் பஸ் இணையதளத்தில் புக்கிங் செய்யப்பட்ட, டிக்கெட்டுக்கள் செல்லாது என, அவர்கள் அறிவித்துள்ளனர்; அது முற்றிலும் தவறான தகவல். ரெட் பஸ் இணையதளத்தில், புக்கிங் செய்த பயணிகளுக்கு வழக்கம் போல சேவை வழங்கப்படும்; பயணிகள் யாரும் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை