மாவட்டத்தில் சுண்ணாம்புக்கு 'ஆர்டர்'...இல்லை: பாதிப்பில் உற்பத்தியாளர்கள்| Dinamalar

மாவட்டத்தில் சுண்ணாம்புக்கு 'ஆர்டர்'...இல்லை: பாதிப்பில் உற்பத்தியாளர்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆண்டிபட்டி;மாவட்டத்தில் சுண்ணாம்புக்கான தேவை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தைப்பொங்கல் வர உள்ள நிலையில் சுண்ணாம்பு காளவாசல்களில் அதற்கான'ஆர்டர்' இல்லாததால், உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமானத்தொழில் நவீனமாகிபோனதால் சிமென்ட், பெயின்ட்,டிஸ்டம்பர் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் சுண்ணாம்புக்கான தேவை குறைந்து விட்டது. கிராமங்களில் தைப்பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகள், மாட்டுக் கொட்டில்கள், தோட்டத்தில் கிணறுகள், மோட்டார் அறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து சுண்ணாம்பு கொண்டு வெள்ளை வர்ணம் பூசுவர். இதனை மேற்கொள்வதில் பலவகை நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், பலரும் உடனடி வேலையாக பெயின்ட்,டிஸ்டம்பர் கொண்டு அழகுபடுத்தி விடுகின்றனர்.
இருப்பினும் பொங்கலுக்கான 'ஆர்டர்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுண்ணாம்பு தொழில் செய்வோர் முன்கூட்டியே சுண்ணாம்பை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் அதற்கான 'ஆர்டர்'தான் கிடைத்தபாடில்லை. சுண்ணாம்பு உற்பத்தியாளர் ஆண்டிபட்டி தனுஷ்கோடி கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளில் விவசாயம் பலமடங்கு குறைந்து விட்டது. பருவநிலை மாற்றத்தால் விளைபொருட்களின் அளவு குறைந்து விவசாயத்தொழில் செய்வோர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் கிராமங்களில் தைப்பொங்கல் விழா களை இழந்து விடுகிறது.
சுண்ணாம்பை முதல்நாளே ஊறவைத்து,பின்னர் வடிகட்டி தேவைக்கேற்ற கலவையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும். அவசரமான சூழலில் இத்தகைய பணிகளை தவிர்த்து, பெயின்ட், டிஸ்டம்பர் ஆகியவற்றை உடனடியாக வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சுண்ணாம்பு வேண்டாத பொருளாகி வருகிறது. காலம் காலமாக இத்தொழிலை தொடர்ந்தாலும், இன்னும் சிலஆண்டுகளில் காணாமல் போய்விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது,என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
11-ஜன-201714:20:44 IST Report Abuse
ganapathy காம்பவுண்ட் சுவர்கள்...அரசு கட்டிடங்கள் பள்ளிகள் போன்ற இடங்களில் கண்டிப்பாக சுண்ணாம்பு அடியுங்கள். இவை கிருமி வராமல் தடுக்கும்...நம்மளுடைய கிராமத்து வீடுகளிலும் சுண்ணாம்பு அடிக்கலாம்... நகர மாயம் என்று சொல்லி எல்லாவற்றையும் இழந்து வருகிறோம்... ஏழைகளின் தொழில் பாதிக்காத படி செயல்படுங்கள்... புதிய வீடுகளுக்கும் முதல் கோட்டிங் சுண்ணாம்பு அடிக்கணும்..பின்னர் வேண்டுமானால் டிஸ்டெம்பர் அடியுங்கள்... மூட்டைப்பூச்சி கரையான் வராமல் பாதுகாக்கும்...சுண்ணாம்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.