மருமகனை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப்| Dinamalar

மருமகனை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மருமகனை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ள, டொனால்டு டிரம்ப், தன் மருமகனை, அதிபரின் மூத்த ஆலோசகராக நியமித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, கடந்த ஆண்டு, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மனைவி ஹிலாரிக்கும், பிரபல தொழில் அதிபர், டொனால்டு டிரம்புக்கும் இடையே, கடும் போட்டி நிலவியது.பெரும்பாலான கருத்து கணிப்புகள், ஹிலாரிக்கு ஆதரவாகவே வெளிவந்த நிலையில், அதிபர் தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, விரைவில் அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அரசுத் துறையில் முக்கிய முடிவெடுக்கும் விஷயத்தில், அதிபருக்கு ஆலோசனை வழங்க, மூத்த ஆலோசகர் நியமிக்கப்படுவது வழக்கம்; இவரை நியமிக்கும் முழு அதிகாரமும், அதிபருக்கு உண்டு. வரும், 20ல், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்பின் மூத்த ஆலோசகராக, அவரது மகள், இவாங்கா டிரம்பின் கணவர், குஷ்னர், 35, நியமிக்கப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை கவனித்து வரும் குஷ்னர், சிறந்த நிர்வாகி என, டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பின் வெற்றிக்காக, பல வியூகங்களை வகுத்தவர் குஷ்னர். இவரை தொடர்ந்து, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலர், முக்கிய பதவிகளில் நியமிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-ஜன-201714:55:30 IST Report Abuse
Cheran Perumal இந்திய கலாச்சாரம் உலகெங்கும் பரவுது. மனைவி மகன் மகள் எல்லோருக்கும் பதவி என்பதே, இங்கு பல கட்சிகளின் காட்சிகள்.
Rate this:
Share this comment
Cancel
usMaN Ali / உஸ்மான் அலி - ABU DHABI,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201711:26:00 IST Report Abuse
usMaN Ali / உஸ்மான் அலி காமராஜர் இறந்துவிட்டார் உலகத்துல அவரை தவிர எல்லா நட்டெழும் குடும்ப அரசியல் தான், உலகம் போட்டுரும் தலைவன் என்றால் அவர் காமராஜர்தான் என் அப்பா ( புரட்சி கமல் பாஷா LBK) அவரை பற்றி நெறைய கூறியிருக்கார்
Rate this:
Share this comment
Cancel
MURUGAN - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
11-ஜன-201708:25:12 IST Report Abuse
MURUGAN ஆனால் நம் நாட்டை போன்ற கேடுகெட்ட அரசியல் அமெரிக்காவில் இல்லையே
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
11-ஜன-201707:02:03 IST Report Abuse
தேச நேசன் அங்கு மட்டும் மனிதன் வேறு வகையா என்ன? அப்பாவைத் தொடர்ந்து மகன் ஜனாதிபதியாவதும் கிளிண்டன் மனைவியே போட்டியிட்டதும் சமீப வரலாறு கொஞ்சம் ஆராய்ந்தால் டிரம்புக்கு இணைவி இருந்து அவரது வாரிசுகளுக்கும் பதவி கொடுத்திருப்பாரோ என்னவோ?
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-ஜன-201702:32:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி போற இடமெல்லாம் குடும்ப ஆட்சியாவே வந்து தொலைக்குது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.