கொந்தளிக்கும் விவசாயிகள்:தென்னையை மறந்த வறட்சி ஆய்வுகுழு:பறிபோகுது 40 ஆண்டு வளர்த்த மரங்கள் | Dinamalar

தமிழ்நாடு

கொந்தளிக்கும் விவசாயிகள்:தென்னையை மறந்த வறட்சி ஆய்வுகுழு:பறிபோகுது 40 ஆண்டு வளர்த்த மரங்கள்

Added : ஜன 10, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

வத்திராயிருப்பு;விருதுநகர் மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை பார்வையிட்ட வறட்சி ஆய்வுகுழுவினர் , தென்னை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததால் அவ்விவசாயிகள் மனக்கொதிப்பில் உள்ளனர்.
மாவட்டத்தில் கோடை மழை, பருவமழை அடுத்தடுத்து பொய்த்துப் போனதால் வறட்சியின் கோரப்பிடியில் விவசாயம் சிக்கி சீரழிந்து கிடக்கிறது. காணும் இடங்கள் எல்லாம் வறண்ட நிலங்களும், கருகிய பயிர்களுமாக காட்சியளிக்கிறது. நெல் உள்ளிட்ட நஞ்சை பயிர்களும், கேப்பை, கம்பு, மக்காச்சோளம் போன்ற புஞ்சை பயிர்களும் பயிரிட்ட விவசாயிகள் பெருத்த இழப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
கோடை மழை:தென்னை மரங்களை பொறுத்தவரை அதற்கு அதிக தண்ணீர் தேவை. தண்ணீர் இல்லாமல் 5 மாதங்கள் வரையே தாக்குப்பிடித்து நிற்கும். அதன்பிறகு காய்கள் அளவு குறைந்து, பாளைவிடுவதும், பூக்கள் பூப்பதும் படிப்படியாக குறைந்து காய்ப்பதையே நிறுத்திவிடும். கடந்த கோடைகாலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யாததால் ஏற்கனவே வறட்சியின் பிடியில் இருந்த தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் தென்னை மரங்கள் 4 மாதங்களுக்கு மேலாக நீரின்றி இருந்தன.தற்போதும் பருவமழை ஏமாற்றி விட்டது. அன்று 1500 இன்று 150 இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து மழை கைவிட்டதால் 6 மாதங்களுக்கு மேலாக தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. காய்ப்புத்திறன் குறைந்து தற்போது முழுமையாக அதை இழந்து விட்டன. ஒரு மரத்திற்கு குறைந்தது 50 காய்களாவது காய்த்துக் கொண்டிருந்த மரங்களில் இன்று 10 காய்களுக்கு உள்ளாகவே காய்க்கிறது. ஏக்கருக்கு 1500 காய்கள் வரை மகசூல் பெற்ற விவசாயிகள் 150 காய்கள் கூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இப்படி வறட்சியால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், அரசு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு உள்ளது.
கணக்கெடுப்பு
தற்போது வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பில் ஈடுபடும் மாநில கண்காணிப்பு ஆய்வு குழுவினர் நெல், கம்பு, கேப்பை, மக்காச்சோளம் ஆகியவற்றை மட்டுமே பார்வையிட்டு கணக்கெடுக்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவிக்கு பரிந்துரை செய்கின்றனர். கடுமையாக பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளை சந்திக்க வில்லை. இது அவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியால் எல்லா விவசாயிகளுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு ஒரு சாரர்களை மட்டுமே கணக்கெடுக்கிறது. அப்படியானால் நாங்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாதா, எங்களுக்கெல்லாம் பாதிப்புகள் இல்லையா ,நாங்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா என்கின்றனர் விவசாயிகள்.
கண்ணீர் விடுகிறார்கள்
மகாராஜபுரம் விவசாயி பாலமுருகன் கூறுகையில், “தொடர்ந்து 7 மாதங்களாக நிலத்தில் தண்ணீர் இல்லாமல் மகசூல், மரங்களை இழந்து ஒவ்வொரு தென்னை விவசாயியும் கண்ணீர் விடுகிறார்கள். ஒருமரம் வீழ்ந்து விட்டால் மீண்டும் ஒரு கன்றை நடவு செய்து மகசூல் பெற 4 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். அதுவரை ஒவ்வொரு விவசாயியும் பலனை எதிர்பாராமல் பணத்தையும் உழைப்பையும் செலவழித்து போராட வேண்டும். அவ்வாறு சிரமப்பட்டு வளர்த்து 40 ஆண்டுகளாக பாதுகாத்து வளர்த்த தென்னை மரங்கள் தற்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
40 நாள் பயிர்
40 நாட்கள் வளர்த்த பயிருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தென்னை விவசாயத்திற்கு கொடுக்கவில்லை. இது எந்த விதத்தில் நியாயம். வறட்சி பாதிப்பில் தென்னை விவசாயத்தையும் சேர்த்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.---

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
11-ஜன-201718:33:49 IST Report Abuse
rajan தமிழகத்தில் விவசாயம் பற்றிய கவலை இல்லாமல் ஓட்டு வாங்கி MLA ஆனவனுக சின்னதாயீ க்கு கோஷ்டி கானம் பாடி கொண்டு மிச்சம் மீதிய சுருட்ட வழி தேடுகிறானுக. நாடு நல்லஉருப்படும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை