பயிர்க் காப்பீட்டில் திண்டுக்கல் விவசாயிகள் ஆர்வம்: வறட்சியால் இலக்கை தாண்டிய எண்ணிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மழையின்மையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்ணயித்த இலக்கை விட, கூடுதலாக 11 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.மாறி வரும் பருவநிலை, வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அரசு மற்றும் வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பயிர் காப்பீட்டில் ஆர்வம்: திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு 11 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் மழையளவு குறைந்து வருகிறது. ஆண்டுச் சராசரி அளவான 836 மி.மீ.,யில் இதுவரை 430 மி.மீ.,தான் பெய்துள்ளது. இது 50 சதவீதமாகும். இதனால் மழையை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் பாசனத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். நிலைமையை சமாளிக்க விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டினர். இதனால் இலக்கை விட கூடுதலாக 11 ஆயிரம் விவசாயிகள், அதாவது மொத்தம் 22 ஆயிரம் பேர் காப்பீடு செய்துள்ளனர்.
பாதிப்பு கணக்கெடுப்பு: தமிழகம் முழுவதுமே மழையின்மையால் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பயிர்கள், இழப்புகளை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அரசு அறிவிக்கும் என நம்பிய விவசாயிகள், தற்போது பயிர் காப்பீடு இன்ஷூரன்ஸ் தொகையை நம்பியுள்ளனர். இந்தாண்டு ஏற்பட்டுள்ள வறட்சியால் ஒருசில இடங்களில்தான் பாதியளவு மகசூலாவது கிடைக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான இடங்கள் முற்றிலும் பாதித்துள்ளன. எனவே, சாகுபடி செலவை இன்சூரன்ஸ் தொகையாவது ஈடுகட்டுமா என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.