40 மைக்ரான் பாலிதீன் பைகளில் 50 மைக்ரான் முத்திரை மோசடி:நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் தயக்கம்| Dinamalar

தமிழ்நாடு

40 மைக்ரான் பாலிதீன் பைகளில் 50 மைக்ரான் முத்திரை மோசடி:நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் தயக்கம்

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017
Advertisement
 40 மைக்ரான் பாலிதீன் பைகளில் 50 மைக்ரான் முத்திரை மோசடி:நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் தயக்கம்

மதுரை;மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய பகுதிகளில் 50 மைக்ரான் எடைக்கு குறைவான பைகளுக்கு கடந்த ஜன., 1 முதல் மாநகராட்சி தடை விதித்துள்ளது. தற்போது போலி முத்திரை பதித்த பாலிதீன் பைகள் விற்பனைக்கு வந்துள்ளதால் நடவடிக்கை எடுப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.தடை செய்யப்பட்ட பகுதிகளில் 75 சதவீதம் பாலிதீன் பைகள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி இன்னும் பல இடங்களில் பாலிதீன் பைகள் பயன்பாட்டில் உள்ளன.
பாலிதீன் பைகள் தயாரிக்கும் உரிமையாளர்களுக்கான கூட்டம் மாநகராட்சி நடத்தியது. அதில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தயாரிக்கப்படும் பைகளில் எத்தனை மைக்ரான் என்ற அளவும், எந்த நிறுவனம் தயாரிக்கிறது என்ற முத்திரையும் பைகளில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்நடவடிக்கையால் மதுரையை சார்ந்த பல பாலிதீன் கம்பெனிகள் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பைகள் தயாரிப்பை நிறுத்தியுள்ளன. ஆனால் வேறு பகுதிகளில் இருந்து வரும் பாலிதீன் பைகளில் போலி முத்திரையுடன் பைகள் பயன்பாட்டிற்கு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மதுரையில் ஆயிரம் கிலோவிற்கு அதிகமாக பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில கடைகளில் உள்ள பாலிதீன் பைகளை ஆய்வு செய்த போது அது 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ளது. ஆனால் அதில் 50 மைக்ரான் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தும் கடை உரிமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார். அளவீடு குறைவாக இருப்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.
இந்த பைகளை சைக்கிள், டூவீலர்கள் வந்து சிலர் விற்கின்றனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் எந்த நிறுவனத்தில் இருந்து இதை வாங்குகிறார்கள் என்பது தெரியவரும். அந்த நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இப்பிரச்னைகளில் வியாபாரிகள் சிக்காமல் இருக்க பாலிதீன் பைகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும். தற்போது துணிப்பைகள், சணல் பைகள், காகிதப் பைகள் பல புதுமையாக வந்துள்ளன. இவற்றை பயன்படுத்த வேண்டும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை