ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு | ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு| Dinamalar

ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (39)
Advertisement
ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு

புதுடில்லி : 'ஜல்லிக்கட்டு விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது; இது தொடர்பான வழக்கு, முடிவுக்கு வராமல், இதில், மத்திய அரசால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது' என, மத்திய அரசு கூறி உள்ளது.


கலாசாரத்துடன் தொடர்பு:

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, அனில் மாதவ் தவே கூறியதாவது: ஜல்லிக்கட்டு என்பது, நாட்டின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய விளையாட்டு. இந்த விவகாரத்தில், மக்களின் உணர்வுகளை முழுவதுமாக மதிக்க வேண்டும்.ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து விவகாரங்களும், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. மக்களின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும், சுப்ரீம் கோர்ட் மதிப்பளிக்கும்.

இது தொடர்பான தீர்ப்பை, இன்னும் ஓரிரு நாட்களில், சுப்ரீம் கோர்ட் அளிக்க உள்ளதால், மத்திய அரசும், மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. கோர்ட் என்ன கூறப்போகிறது என்பதை அறிவதற்காக, அனைவரையும் போலவே, கைகளை கட்டியபடி நானும் காத்திருக்கிறேன்.


கருத்து கூற இயலாது:

இந்தியா, ஜனநாயக நாடு. இங்கு, ஒவ்வொன்றுக்கும் சட்ட திட்டங்கள் உள்ளன; அவற்றுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என, இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். வன்முறையோ, துன்புறுத்தலோ இல்லையெனில், தங்கள் உரிமைகளுக்காக, எந்த தளத்திலும், யாரும் குரல் எழுப்பலாம்.

தற்போதைய சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து கருத்து கூற இயலாது. எதுவாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்பே, மத்திய அரசு, தன் முடிவை அறிவிக்க முடியும். இந்த விவகாரத்தில், அவசர சட்டம் குறித்து கூட, எந்த கருத்தும் கூற இயலாது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு, முடிவுக்கு வராமல், மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
15-ஜன-201703:30:07 IST Report Abuse
bairava ஆமாம் பீட்டாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது அதன் தலைவி ஒரு .......சிறந்த .........சேவகி ..அவர்கள் நீதிபதிகளுடன் பல சந்திப்புகளை வைத்துள்ளனர் ஆகவே அவரை எதிர்த்து இந்த கிழட்டு சிங்கங்கள் ஒன்றும் செய்யமுடியாது உங்களால ஆணியே புடுங்க முடியாது எங்களுக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-ஜன-201720:16:03 IST Report Abuse
CHANDRA GUPTHAN அப்துல் ரகுமான் ஜுபைல் அலி : நீங்க ஆட்டை, மாட்டை , மனுஷனை, ஒட்டகத்தை அறுப்பதை எந்த கணக்கில் சேர்ப்பது . அப்ப அது ஹலால் நாங்க அதை பிடிப்பது ஹராமா . சாத்தான் வேதம் ஓதுவது நல்லா தெரிகிறது . முதலில் நீங்க திருந்துங்க பிறகு எங்களை சொல்லலாம் .
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
11-ஜன-201714:09:36 IST Report Abuse
Appu ராஜஸ்தான் ஒட்டகங்கள் சுற்றுலாவுக்கு வருடந்தோறும் உபயோகப்படுத்தப்படுவதற்கும், பல கோயில் குளங்களில் கால் கட்டு போடப்பட்ட நிலையில் இருக்கும் யானைகளுக்கும் சேர்த்து கேஷ் பைல் பண்ண அதுக்கும் எதுவும் செய்ய முடியாதுன்னு இப்படி தான் பொறுப்பில்லாமல் பேசுவாரா இந்த அறிவாளி?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201719:01:40 IST Report Abuse
K.Sugavanamநம்ப ஆர்மில ஒட்டகப்படை இருக்கு ,போலீஸ் கிட்ட குதிரைப்படை Mounted Police இருக்கு, அப்பால நம்ப ஜனாதிபதி கூட ஒரு குதிரை படை வச்சிருக்காரு.. இதுங்க மேல PeTA கேசு போட்டா அதை எல்லாம் தடை பண்ணீடுவாங்க போல.. நல்ல மந்திரி.....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
11-ஜன-201713:12:26 IST Report Abuse
தேச நேசன் கருத்து சொல்லிப்போட்டு , கோர்ட்டில் இருக்கு சொல்ல முடியாது என்று சொன்னால் எப்படி ?
Rate this:
Share this comment
Cancel
Nandhu - chennai,இந்தியா
11-ஜன-201712:24:10 IST Report Abuse
Nandhu நீ எந்த முடிவும் எடுக்காத ..நாங்க தேர்தல் வரட்டும் எடுக்கிறோம்..
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201712:03:15 IST Report Abuse
Durai Ramamurthy உங்களுக்கு சாதகமான உத்தரவுகளை மதிப்பதும், பாதகமான உத்தரவுகளை மிதிப்பதும் எவ்வாறு செய்கிறீர்களோ, அதேபோல, ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழர்களும் இனி அதேபோல நடந்துகொள்வர்.இது சத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201711:56:49 IST Report Abuse
Durai Ramamurthy கோர்ட்டை அந்த அளவுக்கு மதிப்பவர்களாக இருந்தால், கோர்ட் கண்டிப்புடன் கூறிய காவிரி மேலாண்மை வாரியத்தை ஏனய்யா அமைக்கவில்லை?......
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
11-ஜன-201711:45:11 IST Report Abuse
K.Sugavanam PeTA வை இந்தியாவில் தடை செய்ய மதிய அரசு ஏன் தயங்குகிறது..பயமா?அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் இல்லையே..முதலில் PeTA வை தடை செய்யுங்கள்..காளைகளை பட்டியலிடப்பட்ட விலங்குகளில் இருந்து நீக்குங்கள்..இதற்கு என்ன தடை உள்ளது..வெத்து வேட்டுக்கள்..
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-ஜன-201711:36:31 IST Report Abuse
ஜெயந்தன் ஆமாம்.. முட்டாளுங்க எப்படி சரியான முடிவு எடுக்க முடியும்.... ஆனால் இவர்களுக்கு முட்டாள்தனமான முடிவுகள் உடனே எடுக்க முடியும்...
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
11-ஜன-201710:20:03 IST Report Abuse
rmr PETA எதற்கு? இந்தியாவில் அதை தடை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை