ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: பிரதமரை சந்திக்க அ.தி.மு.க., திட்டம் | ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: பிரதமரை சந்திக்க அ.தி.மு.க., திட்டம்| Dinamalar

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: பிரதமரை சந்திக்க அ.தி.மு.க., திட்டம்

Added : ஜன 11, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: பிரதமரை சந்திக்க அ.தி.மு.க., திட்டம்

புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, பிரதமர் மோடியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், இன்று டில்லியில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.


இரு வழிகள்:

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து, காளைகள் இன்னும் நீக்கப்படாததால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தற்போது, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, இரு வழிகள் தான் உள்ளன.


சாத்தியம்:

முதலாவதாக, காளைகளை, காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கி, மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இரண்டாவது, தமிழக அரசு, சட்டசபையில் அவசர கூட்டம் நடத்தி, ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் தரவேண்டும். இதில், முதலாவது வழியே சாத்தியமானது. மத்திய அரசு, அவசர சட்டம் இயற்றினால் போதும்; ஜல்லிக்கட்டு நடத்தி விடலாம்.


மோடியை சந்திக்க திட்டம்?

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில், இன்று(ஜன.,11) காலை, 10:00 மணி அளவில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்த உள்ள, தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக, அனைத்து, எம்.பி.,க்களும், இன்று காலை, 9:00 மணிக்குள், பார்லிமென்டில் உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆஜராகும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201713:45:09 IST Report Abuse
Durai Ramamurthy பிரதமரை சந்தித்த பின் " நாங்கள் கூறியதை பிரதமர் பொறுமையாக கேட்டார், நிச்சயம் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்." என்று பேட்டி கொடுப்பர். அதோடு அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். நமக்கு இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நஹி ஹே ...........
Rate this:
Share this comment
Cancel
maniselvam - natrampalli  ( Posted via: Dinamalar Windows App )
11-ஜன-201712:37:31 IST Report Abuse
maniselvam மெதுவாக பொங்கல் கழித்து சந்தித்து விட்டு வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
11-ஜன-201711:35:52 IST Report Abuse
R. Vidya Sagar ஸ்மால் மம்மியும் போனால் பிரதமர் பயந்து சம்மதித்து விடுவார்.
Rate this:
Share this comment
bairava - madurai,இந்தியா
11-ஜன-201712:57:11 IST Report Abuse
bairava அய்யா ஆர் .வி சுமால் மாம் யாருயா? அது எப்போ டெல்லி போச்சு பிரதமர் அலுவலகம் எங்கு இருக்குனு தெரியாது இப்போ அங்க போன திஹார் பக்கம்னு சொல்லி உள்ள தள்ளிடுவாங்க சும்மா பினாத்தம வேலையை பாரும்...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜன-201711:23:37 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சொந்த புத்தி இல்லாத அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அத்தனை பேரும் பொது அறிவு அற்ற சசிகலாவின் அடிமைப்படையே. இவர்கள் தொகுதி மக்களுக்காக உழைப்பதை விடவும் சசிகலாவுக்கு சேவை செய்வதையே பெருமையாக கருதுபவர்கள். உண்மையான சமூக சேவகர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் வரை தமிழகத்திற்கு விடிவு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201710:49:22 IST Report Abuse
Chandramoulli இந்த வருடமும் ஜல்லிக்கட்டு இல்லாமல் கடந்து போகும். மோடி அவர்களுக்கு அது தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
11-ஜன-201710:41:27 IST Report Abuse
நக்கீரன் ஏன் ஜல்லிக்கட்டை தடை செய்கிறீர்கள் என்று கேட்டால், காளைகள் துன்புறுத்தப்படுகின்றனவாம். எப்படி என்றால் வாலை பிடித்து கடிக்கிறார்களாம். ஈட்டியால் குத்துகிறார்களாம். இவை தவறுதான். எதோ ஓரிருவர் இதை செய்யலாம். இந்த தவறுகள் களையப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கான நெறிமுறைகளை உருவாக்கி விட்டு அனுமதிக்கலாம். அதை விடுத்து, ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டையே தடை செய்வது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை? அப்படி பார்த்தால், இன்று அரசுகள் தொழில்மயமாக்கலின் காரணமாக மனிதர்கள் உட்பட ஏராளமான உயிர்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்காக தொழில்மயமாக்கல் நிறுத்தப்படுகிறதா என்ன? அவ்வளவு ஏன்? ஜல்லிக்கட்டை எதிர்ப்போரும், அதை தடை செய்த நீதிபதிகளும், சாதாரணமாக நடக்கும்போதே எறும்பு போன்ற எத்தனையோ உயிர்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்காக அவர்கள் பறந்தா செல்கிறார்கள்? எனவே காளைகளை யாரும் வேண்டுமென்றே துன்புறுத்துவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காளைகள் தமிழக மக்களின் குடும்பங்களில் ஒரு உறவாக இரண்டற கலந்து விட்டவை.
Rate this:
Share this comment
Cancel
udaya - chennai,இந்தியா
11-ஜன-201710:23:21 IST Report Abuse
udaya யாரு சொல்லி போய் பாக்க போறானுக ? சுண்ணம்மாவா சொன்னாவுக .
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
11-ஜன-201711:02:29 IST Report Abuse
P. SIV GOWRIசதி காலா அம்மா சொண்னங்க...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201709:01:11 IST Report Abuse
Kasimani Baskaran முதலில் நீதிமன்றத்துக்கு தெளிவு வேண்டும்... நீதிமன்றத்துக்கு தெளிவு இல்லை என்றால் சொன்னவர் பேச்சை கேட்டுக் கொண்டு தீர்ப்பு எழுதவேண்டிய நிர்ப்பந்தம் வரும்... தொன்று தொட்டு வரும் கலாச்சாரத்தை நிறுத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
11-ஜன-201708:47:40 IST Report Abuse
Chandramoulli கடைசி நிமிடம் வரை இந்த பிரச்னையை இழுத்து கொண்டு செல்ல வேண்டுமா ????? இதை முன்கூட்டியே செய்து இருக்கலாம் அல்லவா ???? யாரை தான் நம்புவதோ ???? எல்லா அரசியல்வாதிகளும் தமிழகத்தை கிள்ளு கீரையாக தான் பார்க்கின்றனர் . மேலும் நமது சட்டங்களில் ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளன . இதில் அந்நிய என் ஜி ஓ க்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டில் மூக்கை நுழைக்க யார் அதிகாரம் கொடுத்தது . இந்திய கலாசாரத்தில் அவர்களுக்கு என்ன அக்கறை . கேரளாவில் அதிக அளவில் மாடுகள் கொல்லப்பட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வது நியாயமா ????
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
11-ஜன-201708:17:24 IST Report Abuse
Jesudass Sathiyan ஜல்லிக்கட்டு சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடந்துகொண்டு இருந்த வீர விளையாட்டு...அதை நடத்துவதில் இத்தனை சட்ட சிக்கல்கள் ஏன்? தமிழனை ஒழிக்க ஆரியன் நடத்தும் மோசடியா?
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஜன-201708:59:07 IST Report Abuse
Kasimani Baskaran"தமிழனை ஒழிக்க ஆரியன்" - ஒங்க கூட்டம் தான் இதை முன்னின்று செய்தது......
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-ஜன-201714:39:19 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர் :- விரிவாக சொல்லுங்கள் .. அப்போதுதான் இந்த கூட்டங்களுக்கு புரியும் - இந்த கூட்டத்தின் வேலையே இதுதானே ..என்னமோ இவர்கள் தூய தமிழ் ரத்தம் , அட்சர சுத்தமான தமிழ் கலாச்சாரம் இவற்றில் ஊறியது போலவும் இவர்கள் சொல்வதையெல்லாம் ஏமாளி தமிழன் நம்பிக்கொண்டே இருப்பான் என்பது போலவும் எண்ணிக்கொண்டு கருத்து போடுவது....இந்த ஆரியன் திராவிடன் என்கிற மாயைக்கருத்தை உருவாக்கியதே இந்த வந்தேறி மதம் மாற்றி கலாச்சாரக்கொலையாளிகள் தான் ... ஜேசுதாஸ் என்கிற பெயரை வைத்துக்கொண்டு தமிழன் என்று சொல்லவே இவருக்கு தகுதி இல்லை ..இந்த லட்சணத்தில் ஆரியனாம் தமிழனை ஒழிக்கிறானாம் ... ஒட்டுமொத்தமாக இந்தியாவையே, இந்திய கலாச்சாரத்தையே அழிக்க வந்த கூட்டத்திற்கு அல்லக்கையாக மாறி சோத்துக்கு மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறி.. ஜால்றா போட்டுக்கொண்டிருக்கும் எட்டப்பன் கூட்டம்...நீயெல்லாம் ஆரியன் தமிழன் என்ற கற்பனை இனங்களை பற்றி பேசி இங்கே பிரிவினை யை தூண்ட வேண்டாம்...
Rate this:
Share this comment
Jesudass Sathiyan - Doha,கத்தார்
11-ஜன-201716:05:54 IST Report Abuse
Jesudass Sathiyanஏன் கிருத்துவன் தமிழனாக இருக்க கூடாத? மொழிக்கும் இனத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காத எந்த தேசமும் முன்னேறியது இல்லை. அதேபோல மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. மதத்தை பின் தள்ளி இனத்திற்கும் மொழிக்கும் ஆதரவு தாருங்கள். சிவகங்கையில் தமிழனின் சரித்திரத்தின் ஆராட்சியை தடைசெய்ததில் இருந்தும் நீங்கள் திருந்தவில்லையா? என்ன சென்மம் நீங்கள்?...
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-ஜன-201719:03:13 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்மொழிக்கும் இனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது இந்த மண்ணில்தான். இந்த அளவு உலகில் வேறு எங்குமே அனைத்துமக்களையும் மதிக்கும் மனப்பாங்கு இல்லை .. பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இங்கே வந்து இங்கே இருக்கும் மக்களின் அப்பாவித்தனத்தை, வெகுளித்தனத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு இந்த நாட்டையே அடிமை படுத்தினார்கள்.. இங்கே நடத்த பட்ட இன அழிப்பு உலகில் வேறு எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை .. இங்கேநடத்தப்பட்டு கொண்டிருக்கும் கலாச்சார அழிப்பை இன்றும் முன்னின்று நடத்துவது மேலை நாட்டு பிரச்சார மற்றும் வியாபார நிறுவனங்கள் தான் .. இந்தஆரியம் திராவிடம் என்ற மாயை கற்பனை யாரால் அறிமுக படுத்தப்பட்டு வெற்றிகரமாக அந்நியர்களின் மதமாற்ற வேலைகளுக்கு பயன் படுத்த பட்டது.. பாதிக்கப்படும் இனத்தின் ஒரு பிரிவினரையே மயக்கி தாய் இனத்திலிருந்து பிரித்து கோயபல்ஸ் மாதிரி உள்ளுக்குள் சண்டை மூட்டி தங்களதுஉள்நோக்கமான மத விற்பனையில் வெற்றியை பெற்ற நீங்கள் மதத்தை பின் தள்ளுங்கள் என்று சொல்வது சாத்தன் வேதம் ஓதுவது போல உள்ளது...
Rate this:
Share this comment
Jesudass Sathiyan - Doha,கத்தார்
11-ஜன-201723:56:50 IST Report Abuse
Jesudass Sathiyanதெய்வம் ....இராமாயண இதிகாசத்தை கொஞ்சம் முழுமையாக படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் ...உங்கள் எண்ணம் மாறினால் புரிந்திருக்கிறது...அப்படி இல்லை என்றால் நீங்கள் தமிழன் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை