வேலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் பெயின்டர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: தன் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, வேலூர் எஸ்.பி., அலுவலகம் முன், தற்கொலை செய்து கொள்ள வந்த பெயின்டரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூர், பில்டர்பெட் ரோட்டை சேர்ந்தவர் பரந்தாமன், 34, பெயின்டர். இவர் மனைவி செல்வி, 25. இவர்களுக்கு யமுனா, 12, என்ற மகள் உள்ளார். கடந்த, 28ல், சபரிமலை கோவிலுக்கு பரந்தாமன் சென்றார். கடந்த, 2ல் வீடு திரும்பினார். வீட்டில் மனைவி செல்வி இல்லாததால், பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி, வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், பரந்தாமன் புகார் கொடுக்க சென்றார். மனுவை வாங்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால், வேலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்ற போது, அங்கும் பரந்தாமனிடம் மனு வாங்காமல் திருப்பி அனுப்பினர். இதனால், நேற்று காலை, 11:00 மணிக்கு, தன் மகளுடன் வேலூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்த பரந்தாமன், மாயமான தன் மனைவியை மீட்டு தரக் கோரியும், தன் புகார் மனுவை போலீசார் ஏற்காததை கண்டித்தும் தர்ணா செய்தார். அங்கிருந்த போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன், தன் பைக்கில் இருந்து மண்ணெண்ணெயை எடுத்து வந்து, தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது போலீசார் தடுத்தனர். பின், எஸ்.ஐ., மைதிலி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின், வேலூர் தெற்கு போலீசார் பரந்தாமன் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து, செல்வியை தேடி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.