கூரை வீடு தீப்பிடித்து சாம்பல்: ரூ.1.50 லட்சம் எரிந்து நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரை வீடு தீப்பிடித்து சாம்பல்: ரூ.1.50 லட்சம் எரிந்து நாசம்

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தி.மலை: திருவண்ணாமலை அருகே, மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், வீடு எரிந்து, 1.50 லட்சம் ரூபாய் மற்றும், ஐந்து பவுன் நகை நாசமாயின. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புளியம்பட்டி கிராமம், சத்யா நகரில் வசிப்பவர் காமராஜ், 27. இவர் தனது மனைவியுடன் வெளியூரில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். இதனால் வீட்டில் காமராஜின் தாத்தா முனுசாமி, 60, மட்டும் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, திடீரென அவரது கூரை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் தீ மள மளவென பரவியது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். செங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில், வீட்டிலிருந்த, ஐந்து பவுன் நகை, ஒரு லட்சத்து, 50ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என, நான்கு லட்சத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து, செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை