நெகிழ்ச்சி உரையுடன் அமெரிக்க மக்களிடம் இருந்து விடைபெற்றார் ஒபாமா| Dinamalar

நெகிழ்ச்சி உரையுடன் அமெரிக்க மக்களிடம் இருந்து விடைபெற்றார் ஒபாமா

Updated : ஜன 11, 2017 | Added : ஜன 11, 2017 | கருத்துகள் (23)
Advertisement
ஒபாமா, இறுதி உரை, சிகாகோ, அமெரிக்க அதிபர்

சிகாகோ : நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க அதிபராக ஒபாமா ஆற்றிய இறுதி உரையில் தெரிவித்துள்ளார். ஒபாமா தனது உரையின் போது கண்ணீர் சிந்தியது பலரையும் கலங்க வைத்தது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20 ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை ஒபாமா இன்று நிகழ்த்தினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடையே அவர் பேசுகையில், நீங்கள் என்னை சிறந்த மனிதனமாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றி உள்ளீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.
உங்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக உள்ளது. இந்த வளர்ச்சி போதாது. இன்னும் நாம் வளர வேண்டும். ஜனநாயகத்தின் மூலமே நமது வளர்ச்சியை அடைய முடியும். பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை திறமையானவர்களாக வளர்க்க வேண்டும். மக்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும். 8 ஆண்டுகளாக உங்களின் அதிபராக இருந்ததில் இதனை நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம். அடுத்த 10 நாட்களில் அமைதியான முறையில் தலைமை மாற்றம் இருக்கும். அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. சட்டங்கள் மட்டும் போதாது. மனங்கள் மாற வேண்டும். பயங்கரவாதம் அமெரிக்காவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலர், அவர் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீட்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது பேசிய ஒபாமா, ஆதரவாளர்களின் கோரிக்கைப்படி அடுத்த 4 ஆண்டுகள் அதிபராக இருக்க முடியாது. எனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது. அவர்களை என்றும் நான் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-ஜன-201715:04:17 IST Report Abuse
தமிழர்நீதி கொள்ளை ஒன்றுதான் வாழ்க்கை லெட்ச்சியம் என்று மதத்தை பிடித்துக்கொண்டு , ஜாதியில் ஒட்டிக்கொண்டு ,சொந்தம் பந்தம் உறவுக்காக ஆட்சி அமர்ந்து , வன்முறை வழியில் அரியணை ஏறும் அரசியல்வாதிகள் இருக்கும் உலகில் , சேவை செய்த திருப்தியுடன் வெள்ளை மாளிகை விட்டு வெளியேறும் ஒபாமா ஒரு மாமனிதர்தான் . நல்லோரை அரியணை ஏற்றும் அமெரிக்கர்கள் ஜனநாயகத்தின் மாதிரி மனிதர்கள்தான் .
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
11-ஜன-201714:12:32 IST Report Abuse
Amma_Priyan கிச்சு கிச்சு மூட்டிக்கோ...நெகிழ்ச்சி இன்னும் ஜாஸ்தியாகும்...டம்போ ...
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
11-ஜன-201713:56:10 IST Report Abuse
Nagaraj உழைப்பால் உயர்ந்த மனிதர் . மீதமுள்ள நாட்கள் நல்லவையாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
11-ஜன-201723:42:08 IST Report Abuse
ஏடு கொண்டலுஇவர் உழைப்புக்கு ஏதாவது உதாரணம் தரமுடியுமா? அதிபர்களின் அதிகம் golf விளையாடியவரும், அதிகம் vacation எடுத்தவரும், அதிகம் உளவுத்துறையினருடன் சந்திப்புக்களை தவிர்த்தவரும் இவர்தான். இதற்குப் பெயர் தான் உழைப்பா?...
Rate this:
Share this comment
Cancel
Valliappan - Chennai,இந்தியா
11-ஜன-201713:39:59 IST Report Abuse
Valliappan நல்ல பேச்சாளர். கண்ணியம் வாய்ந்தவர், மோடிஜியின் நண்பர். வாழ்க உங்கள் சேவை.
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
11-ஜன-201713:17:50 IST Report Abuse
Durai Ramamurthy கட்சி நேரத்தில் நடுநிலையாக நடந்துகொள்ளாமல், மக்களிடமிருந்து நன்மதிப்பை இழந்துவிட்டார். தற்போது தோல்வி முகத்துடன் வெற்று மனிதனாக விடைபெறுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
11-ஜன-201712:48:04 IST Report Abuse
vnatarajan ஒபாமா இந்தியாவை மட்டும் நேசிக்கவில்லை , அங்குள்ள இந்தியர்களுக்கு உயர்பதவி கொடுத்து அலங்கரித்தவர். வெள்ளைமாளிகையில் தீபாவளியை கொண்டாடியவர் UNO வில் செக்கூரிட்டி கௌன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கும் நியுகிலீர் சப்ளையர்ஸ் குரூப்பில் சேர்வதற்கும் ஆதரவு தெரிவித்தவர். ஆனால் சைனாவின் சதியால் அந்த ஆதரவை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அவருக்கு நாம் நன்றிதெரிவிக்கவேண்டும் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நமது வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
11-ஜன-201711:46:43 IST Report Abuse
Jayadev ஜனாதிபதி என்பவர் சாதாரண குடிமகன் தான் என பந்தா இல்லடா ஜனாதிபதி
Rate this:
Share this comment
Cancel
Anand Raghavan - chennai,இந்தியா
11-ஜன-201711:16:13 IST Report Abuse
Anand Raghavan என்ன செஞ்சான் இந்த ஒபாமா செத்த பாம்பை அடிச்சா மாதிரி ஒசாமாவை கிழவனானப்புறம் கொன்னான் . அங்யுகேம் இங்கேயும் கூத்துக்காரி மாறி ஒரு பொண்டாட்டியோட ஊர் சுத்தினான் அவ்வளவுதான் . வெள்ளை மாளிகையில் முதல் கருப்பன் அவ்வளவுதான் . உலகத்துல ஒரு பய அவனை மதிக்கல . அது மட்டுமல்ல ஊழல் ராணி ஹில்லாரியை எப்படியாவது அதிபராக்கணும்ன்னு துடிச்சான் . டிரம்பு வந்ததை ஜீரணிக்க முடியாம பேதி போயிண்டுருக்கான் . இவனுக்கு இரண்டாவது முறை கொடுத்ததே பெரிய தவறு
Rate this:
Share this comment
selvam - Chennai,இந்தியா
11-ஜன-201713:38:33 IST Report Abuse
selvamமுதலில் பொது வெளியில் நாகரீகமாக கருத்து வெளியிட கற்று கொள்ளுங்க.......
Rate this:
Share this comment
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-ஜன-201711:03:20 IST Report Abuse
THINAKAREN KARAMANI வழியனுப்பு விழா நிகழ்வில் திரு ஒபாமா அவர்களின் இறுதி உரையில் எந்தவித அலட்டலும் இல்லாத அடக்கமான அவரின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. பதவியிலிருந்து ஒய்வு பெற்றாலும் அமெரிக்க மக்களுக்கும், இந்த உலகமக்களுக்கும் நன்மை பயக்கும் பல காரியங்களை தொடர்ந்து செய்துவரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
11-ஜன-201710:47:16 IST Report Abuse
ஏடு கொண்டலு விட்டது பீடை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை