பொங்கல் பண்டிகையால் பூக்கள் விலை கடும் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையால் பூக்கள் விலை கடும் உயர்வு

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: பொங்கல் பண்டிகைக்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், பூக்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், சத்தியமங்கலம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, ஈரோடு பூ கமிஷன் மண்டிக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. நேற்று முன்தினம் வரை பூக்கள் விலை, மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில் நேற்று அனைத்து வகை பூக்கள் விலையும், திடீரென எகிறியது. நேற்று முன்தினம் கிலோ, 600 ரூபாய்க்கு விற்ற, குண்டு மல்லி, 800 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் ஊசிமல்லி, 400ல் இருந்து, 600 ரூபாய், ஜாதிமல்லி, 200ல் இருந்து, 400 ரூபாய், காக்கட்டான், 200ல் இருந்து, 400 ரூபாய், அரளி, 60ல் இருந்து, 120 ரூபாய், ரோஜா, 50ல் இருந்து, 100 ரூபாய், சம்பங்கி, 30ல் இருந்து, 50 ரூபாய், செவ்வரளி, 20ல் இருந்து, 50 ரூபாய், கேந்தி, 30ல் இருந்து, 50 ரூபாய், கோழிக்கொண்டை, 50ல் இருந்து, 80 ரூபாய் என எகிறியது.

இதுகுறித்து பூ கமிஷன் மண்டி உரிமையாளர் சாதிக்பாஷா கூறியதாவது: பொங்கல் பண்டிகையின் போது, பூ விலை உயர்வது வழக்கம். ஆனால், ஒரே நாளில் இரு மடங்கு உயர்வு இருக்காது. தேவை அதிகரித்த நிலையில், வரத்து குறைந்ததே இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை