ஒப்பந்த தொழிலாளர் 23 பேர் டிஸ்மிஸ்: பேச்சுவார்த்தை தோல்வியால் பரபரப்பு | Dinamalar
Advertisement
ஒப்பந்த தொழிலாளர் 23 பேர் டிஸ்மிஸ்: பேச்சுவார்த்தை தோல்வியால் பரபரப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ஒப்பந்த தொழிலாளர்கள் டிஸ்மிஸ் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது.


பணி நிரந்தரம், பணி எண் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் அரசு ஒப்பந்த போக்குவரத்து தொழிலாளர்கள், காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், எதிர்கட்சிகளுக்கு பிரச்னைகளை பேச வாய்ப்பு அளிக்க கூடாது என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட, 263 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அன்றிரவே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கும் திரும்பினர். அதேசமயம், 23 பேரை டிஸ்மிஸ் செய்து, போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.


இதற்கிடையில் ஒப்பந்த தொழிலாளர் போராட்ட குழுவினரிடம், நிர்வாக தரப்பில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டம் நடத்திய நான்கு நாட்களை, பணி நாளாக ஏற்று பதிவு செய்ய வேண்டும். டிஸ்மிஸ் செய்த, 23 பேரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போக்குவரத்து அமைச்சரின் கவனத்துக்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும் என்று, நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், முடிவு எட்டாமல் கூட்டம் முடிந்தது. இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறியதாவது: டிஸ்மிஸ் செய்த, 23 பேரை மீண்டும் அதே சீனியாரிட்டியில் பணிக்கு அழைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், 10 நாட்களுக்கு பின் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்