நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிதிநிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்

Added : ஜன 11, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் பர்கூரில், நிதி நிறுவனம் நடத்தி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்டோர், எஸ்.பி, மற்றும் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த, 2004 முதல் சினர்ஜி லைப் என்ற பெயரிலும், 2010 முதல் எஸ்.ஏ.பி.எல் என்ற பெயரிலும், பொதுத்துறை நிதி நிறுவனம் என்று கூறி, கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தில், நாங்கள் பணம் செலுத்தினோம். ஒன்றரை ஆண்டுகளில் முதிர்வு தொகை வழங்குவதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பயன் அடைந்துள்ளதாகவும், அந்த நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும், 37 கிளைகளின் மேலாளர்கள் கூறினர். அதை நம்பி, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், 5,000 முகவர்களிடம் பணத்தை செலுத்தி வந்தோம். கடந்த, 2015 ஜூன் மாதத்துக்கு முன் வரை ஒழுங்காக முதிர்வு தொகை வழங்கினர். கடந்த, 2015 ஜூலை முதல், கடந்த, 19 மாதங்களாக பணத்தை கொடுக்காமல், 100 கோடிக்கும் மேல் ஏமாற்றிவிட்டு, அதன் நிறுவனர் தலைமறைவாக உள்ளார். ஏமாற்றிய பணத்தை கொண்டு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக கருதுகிறோம். கடந்த, 19 மாதங்களாக, மிக குறைந்த வாய்தாக்களில் பணம் தருவதாக இந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மதிவாணன், பல முறை அறிவித்து விட்டு, இதுவரை பணம் தரவில்லை. எங்களை ஏமாற்றி வரும் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மீதும், நிறுவனம் மீதும் உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இதே நிறுவனத்தினர், கடந்த மாதம், பர்கூரில் நிதிநிறுவனம் நடத்தி, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து விட்டு, நிறுவனத்தை மூடிவிட்டதாக, முகவர்கள் வீட்டை, பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை