ஓசூர் அருகே 25 வயது பெண் யானை சுட்டுக்கொலை: இருவர் கைது: தலைமறைவான மூன்று பேருக்கு வலை| Dinamalar

ஓசூர் அருகே 25 வயது பெண் யானை சுட்டுக்கொலை: இருவர் கைது: தலைமறைவான மூன்று பேருக்கு வலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய நிலத்திற்குள் புகுந்த, 25 வயது பெண் யானை சுட்டு கொல்லப்பட்டது. இது தொடர்பாக, இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், மூன்று பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட, தமிழக - கர்நாடக எல்லையில், உளிபண்டா கிராமம் உள்ளது. ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் இருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி உள்ளதால், யானைகள் அடிக்கடி உளிபண்டா கிராமத்திற்குள் வந்து செல்லும். உளிபண்டா கிராமத்தில், ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தக்காளி, அவரை சாகுபடி செய்திருந்த சின்னபையன், 45, என்பவரது தோட்டத்திற்குள், நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு, நான்கு காட்டு யானைகள் புகுந்தன. அவற்றை பார்த்து நாய்கள் குரைத்தன. விவசாய நிலத்தில் ராகி பயிர் அடுக்கி வைத்திருந்த குடிசையை நோக்கி யானைகள் சென்றன. அங்கு காவலுக்கு இருந்த அப்பகுதியை சேர்ந்த பசவராஜ், 45, குடிசைக்குள் யானைகள் புகுந்து விடும் என பயந்து, தன்னிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால், யானைகளை நோக்கி சுட்டார். இதில், 25 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் தலையில் இரு குண்டுகள் பாய்ந்தது; சுருண்டு விழுந்து இறந்தது. மற்ற, மூன்று யானைகள் வனப்பகுதிக்குள் ஓடி விட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாடக்கல் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ஆசீஸ் வத்சவா, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஓசூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜ், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர், இறந்த யானையை பார்வையிட்டனர். தேன்கனிக்கோட்டை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில், யானை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதன் தலையில் இருந்த இரு குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டன. பின், விவசாய நிலத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, யானை புதைக்கப்பட்டது. யானையை சுட்டு கொன்ற பசவராஜூடன் இருந்த, உளிபண்டா பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, 45, மாதேஷ், 45, ஆகிய, இரு விவசாயிகளை, வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பசவராஜ், சின்னபையன், சென்னீரான் ஆகியோரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

நான்கு ஆண்டுகளில் 14 யானைகள் பலி: ஓசூர் வனக்கோட்டத்தில், கடந்த, 2013 பிப்., 4ல், கெலமங்கலம் - ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, ரயிலில் அடிபட்டு, இரண்டு யானைகள் இறந்தன. அதே ஆண்டு மே, 20ல், தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் ஏரி அருகே, மின்சாரம் தாக்கி, இரு யானைகள் இறந்தன. அக்., 14ல், தக்கட்டி வனப்பகுதியில், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி, ஒரு ஆண் யானையும், 2014 மார்ச், 12ல், ஜவளகிரி வனப்பகுதியில், சேற்று நீரை குடித்து, இரண்டு வயது யானையும், ஜூலை, 8ல், கிருஷ்ணகிரி வனக்கோட்டம், மகராஜாகடை வனப்பகுதியில், சேற்று நீரை குடித்து, ஒரு ஆண் யானையும் இறந்தது. ஓசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில், ஆக., 17ல், இரு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. செப்., 15ல், கெம்பக்கரை வனப்பகுதியில் சேற்று நீரை குடித்து, ஒரு யானையும், நவ., 24ல், அய்யூர் காப்பு காட்டில், மின்சாரம் தாக்கி மக்னா யானையும் இறந்தது. 2015 பிப்., 3 இரவு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கோபசந்திரம் அருகே, காரில் அடிப்பட்டு, இரண்டு வயது பெண் யானை இறந்தது. கடந்த, 2016 ஜூலை, 4ல், அரசு பஸ் மோதி மக்னா யானை உயிரிழந்தது. அதன் பின், யானை உயிர் பலி இல்லாமல் இருந்த நிலையில், நேற்று யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.