ஆத்தூரில் பருத்தி ஏலம்: ரூ. 88 லட்சத்துக்கு வர்த்தகம்| Dinamalar

ஆத்தூரில் பருத்தி ஏலம்: ரூ. 88 லட்சத்துக்கு வர்த்தகம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 88 லட்சம் ரூபாய்க்கு, பருத்தி ஏலம் நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி, மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த, பருத்தி ஏலத்துக்கு, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர் பகுதி விவசாயிகள் மட்டுமின்றி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த, 500 விவசாயிகள், 4,000 பருத்தி மூட்டைகளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், ஆத்தூர், திருப்பூர், கோவை, கும்பகோணம் பகுதியை சேர்ந்த, 30 வியாபாரிகள், பருத்தி விலை நிர்ணயம் செய்தனர். அதன்படி, பி.டி., ரகம் பருத்தி குவிண்டால், அதிகபட்சமாக, 6,050 ரூபாய், குறைந்தபட்சம், 5,950 ரூபாய், டி.சி.ஹெச்., ரகம் குவிண்டால் அதிகபட்சம், 7,100 ரூபாய், குறைந்தபட்சம், 6,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 4,000 பருத்தி மூட்டைகள் மூலம், 88 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த, 2ல் நடந்த பருத்தி ஏலத்தை விட, நேற்று நடந்த ஏலத்தில், பி.டி., ரகம் குவிண்டாலுக்கு, 563 ரூபாய், டி.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டாலுக்கு, 343 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.